கேரளத்தைச் சேர்ந்த சாயி அன்பர் திரு. ஸ்வப்னா ரகுவின் சாயி அனுபவங்கள்.
ஸ்வப்னா ரகுவின் தந்தை ஆப்பிரிக்காவில் வேலை பார்த்தார். தந்தையுடன் சென்ற ஸ்வப்னா அங்கு பகவான் ஸ்ரீ சத்ய சாய் நிறுவனங்கள் நடத்திய பாலவிகாஸ் குழந்தைகளின் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது புட்டபர்த்தியில் அனைத்து உலக பாலவிகாஸ் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. அதில் பங்குகொள்ள ஸ்வப்னாவின் தலைமையில் 2 மாணவர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள். அப்படி வந்த போது அந்த மாணவர்கள் பகவானைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு தமக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள். அதாவது பகவான் பாபா உண்டாக்கும் பொருட்கள் எல்லாம் முதலிலேயே அவரது ஜிப்பாவில் ஒளித்து வைக்கப்பட்டவை என்று நினைத்தார்கள்.
இந்த நினைப்பிற்கு பிறகு, இந்தியாவிற்கு வந்தபோது, பகவான் அந்த இரண்டு மாணவர்களை அழைத்து, தன்னுடைய ஜிப்பாவை நன்றாக முழங்கை வரைக்கும், அல்லது தோள் வரைக்கும், நன்றாக செக்கப் செய்து கொள்ளுங்கள், நான் எதையும் ஒளித்து வைக்கவில்லை. இப்போது, "உங்களுக்காக நான் என்ன தருகிறேன் பாருங்கள்'" என்று சொல்லி இரண்டு லட்டுகளை சிருஷ்டி செய்து, சாப்பிடுங்கள் என்றார். மிக மிக சுவையான லட்டுகளை சுவைத்த அந்த மாணவர்கள், பகவானுடைய தெய்வீக சக்தியைப் புரிந்து கொண்டார்கள். அதை எல்லோருக்கும் சொன்னார்கள்
இதைப் போலவே இன்னொரு முறை அந்த மாணவர்கள் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, பாபா அவர்கள் பக்கத்தில் வந்தார். பின்னர் அவர் போனவுடன், ஒரு பையன் இன்னொரு பையனை பார்த்து "டேய் கவனித்தாயா, பாபாவின் தலையில் அருமையான வாசனை வருகிறது பார்த்தாயா மிக உயர்ந்த செண்ட் போடுவார் போலிருக்கிறது" என்றான். மறுநாள் காலையில் ஒரு பையன், இரண்டு மாணவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தான். "உங்களை பாபா அழைக்கிறார்", என்று சொல்லி பகவானின் அறைக்கு அழைத்துப் போனான். அங்கே பாபா இருந்தார். அந்த மாணவர்களைப் பார்த்து "பையன்களா நான் இப்போது குளிக்கப் போகிறேன், தலையில் நன்றாக தண்ணீரை கொட்டி சோப்பு போட்டு குளிக்க போகிறேன், பிறகு உங்களிடம் வருகிறேன், அப்போது என் தலையில் இருந்து ஏதாவது சென்ட் வாசனை வருகிறதா, என்று பாருங்கள்", என்றார். பின்பு குளித்து விட்டு வந்து தன்னுடைய தலையை சற்று வளைத்து அந்த பையன்களிடம் காட்டினார். அப்போது தெய்வீகமான மனம் அவருடைய தலையில் இருந்து வந்தது. மறுபடியும் பாபா, "நீங்கள் போய் அந்த பாத்ரூமில் பாருங்கள், ஏதாவது சென்ட் பாட்டில் வைத்து இருக்கிறேனா என்று". இரண்டு மாணவர்களும் பார்த்துவிட்டு ஆச்சரியமடைந்து, பாபா, "உங்கள் தெய்வீகத் தன்மையை புரிந்து கொள்ளாமல் ஏதேதோ பேசி விட்டோம் தயவு செய்து மன்னித்து விடுங்கள்" என்றார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக