தலைப்பு

வியாழன், 1 அக்டோபர், 2020

சத்ய சாயி பக்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஒரு வேளை ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதை அணுகுவது?

கொரோனா தொற்று இந்த சூழலில் பலருக்கும் பரவி வருவது உண்மையே !

தற்காப்புக்காக சுவாமி விபூதியை தினந்தோறும் உட்கொள்வது.. அணிவது.. தொண்டை மேல் தடவுவது என தினசரி செய்ய வேண்டும்.

சில பக்தர்களுக்கு அவரவர் கர்ம வினைப் படி கொரோனா நோய் தொற்று ஏற்பட்டால்  என்ன செய்ய வேண்டுமெனில்..

பயத்தை முதலில் விட வேண்டும்.

பொதுவாக பதட்டமே நோய்களை இன்னும் வேகமாக செயல்படுத்தும் .

பயப்படும் போதும் / பதட்டம் அடையும் போதும் உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியான WBC (white blood cells) வெள்ளை அணுக்கள் செயல்பட முடியாமல் திணறும்.

கவலை அடைந்தாலும் .. எந்தவிதமான எதிர்மறை எண்ணங்களை மேற்கொண்டாலும் அதன் செயல்பாடு தடுமாறும். ஆகவே நோய் தொற்று வந்தவர்கள் தைரியமாக இருக்க வேண்டும்.

உங்கள் அக்கம் பக்கத்தினருக்கு வந்தாலும் அவர்களின் குடும்பத்திற்கும் இதையே அறிவுறுத்த வேண்டும்.

மருத்துவமனையில் தனியாக சிகிச்சை பெற வேண்டுமே எனும் தனிமை பயம் கூடாது.

இறைவன் சத்ய சாயி பக்தர்கள் தனியாக இருக்க வாய்ப்பே இல்லை. 

எப்போதும் இறைவன் சத்ய சாயி கூடவே இருக்கிறார்.

இது வெறும் வாய்ச்சொல்லோ / வெற்று வேதாந்த ஆறுதலோ இல்லை.

அனுபவ சத்தியம்.

மருத்துவர் பரிந்துரைக்கும் சத்தான உணவையும்.. சில நோய் எதிர்ப்பு மாத்திரைகளை எடுத்துக் கொண்டாலும் இவை எல்லாம் உடம்புக்குத் தான்.

அலோபதி மருந்து உடல் வரையே வேலை செய்யும். 

மனதிற்கு சாயி நாமமே மருந்தாக கொள்ள வேண்டும். 

விபூதி அணிவதையும் / உட்கொள்வதையும் மறக்கவே கூடாது.

மருத்துவ மனையில் நிறைய நேரம் தனியாகவே இருக்க வேண்டும் என்கிற படியால் சுவாமி பஜனையை / வேத மந்திரங்களை கண்களை மூடி காதுகளால் கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.

அய்யய்யோ என்ன நேர்ந்துவிடுமோ என்கிற நினைப்பே நடக்கையில் தடுமாற்றம் .. தள்ளாட்டம் ஏற்படுத்தும்!

சுவாமி இருக்கிறார் என்கிற எண்ணத்தையே உறுதியோடு அதை மட்டுமே இறுதியாகப் பற்ற வேண்டும்.

உங்களை யாரேனும் பயம் அடையச் செய்தாலும் அதை மனதிற்குள் போடாமல் சுவாமியின் திருமுகத்தையும்/ திரு நாமத்தையுமே நினைக்க வேண்டும்.

இது பக்திக்காக கர்மா விடுக்கின்ற சோதனை என்றே எடுத்துக் கொண்டு பதறாமல்/ பயப்படாமல் அதில் இருந்து வெளியே வாருங்கள்.

சுவாமியிடம் சொல்லாதீர்கள்

அய்யய்யோ கொரேனா வந்துவிட்டது என..

அந்த கொரோனாவிடம் மனதிற்குள் சொல்லுங்கள் இதோ சுவாமி வந்துவிட்டார் என...

சுவாமி பக்தர்களுக்கு சோதனை நடக்கலாம் ஆனால் சோர்தலும் சுணங்குதலும் நடக்கவே நடக்காது.

சில சத்ய சாயி பக்தர்களுக்கு கொரோனா எனும் கோவிட் 19 தொற்று 

மூன்று விதங்களில் வரலாம்.

சாதாரண நிலை தொற்று.. மிதமான தொற்று.. தீவிரமான தொற்று..

மூன்றிலும் நாம் முதலில் விட வேண்டியது பயமே!

இது சுவாமி கொடுத்த உடல் அவர் கவனித்துக் கொள்வார் என்ற சத்தியப் புரிதலும்.. தீவிர பக்தியும் வேண்டும்.

சிலர் கர்ம வசத்தால் இறந்தும் போகலாம்.

ஆயுள் என்பது இறைவன் சத்ய சாயி கையில் மட்டுமே எனப் புரிந்துணர வேண்டும்.

இறப்பவர்களுக்கு அடுத்த பிறவி இதை விட மேன்மையானதாக சுவாமி அமைக்கலாம். மரணம் மிகவும் சூட்சுமமானது.

பலருக்கு நெருங்கிய உறவு மரணித்தால் சுவாமி மேல் போகக் கூடிய பக்தி எப்படி முழுமையான பக்தியாக இருக்க முடியும்?

மரணம் இந்த உடலுக்கே .. மனதிற்கல்ல...

இறைவன் சத்ய சாயி எதை இந்த பூமியிலும் வாழ்க்கையிலும் சங்கல்பிக்கிறாரோ அதுவே.. அது மட்டுமே அன்றாடம் நிகழ்கிறது.

இதை விருப்பு வெறுப்பின்றி அணுகுவதே அவரின் சிறந்த பக்தராக நம்மை மேம்படுத்தும்!

  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக