தலைப்பு

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பிரபல பாடகர் ஹொன்னப்ப பாகவதருக்கு காணாமல் போன சிருஷ்டி நெக்லஸை மீண்டும் வரவழைத்த சாயி அற்புதம்!

ஹொன்னப்ப பாகவதர் (1915 -1992), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கருநாடக இசை மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர். நல்ல உடல் வளமும் குரல் வளமும் கொண்ட இவர் தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர், சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.


இறைவன் ஸ்ரீ சத்யசாயி பக்தராயிருப்பதற்கு கொடுப்பினை வேண்டும். இன்னும் அவரின் ஆழமான பக்தராவதற்கு படிப்பினை வேண்டும்.. அப்படிப்பட்ட படிப்பினையை சிருஷ்டியோடு சொல்லிக் கொடுப்பதே சுவாமியின் மகத்துவம் அத்தகைய அற்புதப் பதிவு இதோ...  

தஸரா சமயத்தில் ப்ரசாந்தி நிலயத்தில் கொண்டாட்டங்கள் கலை கட்டின, புட்டபர்த்திக்கு வந்து வேத விற்பன்னர்கள், தங்களது திறமைகளை வெளிப்படுத்திச் செல்வது வழக்கம். பாபா சம்பிரதாயமான சம்பாஷனைகளுடன் அவர்களை கௌரவித்து வழியனுப்புவார். சங்கீத விற்பன்னர்களும் கூட பகவானின் திவ்ய ஸன்னிதியில் அமர்ந்து பாட்டிசைத்து மகிழ்வார்கள். பாபா ரசித்துக் கேட்டு, இறை பக்தி பாட்டின் மூலமாக ஆத்மார்த்தமாக பிரதிபலிப்பதைக் கேட்டு மகிழ்வார். ராக ஆலாபனை, கீர்த்தனைகளை ரசிப்பார்.      


ஒருமுறை பெங்களூரிலிருந்து மிகப் பிரபலமான வாய்ப்பாட்டு கலைஞரான ஹொன்னப்ப பாகவதர்  வந்து பாடிக் கொண்டு இருந்தார். பாபா தனது வெள்ளி நாற்காலியில் இருந்து எழுந்து வந்து, மேடையில் கலைஞர்களோடு சேர்ந்து அமர்ந்து கொண்டு கச்சேரியை ரசித்துக் கொண்டிருந்தார். பிறகு ஒரு தங்க நெக்லஸை வர வழைத்து, கச்சேரி முடிந்ததும் தானே தனது கரங்களால் பாகவதருக்கு அணிவித்தார்!. திரும்ப ஊருக்கு செல்லும் வழியில் பாகவதரும், நண்பர்களும் அந்த தங்க நெக்லஸ் என்ன கேரட் இருக்கும், என்ன மதிப்பு பெறும் என்றெல்லாம் பேசிக் கொண்டு சென்றனர். விரைவில் மழை வெள்ள நீர் சாலையில் பெருகி  போக்குவரத்தை தடுத்து விட்டது. இரவு வண்டியிலேயே தங்கி விட்டு காலை புறப்பட முடிவு செய்தனர்.       

   

ஹோன்னப்ப பாகவதருடைய நெக்லஸ் திடீரென காணவில்லை, எங்கு தேடியும் கிடைக்கவில்லை. புட்டபர்த்திக்குத் திரும்பிச் சென்று பகவானிடம் மன்னிப்புக் கோர முடிவு செய்தார் பாகவதர்!.

இவர் புட்டபர்த்தி போய் சேருமுன்பாகவே, சுவாமி கஸ்தூரி அவர்களிடம்,தொலைந்து போன நெக்லஸ் பற்றி முழு விரங்களையும் சொல்லிவிட்டார். பாகவதர் பாபாவிடம் வந்து செய்வதறியாது ஒரு தூணில் சாய்ந்து அழலானார். பாபா அருகில் வந்ததும் மடைதிறந்த வெள்ளம் போல் அழுது தீர்த்தார்.        


பாபா அவரை தட்டிக் கொடுத்து, “நீ செய்ததில் தவறு ஒன்றும் இல்லை எல்லோருக்கும் ஏற்படும் சந்தேகம் தான் உங்களுக்கும் ஏற்பட்டுள்ளது! உங்கள் நண்பர்கள் வேறு உங்களை தூண்டி விட்டனர் என சொல்லிக் கொண்டே நான் ஒன்று உண்டாக்கினால் அது எனதில் ஒரு பகுதி, மீண்டும் என்னையே வந்தடையும்”, எனக் கூறி மீண்டும் அதே நெக்லஸை தன் கரங்களை அசைத்து வரவழைத்து, இம்முறை ஒரு பெண்டண்டும் சேர்த்து அதைக் கொடுத்தார்!!


ஆதாரம்: Loving God – P 201

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

🌻 தன்னிலிருந்தே ஒரு பகுதியை சிருஷ்டிக்கிறேன் என்கிறார் சுவாமி. இந்தப் பிரபஞ்சமே அப்படிப்பட்ட சுவாமி சிருஷ்டி தான்! அதில் ஜீவராசிகளாகிய நாமும் அவருடையே சிருஷ்டியே! அவரிடமிருந்து பிறந்து.. மீண்டும் மீண்டும் பிறக்காமல் இறுதியில் அவரிடமே கலப்பதற்கான சுழற்சி முடிவையே மனித வாழ்வாக நாம் கொள்வோமாக! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக