தலைப்பு

புதன், 7 அக்டோபர், 2020

ஒரு மெக்ஸிகன் உருவத்தில் வந்து பாஸ்போர்ட்டை மீட்டு தந்த பரம்பொருள் பாபா!

இறைவன் சத்ய சாயி எந்த மனித தோற்றமும் எடுக்க வல்லவர். காரணம் எல்லா தோற்றமும் அவரிடமிருந்தே வந்தது. இந்த மெய்யுணர்வை உணர்த்தும் உன்னத பதிவு இதோ...  

1985 ஜுன் ல் Dr. சாரா பவான் என்பவர் லாஸ் ஏஞ்ஜஸ்ஸில் இறங்கினார். டொரான்டோவில் அனஸ்தாலஜி(Anesthesiology) பற்றிய கருத்தரங்கிற்கு சென்று பங்கு பெறவேண்டும்; மேலும் சில ஸாயி மையங்களுக்கும் செல்ல வேண்டும். 7ம் தேதி ஜுன் ஒரு ஷட்டில் பஸ்ஸில் Tom Bradley terminalலிருந்து Air Canada  டெர்மினலுக்கு பிரயாணம் செய்யவேண்டும். பஸ்ஸில் தனது க்ளட்ச்  bag ஐ விட்டு விட்டு இறங்கியதை உணரவில்லை. அந்த பையில் விமான டிக்கெட், பாஸ்போர்ட், பணம் அத்தனையும் அதில் இருக்கிறதே! என உணர்ந்து பதட்டம் ஆகிவிட்டது. பாதையில் அமர்ந்து என்ன செய்வது எனத் தெரியவில்லை “ஸாயி இந்த நிலையில் நீ தான் ஏதாவது செய்ய வேண்டும்”  என்று உருகுகிறார், அப்பொழுது 10 நிமிடத்தில், ஒரு கார் வேகமாக வந்து இவரருகில் நிற்கிறது. மெக்ஸிகன் போல் ஒரு ட்ரைவர் இறங்கி நீங்கள் தான் பாஸ்போர்ட்டை பஸ்ஸில் தவறவிட்டீர்களா? எனக் கேட்டு இவரது க்ளட்ச் bag ஐ நீட்டினார். இவரை Air Canada Terminal வரை கொண்டு விட்டு  விட்டு திரும்ப சென்று விட்டார். தனது பிரமிப்பிலிருந்து விடுபடாததால் அவரது பெயரைக்கூட கேட்கவில்லை ! தன்னை எப்படி அடையாளம் கண்டு, கொண்டு வந்து கொடுத்தார் என்றும் கேட்க மறந்து விட்டார். 



1985 டிசம்பர் 3 ம் தேதி, 60 வது பிறந்த நாள் விழாவிற்குப் பின், ஸ்வாமி Dr. பவானை நேர்காணலுக்கு அழைத்தார். ஸ்வாமியை அந்த டிரைவரைப் பற்றிக் கேட்க வேண்டும் என டாக்டர் நினைத்தார். ஸ்வாமி அன்புடன் அவரைத் தட்டி, “நீ மிகவும் கவனக் குறைவாக இருக்கிறாய், நான் தான் அந்தப் பையைக் கொண்டு வந்தேன்” என்றார்.  Sydney- யில் இருந்து நீண்ட பயணம் வந்ததால் சோர்வடைந்தேன்  என டாக்டர் கூற, ”இல்லை இல்லை, சோம்பல், சோம்பல்“ என செல்லமாக கூறினார்!. 

ஆதாரம்: Gems of Sai Story No 79 

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 


🌻 பக்தர்கள் நாம் அனைவரும் சோம்பல் ஏதும் இல்லாமல் ஆம்பலாய் இறைவன் சத்ய சாயி பாதத்தில் பக்தியாய் மலர்ந்திருக்க வேண்டும். நமக்கு அவர் இதயம் கொடுத்ததே அதை அவரிடமே நாம் மீண்டும் சமர்ப்பிக்கவே..! எப்படி கங்கை நதியில் இறங்கி கங்கையை கைகளால் ஏந்தி கங்கையிலேயே அதை மீண்டும் விடுகிறோமோ அப்படி! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக