தலைப்பு

வியாழன், 29 அக்டோபர், 2020

ஆடம்பர விருந்திற்கு செல்லாமல் அழையா விருந்தாளியாக ஏழை வீட்டில் உணவருந்திய சாயி தயாளன்!

இறைவன் ஸ்ரீ சத்யசாயி விரும்புவது நமது ஆடம்பர வழிபாட்டையோ... விமர்சையான விருந்தையோ ... பரிசுப் பொருட்களையோ அல்ல...நம் ஒரு துளி கண்ணீர் / ஒரே ஒரு துளசி இலை அதுவே அவருக்கு பரம திருப்தி தருகிறது என்பதை சுட்டிக் காட்டும் பரம கருணை வாய்ந்த தயாசாகர பதிவு இதோ... 

  

ஒருமுறை பாபா பம்பாய் சென்றிருந்த பொழுது, மிகப் பெரிய ஆடம்பரமான ஒரு இடத்தில் வெகு விமரிசையாக ஒரு விருந்து பாபாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் பாபாவோ காரை, தான் சொல்லும் இடத்திற்கு ஓட்டச் சொல்லிவிட்டார். பல தெருக்களையும் சந்துகளையும் கடந்து, ஏழைகள் வசிக்கும் ஓர் இடத்திற்குச் சென்று 4 மாடிகள் ஏறி ஒரு வீட்டின் கதவைத் தட்டினார் பகவான்!!.      


கதவைத் திறந்தவர் வாயடைத்து நின்று விட்டார். “பகவான்! நான் காண்பது நிஜமா? கனவா? நீங்கள் என் வீட்டிற்கு வர வேண்டும் என்று, மனதின் தீராத ஆசை இன்று நிறைவேறிவிட்டதா?  பம்பாயில் பெரிய பெரியவர்களெல்லாம் காத்துக்கிடக்க தங்கள் பாத கமலங்கள் இந்த ஏழையின் வீட்டில் வந்துள்ளனவே!“ என வியந்தார்.


“நான் வந்தது மட்டுமல்ல! இரவு உணவை இங்கு தான் உண்ணப்போகிறேன். எனக்கு சாப்பாடு போடுவதில் உனக்கு ஆவல் இல்லையா?” எனக் கேட்டு, உணவு தயாராகும் வரை அங்கிருந்த ஒரு படுக்கை விரிப்பில் அமர்ந்திருந்து காத்துக்கொண்டிருந்தார்! சாப்பிட்டுவிட்டு, சம்பிரதாயமாக தாம்பூலமும் போட்டுக் கொண்டார்!. தாம்பூலம் தரித்து சிவந்த வாயுடன் இன்னும் பளிச்சென்று பாபா தோற்றமளித்தார், குடும்பத்தினர் அனைவருடனும் இயல்பாக அளவளாவினார்.

ஆதாரம்: Baba Sathya Sai. Part 1, P200.

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.         

🌻 அன்பு இதயம் கொண்ட அன்பு இறைவன், வாய் திறந்து அழைப்பு விடுக்க வேண்டுமென எதிர்பார்க்கவில்லை. உளமாற அழைக்கும் பக்தர்களைக் கண்டு கொண்டு தானே செல்கிறார்!. அப்படி செல்வதாலேயே தான் எல்லையற்ற / ஈடு இணையற்ற இறைவன் என்பதை நிரூபிக்கிறார். "No need to come near nearer nearest. Enough to become dear dearer dearest" என்று சுவாமி சொல்வதற்கு இணங்க இதய வாசன் இதய அழைப்பையே பூர்ணகும்ப தாம்பூலம் வைத்து அழைப்பதாய் உணர்ந்து உடனோடி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 🌻

          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக