தலைப்பு

புதன், 28 அக்டோபர், 2020

அமெரிக்கா டாக்டர் கடிதம் கொடுத்த அந்நொடியே அவரின் சகோதரரை காப்பாற்றிய சாயி கருணை!

Dr. Venkat Kanubaddi · Retd. Chief of Anesthesthesiology at VA Medical Center, Fort Wayne, USA.

இறைவன் ஸ்ரீ சத்யசாயி வாங்கும் கடிதங்கள் எல்லாம் பிறகு அவர் சாவகாசமாக இருக்கையில் படித்துப் பார்ப்பதற்காக அல்ல.. சுவாமி அறியாதது ஏதுமில்லை.. கர்ம நிவர்த்தி தர வேண்டுமெனில் தரிசிக்க வந்தவர்களிடமிருந்து கடிதம் வாங்குகிறார். இல்லையேல் அவர்களை மேலும் காத்திருக்க வைக்கிறார் என்ற பரம சத்தியத்தை உணர்த்தும் அற்புதமான அனுபவம் இதோ...
   
USAவின் பிரபல VA மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் மயக்க மருந்தியல் துறையின் முன்னாள் தலைமை மருத்துவராக பணிபுரிந்த Dr. வெங்கட் கனுபாதி அவர்களின் சத்ய சாயி அனுபவம்... 

Dr. வெங்கட் கனுபாதி ஒரு தீவிரமான சத்யசாயி பக்தர் ஆவார். August 1998ல் 40வயது மதிக்கத்தக்க டாக்டர் அவர்களின் சகோதரருக்கு மிகத்தீவிரமான இதய பாதிப்பு ஏற்பட்டது. உடனே அவரை Dr. வெங்கட் கனுபாதி தான் பணிபுரியும் மருத்துவமனையின் அவசரப் பிரிவில் சகோதரரை அட்மிட் செய்து பின்னர் அறுவை சிகிச்சையை தொடங்கினார்கள். அறுவை சிகிச்சை நீண்ட நேரம் நடந்தது. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டிருந்தது, மறுநாள் காலையில் கூட கருவியை எடுக்க இயலாத நிலை! ஏனெனில் மூச்சு விடுவதில் கஷ்டம்! நீண்ட நாள் வெண்டிலேஷனில் வைக்க வேண்டியிருந்தது! மேலும் சிறுநீரகம், மலக்குடல், மூளை எல்லாமே பழுதாகியிருந்த நிலையில் அவர் உயிர் பிழைத்தாலுமே பழைய நினைவுகளோடு இருப்பாரா? தெரியவில்லை!                
     

                                                                                               
மருத்துவ ரீதியாக அனைத்து முயற்சிகளும் செய்து பின்னர் சுவாமியால் தான் காப்பாற்றமுடியும் என தீர்க்கமாக நம்பிய அவர்.. உடனே கிளம்பி புட்டபர்த்தி வந்தடைந்தார். சுவாமியின் தரிசனத்தின்போது அவர் சகோதரரின் உடல் நிலைப் பற்றி விவரமாக கடிதம் எழுதி பகவான் கையில் கொடுத்தார். சுவாமியும் அக்கடிதத்தை வாங்கிக்கொண்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டார். சுவாமி கடிதத்தை வாங்கிக் கொண்டதே பெரிய ஆசியாக Dr. வெங்கட் கனுபாதி நினைத்தார்.மறுநாள் காலை USA Fort Wayneவில் உள்ள அவரது மருத்துவமனைக்கு தொலைபேசியில் அவரின் சகோதரரின் உடல் நிலை பற்றி விசாரித்தார். நீங்கள் அன்று எப்படி பார்த்தீர்களோ அதே மோசமான நிலையில் தான் இருந்தார். ஆனால் திடீரென அவருடைய உடல் நலம் தேற ஆரம்பித்தது என்று அவர்கள் சொன்னவுடன்.. எந்த நேரம் என மருத்துவர் விசாரிக்க.. அது அவர் சுவாமியிடம் கடிதம் கொடுத்த அதே நேரமாக இருக்க மருத்துவர் சுவாமியின் கருணை குறித்து ஆனந்தம் அடைந்தார். 4,5 நாட்களில் டாக்டர் மீண்டும் USA திரும்பினர். ஆஸ்பத்ரியில் இவரையும், தனது குடும்பத்தாரையும் அடையாளம் கண்டு, நோயாளியான டாக்டரின் சகோதரர் பேசினார். அடுத்த 3 வாரங்களில் நன்கு சாப்பிட ஆரம்பித்தார், எல்லா உறுப்புகளும் தானாக இயங்க ஆரம்பித்தன! அனைத்து முக்கிய உறுப்புக்களும் பழுதடைந்து, இதய சிகிச்சையும் நடந்து, மீண்டு வந்தது சாயி பகவானின் கருணை உட்புகுந்ததால் தான் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?.

ஆதாரம்: Dr. Venkat Kanubaddi, Inspired medicine – P 140.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻 சுவாமி விரல் தொடும் எந்த ஒரு தூசி துரும்பும் மிக மிக விசேஷம் பெற்றுவிடுகின்றன... அவர் விழி தொடும் மாத்திரத்திலேயே ஈரேழு பிறவி பாவங்களும் கரைந்துவிடுகின்றன.. கர்மாவை சுமந்து வரும் பக்தி விடு தூதுகளே கடிதங்கள். அவரவர் கர்மாவை அனுசரித்து அதை அவர் பெற்று அதனை கரைப்பதில் கண்களே கரைந்து சுவாமியின் காலடியை நதியாய் நனைகின்றது! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக