தலைப்பு

சனி, 31 அக்டோபர், 2020

சர்க்கரை நோயினால் வெட்டி எடுக்க வேண்டிய காலையும் கையையும் காப்பாற்றிய சாயி கிருபை!

சுவாமியினால் முடியாதது எதுவுமில்லை. அதற்கு நம் பூர்வீக கர்மாவும் இடம்தர வேண்டி இருக்கிறது. அப்படி சத்கர்மாவாக நாம் புரிகின்ற பக்தியும் சுவாமி மேல் வைக்கின்ற திடமான நம்பிக்கையும் எவ்வாறு அற்புதங்களை நிகழ்த்துகிறது என்பதற்கான அற்புத அத்தாட்சிப் பதிவு இதோ... 

வியாழன், 29 அக்டோபர், 2020

ஆடம்பர விருந்திற்கு செல்லாமல் அழையா விருந்தாளியாக ஏழை வீட்டில் உணவருந்திய சாயி தயாளன்!

இறைவன் ஸ்ரீ சத்யசாயி விரும்புவது நமது ஆடம்பர வழிபாட்டையோ... விமர்சையான விருந்தையோ ... பரிசுப் பொருட்களையோ அல்ல...நம் ஒரு துளி கண்ணீர் / ஒரே ஒரு துளசி இலை அதுவே அவருக்கு பரம திருப்தி தருகிறது என்பதை சுட்டிக் காட்டும் பரம கருணை வாய்ந்த தயாசாகர பதிவு இதோ... 

புதன், 28 அக்டோபர், 2020

அமெரிக்கா டாக்டர் கடிதம் கொடுத்த அந்நொடியே அவரின் சகோதரரை காப்பாற்றிய சாயி கருணை!

Dr. Venkat Kanubaddi · Retd. Chief of Anesthesthesiology at VA Medical Center, Fort Wayne, USA.

இறைவன் ஸ்ரீ சத்யசாயி வாங்கும் கடிதங்கள் எல்லாம் பிறகு அவர் சாவகாசமாக இருக்கையில் படித்துப் பார்ப்பதற்காக அல்ல.. சுவாமி அறியாதது ஏதுமில்லை.. கர்ம நிவர்த்தி தர வேண்டுமெனில் தரிசிக்க வந்தவர்களிடமிருந்து கடிதம் வாங்குகிறார். இல்லையேல் அவர்களை மேலும் காத்திருக்க வைக்கிறார் என்ற பரம சத்தியத்தை உணர்த்தும் அற்புதமான அனுபவம் இதோ...

சத்யசாய் அறக்கட்டளைக்கு ஐ.நா., அங்கீகாரம்!


மனிதகுல மேம்பாட்டுக்கு, ஸ்ரீ சத்ய சாய் மத்திய அறக்கட்டளை செய்து வரும் சமூகப் பணிகளுக்கு, ஐ.நா.,வின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

செவ்வாய், 27 அக்டோபர், 2020

பிரபல பாடகர் ஹொன்னப்ப பாகவதருக்கு காணாமல் போன சிருஷ்டி நெக்லஸை மீண்டும் வரவழைத்த சாயி அற்புதம்!

ஹொன்னப்ப பாகவதர் (1915 -1992), கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பிரபல கருநாடக இசை மற்றும் வாய்ப்பாட்டுக் கலைஞர். நல்ல உடல் வளமும் குரல் வளமும் கொண்ட இவர் தமிழ் மற்றும் கன்னட மொழி நாடக, திரைப்பட நடிகர், சிறந்த பாடகர், இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.

பழம்பெரும் பக்தர் திரு. T.R சாய்மோகன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!


ஆதிகால பக்தர்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்கள் அனைவரும் இறைவன் ஸ்ரீ சத்யசாயியை அணு அணுவாய் அனுபவித்தவர்கள். சுவாமியின் பேராற்றலை உணர்ந்தவர்கள். அதன் பேரானந்தத்தை உட்கொண்டவர்கள். திடமான பக்தி கொண்டவர்கள். அப்படி இருந்தவர்களில் 'லீலா மோகன சாயி' புத்தக எழுத்தாளரான T.R சாய் மோகன் அவர்களும் ஒருவர்! 

திங்கள், 26 அக்டோபர், 2020

ஷிர்டி சாயி பாபா தன் அடுத்த அவதாரத்தைப் பற்றி விளக்கிய தெய்வீக சான்றுகள்!


இறைவன் ஸ்ரீ ஷிர்டிசாயி அடுத்த அவதாரமான சத்யசாயியாய் உதிக்கப்போவதைக் குறித்து தன் அணுக்கமான பக்தர்களிடம் பிரகடனப்படுத்திய சான்றுகளும்/ குறிப்புகளும் இந்தப் பரவசப்பகுதியில் தெளிவாய் விளக்கப்படுகிறது...

சனி, 24 அக்டோபர், 2020

சுவாமி புகைப்படத்தோடு லக்கேஜை எடைபோட்டதும் நடந்த சாயி மகிமை!


இறைவன் ஸ்ரீ சத்யசாயியை வழிபடுவது ஒன்றே வாழ்க்கைப் பயணத்திற்கான பாதுகாப்பு.. சுவாசப் பயணத்திற்கான ஆரோக்கியம்.. மனப் பயணத்திற்கான இலக்கு என்பதை உணர்த்தும் அதி அற்புதப் பதிவு இதோ...

வெள்ளி, 23 அக்டோபர், 2020

பிரபல இசையமைப்பாளர் தமனின் தாயார் / சினிமா பாடகி சாவித்ரி அவர்களின் சாயி அனுபவங்கள்!

பிரபல பின்ணணி பாடகியாக இருந்தும்.. பிரபல இசை அமைப்பாளரின் தாயாக இருந்தும் பந்தா இல்லாத சுபாவம். பக்தி பிரபாவம். கள்ளம் கபடமற்ற மனம். சிறு வயதில் கணவனை இழந்து சத்ய சாயி தெய்வத் துணையோடு குடும்பத்தை கரையேற்றிய சாயி கருணை இதோ பரவசப் பதிவாக...

குடும்பம் மற்றும் சமூக வரையறைகளை சார்ந்திருக்கும் பெண்களால் ஆத்ம ஞானம் அடைய முடியுமா? சுவாமி இதைப் பற்றி என்ன சொல்கிறார்?

நிச்சயமாக முடியும் என்று ஒரு வரியில் பதில் சொன்னால் தெளிவாக புரியாமல் போய்விடும். எப்படி முடியும் என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்!

வியாழன், 22 அக்டோபர், 2020

ஒரு பக்தரின் தாயாரை குணமாக்க வேண்டிய அன்றே போஸ்ட்டில் வந்த சுவாமி விபூதி!


இறைவன் சத்ய சாயி பக்தர்கள் அநேகம். அதில் தன்னலமில்லா சேவாதளர் அநேகம் அநேகம். அதில் ஆத்மார்த்த பக்தரும்... தன்னலமில்லா சேவாதளருமான திருமதி கல்யாணி சாயிராம் அவரின் சாயி அனுபவம் இதோ...

விதியை மதியால் வெல்ல முடியுமா? அப்படி வெல்ல முடிந்தால் எதற்காக சுவாமியை வழிபட வேண்டும்?


விதி என்பது தெய்வீக நிர்ணயம். ஒவ்வொரு மனித வாழ்வுக்கும் பொது விதியும் உண்டு.. தனிப்பட்ட விதியும் உண்டு. 

பொதுவிதி சமூகத்தினால்.. தனிப்பட்ட விதி அவரவர் பூர்வ ஜென்ம கர்மாவினால்...

செவ்வாய், 20 அக்டோபர், 2020

முதியோர் இல்லத்தில் வாழ்ந்த பக்தைக்கு நேரில் தோன்றி தலையை மசாஜ் செய்த பாபா!

தனியாக வாழும் வயதில் முதிர்ந்த சுவாமி பக்தை ஒருவரை எவ்வாறு அவர் தனிமையைப் போக்கி... காவலாய் இருந்து... தன்னை உணர வைத்து தயை செய்து வருகிறார் இறைவன் ஸ்ரீசத்யசாயி எனும் பெருங்கருணையை உணர்த்தும் பரவசப் பதிவு இதோ..

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

பாத நமஸ்காரத்தில் பாவ வினைகள் களைந்த பரமாத்ம சாயி!


இறைவன் சத்ய சாயி அங்கிங்கெனாது எங்கெங்கும் நிறைந்திருக்கும் பரிபூரணப் பொருள்.. அவரின் ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படும் சத்தியம் ஓராயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தும். அப்படி ஒரு பக்தைக்கு அவர் வெளிப்படுத்தி பக்குவப்படுத்திக் கொண்டிருக்கும் ஓர் அனுபவம்.. 

புதன், 14 அக்டோபர், 2020

பாரத ரத்னா பஜித்த சாயி பகவான் பாதுகை!


இறைவன் ஸ்ரீ சத்யசாயி தன் பக்தர்களுக்காக எல்லாவற்றையும் தருகிறார் என்பதை கடந்து பெருங்கருணையில் நம் சத்யசாயி பரம்பொருள் தன்னையே பக்தர்களுக்கு தருகிறார் என்பதே சர்வ சத்தியம். அப்படி நிழல் மீராவுக்கு நிஜ கண்ணன் வழங்கிய தன் பகவத் பாதுகை மகிமை இதோ..

முற்பிறவி மறுபிறவி என கதை கட்டி விடுகிறார்களே.. இவை எல்லாம் நிஜமா? இதற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்மந்தம்?

நம் அனைவர் வாழ்க்கை சம்பவங்களையும் நினைத்துப் பார்க்கையில் அது ஒரு அர்த்தமுள்ள கதையாகவே தோன்றுகிறது.  அந்த வகையில் முற்பிறவியும் மறுபிறவியும் ஒரு அற்புதமான கதை தான்!

செவ்வாய், 13 அக்டோபர், 2020

தோல் வியாதிக்கு தோலோடு வாழைப்பழம் உண்ண வைத்து குணப்படுத்திய பாபா!

தோல் வியாதிக்கு இளம் சாயி கொடுத்த வாழைப்பழ வைத்தியம்.

இறைவன் ஸ்ரீ சத்யசாயி லீலைகள் இந்த நொடி வரை ஒன்றா ? இரண்டா? தோலுக்குள் வாழைப்பழம் மறைந்திருப்பதைப் போல் சுவாமியின் ஒவ்வொரு லீலைக்குள்ளும் அவரின் கருணையே மறைந்திருக்கிறது!

திங்கள், 12 அக்டோபர், 2020

பணம் கொடுத்து ஆன்மீக ஞானம் பெறுவதை சுவாமி ஆதரிக்கிறாரா?

கேள்வி: ஆன்மீக யோகம் அளிக்கிறேன் என ஏராளமாய் பணம் வசூலிக்கும் குருமார்களை நம்பலாமா? பணம் கொடுத்து ஆன்மீக ஞானம் பெறுவதை சுவாமி ஆதரிக்கிறாரா?

சனி, 10 அக்டோபர், 2020

சுவாமி படங்கள் வெறும் படங்கள் அல்ல.. அவை சுவாமியே!

சுவாமி படங்கள் படங்களே அல்ல அவை சுவாமியே என்பதற்கான சான்றுகள்.. மகத்துவம் என்பதைப் பகிர ஆரம்பித்தால் எண்ணிலடங்காது.. அதில் ஒரு பக்தரின் பிரத்யேக அனுபவத்திலிருந்து சில துளிகள் இதோ... 

வெள்ளி, 9 அக்டோபர், 2020

அழுத குழந்தையின் கண்ணீரை தன் கைக்குட்டையால் துடைத்த தாயுமானவ சாயி!

யாருக்கு என்ன பிரச்சனை..? யாருக்கு எது ஆறுதல்..? என அறிந்து அதை உடனே சங்கல்பித்து செயல்படுத்துபவர் சுவாமியே.. எத்தனைப் பெரிய கூட்டம் என்றாலும் சுவாமிக்கு தனித்தனியாக வந்திருப்பவரின் உள்ளம் தெரியும். அவரவர்களுக்கு பிரத்யேக ஆனந்தம் அளிப்பவர் சுவாமியே என்பதை உணர்த்தும் நெகிழ்வான பதிவு இதோ...

மதுரையைச் சேர்ந்த திரு. ஸ்ரீனிவாசன் செட்டியார் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!

பழம்பெரும் பக்தரும் பகவானிடம் நெருங்கிப் பழகிய பக்தர்களில் ஒருவருமான காலம்சென்ற சுப்பிரமணிய செட்டியார் அவர்களின் புதல்வர் திரு. ஸ்ரீனிவாசன் செட்டியார் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்!

வியாழன், 8 அக்டோபர், 2020

சத்ய சாயிபாபாவைப் போய் கிருஷ்ண அவதாரம் என்கிறீர்களே? அதற்கு எவை சான்று? எவை ஆதாரம்?

இறைவன் ஸ்ரீ சத்ய சாயி கிருஷ்ண அவதாரமே என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக.. மலை மேல் இட்ட விளக்காக அனைவரும் எளிதில் உணரக் கூடிய ஒரு மிகச் சாதாரண வகையே. பிரம்ம பிரயத்தனம் அவசியமில்லை. அதற்கு அவருடைய வாழ்க்கையை வாசித்தாலே புரிந்துவிடும்.

புதன், 7 அக்டோபர், 2020

ஒரு மெக்ஸிகன் உருவத்தில் வந்து பாஸ்போர்ட்டை மீட்டு தந்த பரம்பொருள் பாபா!

இறைவன் சத்ய சாயி எந்த மனித தோற்றமும் எடுக்க வல்லவர். காரணம் எல்லா தோற்றமும் அவரிடமிருந்தே வந்தது. இந்த மெய்யுணர்வை உணர்த்தும் உன்னத பதிவு இதோ...  

'நாராயண சேவை' புகழ் திருமதி. வசுந்தரா கிருஷ்ணமூர்த்தி அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்!

மனிதன் அடைய வேண்டிய நான்கு புருஷார்த்தங்களில் நிறைவான 'வீடு பேறு' எனும் முக்திக்கு 'தன்னலமற்ற சேவையையே' பகவான் பரிந்துரைக்கிறார். அவ்வாறு நடைமுறையில் செய்வது எவ்வளவு கடினம் என்பது ஆன்மிக பாதையில் பயணிக்கும் சாதாகர்களுக்கு, பக்தர்களுக்கு மட்டுமே தெரியும். 

செவ்வாய், 6 அக்டோபர், 2020

மலேஷியா பக்தர்க்கு படுக்கை அறையில் ஒளிப்பிழம்பாய் தரிசனம் அளித்த தெய்வ சாயி!


இறைவன் சத்ய சாயி பக்தர்கள் உலகம் எங்கும்... வரைபடத்தில் இல்லா தேசத்திலும் சுவாமி பக்தர்கள் இருக்கிறார்கள்‌. இதில் மகோன்னத தேசமான மலேஷியா தேசத்து பரமாத்ம பக்தர் சாயி கிருஷ்ணன். அவர் சத்ய சாயி யுகத்திற்கும் .. அதன் யூ.டியூப் சேனலுக்கும் செய்து வரும் கை வண்ணமும் .. குரல் வண்ணமும் அநேகம் அநேகம். அன்னாரின் சிலிர்ப்பூட்டும் சத்ய சாயி அனுபவம் இதோ... 

சாயி சத்சங்கம் - 11 | மௌனமே சாயி லென்ஸ்

மௌனத்தின் சாலையில் தான் இறைவன் சத்ய சாயி நடந்து வருகிறார். ஓசையற்ற இதயத்தில் தான் சுவாமியின் காலடிச் சத்தம் கேட்கிறது. அமைதியே சுவாமியின் திருத்தலம். 84,00,000 உயிரினங்களில் மனிதப் பிறவியே சுவாமியை உணரக்கூடிய அற்புதப் பிறவி எனவும்.. உண்மையான ஆன்மீக மதிப்பெண் எது ? எனவும் தன் தனித்துவத் தமிழில் இதோ எடுத்தியம்புகிறார் சுவாமி பக்தை செல்வி. விழுப்புரம் அர்ச்சனா சாயிராம்.

👇👇

திங்கள், 5 அக்டோபர், 2020

டி.எம்.எஸ் மகன் கனவில் காட்சி தந்த கடவுள் சாயி!


ஒருவர் மட்டும் இறைவன் சத்ய சாயி பக்தர் என்றாலும் அவரின் பரம்பரைக்கே பேரருள் பாலிக்கும் கடவுள் சாயி எவ்வாறு ஒவ்வொரு குடும்ப நபரையும் பக்தியோடு ஆட்கொள்கிறார் என்பதை நினைத்தாலே நெஞ்சு சிலிர்க்கும்.. அப்படி ஒரு பதிவு இதோ..

தியான வழியில் பயணிக்கும் சாதகர்களுக்கு தலைசிறந்த வழி எது?


தியான வழியில் செல்லும் சாதகர்கள் மூன்று மார்க்கங்களில் பயணிக்க முயல்கின்றனர். அவை சாத்வீகம், ராஜஸிகம், தாமஸிகம் ஆகும்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

ஒரு சிறிய எறும்புக்கும் பகவான் பாபா, பாத நமஸ்காரம் அளித்த விந்தை!



கல்லுக்குள் தேரைக்கும், கருப்பைக்குள் சிசுவுக்கும் உயிரும் உணவும் அளித்து காப்பவர் யார்? நாம் உண்ணும் உணவின் ஒவ்வொரு பருக்கையிலும் , நம் பெயரை முன்பே எழுதி, பசியாற்றுபவர் யார்? அண்ட சராசரங்களையும் , அனைத்து உயிர்களையும் படைத்துக் காப்பவர் யார்? அவரே அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகரான இறைவன்  பாபா அல்லவா? உலகில் ஒவ்வொரு உயிரினமும் மதிப்பு வாய்ந்தவை. பரமாத்மா பாபாவிற்கு யானையும் ஒன்றுதான் எறும்பும் ஒன்றுதான். 

சனி, 3 அக்டோபர், 2020

பிரபல இந்திய விஞ்ஞானி பகவந்தம் மகனுக்கு திடுக்கிடும் படி அறுவை சிகிச்சை செய்த பாபா!

Former Director of Indian Institute of Science and Defence Research and Development Organisation. He is One of the founding fathers of Defence Research in India. 

டாக்டர். சூரி பகவந்தம்(M.Sc. Ph.D. D.Sc) இந்தியாவின் தலைசிறந்த வேதியல் விஞ்ஞானி ஆவார். டாக்டர் சர்.சி.வி ராமன்(நோபல் பரிசு பெற்றவர்) அவர்களோடு ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட்டு  பாராட்டையும் பெற்றவர். அகில இந்திய விஞ்ஞான கழகத்தின் இயக்குனராக மற்றும் இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு விஞ்ஞான ஆலோசகராகவும் பணி ஆற்றியவர்.

வியாழன், 1 அக்டோபர், 2020

காயத்ரி மந்திரம் ஆபத்தினையும் விபத்தினையும் தடுக்கும் என்கிறார் சுவாமி!

Power of the Gayatri Mantra is beyond imagination

மந்திரம் வேறு மகிமை வேறல்ல.. மந்திரமே மகிமை எனும் சத்தியத்தில் வேரூன்ற இறைவன் ஸ்ரீ சத்ய சாயியே வேத ரூபம். அந்த வேத ரூபம் சிந்தும் நாத தீபத்தின் முக்கியத்துவம் குறித்த உன்னத பதிவு இதோ...

சத்ய சாயி பக்தர்கள் சிலருக்கு கொரோனா தொற்று ஒரு வேளை ஏற்பட்டால் அவர்கள் எவ்வாறு அதை அணுகுவது?

கொரோனா தொற்று இந்த சூழலில் பலருக்கும் பரவி வருவது உண்மையே !

தற்காப்புக்காக சுவாமி விபூதியை தினந்தோறும் உட்கொள்வது.. அணிவது.. தொண்டை மேல் தடவுவது என தினசரி செய்ய வேண்டும்.