இறைவன் ஸ்ரீ சத்யசாயியை வழிபடுவது ஒன்றே வாழ்க்கைப் பயணத்திற்கான பாதுகாப்பு.. சுவாசப் பயணத்திற்கான ஆரோக்கியம்.. மனப் பயணத்திற்கான இலக்கு என்பதை உணர்த்தும் அதி அற்புதப் பதிவு இதோ...
NB என்பவர் மிகப் பிரபலமான உலகெங்கும் கச்சேரிகள் நடத்தி வந்த பக்தர். அவர் சங்கீத பரம்பரையில் வந்தவர்; தனது துறையில் மிகச் சிறந்து விளங்கினார்! அவர் மாஸ்கோவிலிருந்து St. பீட்ஸ்பர்க்கிற்கு ஒரு கச்சேரிக்காக புறப்படும் பொழுது இச்சம்பவம் நடந்தது! அவரது சக கலைஞரான ஒரு சிதார் இசைக் கலைஞரும் சேர்ந்து பயணப்பட்டனர். ஆளுக்கு 30 கிலோ மட்டுமே லக்கேஜ் அனுமதி, இருவரது லக்கேஜும் சேர்ந்து 54 கிலோதான் இருந்தது. தைரியமாகப் புறப்பட்னர். ஆனால் செக்கின் கௌண்டரில் (Check – in counter) 72 கிலோ காண்பித்தது. 18 கிலோ அதிகப்படி லக்கேஜுக்கு தொகை செலுத்த வேண்டும் என்றனர். கிளம்பிய பிறகு நண்பர் அதிகப்படி லக்கேஜு எதுவும் சேர்க்கவில்லை என உறுதியாகக் கூறினார்.
அந்த எடை பார்க்கும் எந்திரத்தில் கோளாறு இருக்கலாம் என வேறு கௌண்டருக்குச் சென்று எடை போட்டால் 91 கிலோ காண்பித்தது! மீண்டும் முந்தைய கௌண்டருக்கே சென்றனர். ஆனால் அங்கு இந்தத்தடவை 108 கிலோ காண்பித்தது, நேரம் ஓடிக் கொண்டிருந்தது. திடீரென பாபாவைக் கும்பிடாமல் கிளம்பியது நினைவு வர, அவரது ஃபோட்டோ ஒன்றை வெளியே எடுத்து, அதை எந்திரத்தின் மீது வைத்துவிட்டு, லக்கேஜு- ஐ வைத்து எடை போட்டால் இப்பொழுது உடனே கை மேல் பலன் என்பது போல் சரியான எடையைக் காண்பித்தது! மற்ற விவரங்களை நிறைவு செய்து, 2 நிமிடங்களில் இவர்களது boarding pass கொடுக்கப்பட்டு, பிரயாணத்திற்கு விரையுமாறு அறிவிப்பு வந்தது.
NB உணர்ந்து கொண்டார்:- நம் விஷமக்கார பகவான் தான் தனது ஆசி அவர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துவதற்காக விளையாடி இருக்கிறார்! எப்பொழுது பக்தர்களுக்கு முன்னும், பின்னும், சுற்றியும் காத்துக் கொண்டே இருப்பதை அவ்வப்போது நினைவு படுத்துகிறார்.
ஆதாரம்: NB, Personal Narration.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.
🌻 சுவாமியை வணங்கிய பிறகே .. அவரை வழிபட்ட பிறகே நமது செயல்களை துவங்க வேண்டும். அப்போதே துவங்கியது எதுவும் துலங்கும் என்பதற்கான மகிமையில் எத்தனை சத்தியம் பொதிந்திருக்கிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக