தலைப்பு

வியாழன், 1 அக்டோபர், 2020

காயத்ரி மந்திரம் ஆபத்தினையும் விபத்தினையும் தடுக்கும் என்கிறார் சுவாமி!

Power of the Gayatri Mantra is beyond imagination

மந்திரம் வேறு மகிமை வேறல்ல.. மந்திரமே மகிமை எனும் சத்தியத்தில் வேரூன்ற இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே வேத ரூபம். அந்த வேத ரூபம் சிந்தும் நாத தீபத்தின் முக்கியத்துவம் குறித்த உன்னத பதிவு இதோ...


1985-ல், Dr. விஜய் குமார் மற்றும் சிலர் பகவானுடன் பேட்டியறையில் இருந்தனர். அங்கிருந்த அனைவரிடமும் ஸ்வாமி பேசினார். இருப்பினும் ஒரு தாயின் மடியில் அமர்ந்திருந்த ஆறு வயது பெண் குழ்ந்தையுடன் பேசுவதில் பகவான் அதிக ஆர்வம் காட்டினார். அக்குழந்தை ஸ்வாமியிடம் அடிக்கடி பல கேள்விகளை கேட்டுக்கொண்டே இருந்தது. பகவானும் அனைத்து கேள்விகளுக்கும் மிகுந்த பொறுமையுடனும் அன்புடனும் பதிலளித்துக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து, ஸ்வாமி அப்பெண்ணுக்கு தனது புகைபடம் ஒன்றினை பரிசளித்தார். இப்போது, அப்பெண் அப்படத்தினை பெரிய ஃப்ரேம் போட்டு சுவரில் மாட்டுவதா அல்லது சிறிய டேபிள் டாப் ஃப்ரேம் போடுவதா என அறிய விரும்பினாள்.


“சின்ன டேபிள் டாப் ஃப்ரேம் போடு..” என ஸ்வாமி பதிலளித்தார். “ஸ்வாமி, இதனை எங்கே வைத்துக்கொள்ள? இதனை எனது படுக்கை அறையில் வைத்துக் கொள்ளவா அல்லது முன் அறையில் வைத்துக்கொள்ளவா?” என கேட்டாள். ஸ்வாமி, “குழந்தே, உங்கள் வீட்டில் சூரிய ஒளி படக்கூடிய சன்னல் மேடையில் வைத்துக் கொள். அப்போதுதான் உன்னால் முன் அறையில் இருந்தும், படிக்கும் டேபிளில் இருந்தும் பார்க்க முடியும்.” எனக் கூறி தனது எங்கும் நிறைத்தன்மையை வெளிப்படுத்தினார்.

இவ்வாறாக அந்த உரையாடல் நீண்டுக்கொண்டே போனது. விரைவில் பகவானின் முழுக்கவனமும் அக்குழந்தையிடமே குவிந்தது. இந்நிகழ்வு நடந்த நேரம் முழுவதும் அக்குழந்தையின் தாய் அடக்க இயலாத அளவில் அமைதியாக அழுதுக்கொண்டே

இருந்தார். ஸ்வாமியும் அவ்வழுகையை நிறுத்தாமல் அனுமதித்தார். பேட்டி அறையில் இருந்த அனைவரும் இந்த நிகழ்வினை பார்த்து அதிசயித்தனர், ஏன் அந்தப் பெண்மணி அழுகிறார் என்பதை அறியாமல் திகைத்தனர்.


ஏர் இந்தியா கனிஷ்கா

அனைவருக்கும் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்க, ஸ்வாமி மிருதுவான குரலில் அக்குழந்தையின் தந்தை ‘ஏர் இந்தியா கனிஷ்கா’வில் பயணம் செய்தவர் என தெரிவித்தார்.

தீவிரவாத தாக்குதலில் வான்வெளியில் வெடிவைத்து தகர்க்கப்பட்ட, கனடாவில் இருந்து இந்தியாவுக்கு வந்த ஏர் இந்திய விமானத்தில் அக்குழந்தையின் தந்தை சிக்கி இறந்துவிட்டார் என்பதை அறிந்தனர். அவ்விழப்பினை ஈடு செய்யும் வகையில்தான் பகவான் தனது தெய்வீக அன்பினை அக்குழந்தையிடம் பொழிந்து கொண்டிருந்தார் என்பது சந்தேகமில்லாமல் விளங்கியது. ஸ்வாமி விபூதியும் வரவழைத்து அக்குழந்தைக்கு கொடுத்தார்.


பேட்டியின் நிறைவில் ஸ்வாமி Dr. விஜய் குமார் பக்கம் திரும்பி அவரிடம் உண்மை நிலவரத்தை உரைத்தார். “’கனிஷ்கா’வில் 250-க்கும் அதிகமானோர் இருந்தனர். அதில் எவராவது ஒருவர் காயத்ரி மந்திரத்தை உச்சரித்திருந்தால்கூட அந்த விபத்தினை தவிர்திருக்கலாம்.”

பேட்டி அறையில் இருந்த அனைவரும் ஸ்வாமியின் அந்த வார்தைகளில் இருந்த ஆழத்தினை கிரக்கித்தபடி அமைதியாக அமர்திருந்தனர்.


ஆதாரம்: https://aravindb1982.blogspot.com/2018/01/power-of-gayatri-mantra-is-beyond-belief.html?m=0

Air India Kanishka விபத்தினை பற்றி முழுமையாக அறிய: 

https://en.m.wikipedia.org/wiki/Air_India_Flight_182

பகவானின் தெய்வீக குரலில் 'காயத்ரி மஹாமந்திரம்'

Download link: https://drive.google.com/file/d/1J7Fo1aOZ-HwmSwY4UMNe0R-V1G3UZ8cO/view?usp=drivesdk 


🌻 இறைவன் ஸ்ரீ சத்ய சாயி உச்சரித்து கூடுதல் தெய்வீகத்தன்மை தந்த காயத்ரி மந்திரத்தை அனைவரும் ஜாதி/மத/தேச/இன பேதமின்றி உச்சரித்து சுவாமியின் பாதுகாப்பையும் .. பரிவையும்.. பராமரிப்பையும் அடைவோமாக! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக