“தாயே முதல் குரு. அவளது உதாரணம், அறிவுரை, எச்சரிக்கை போன்றவை ஆழமாக நெடு நாட்களுக்கு மனிதனை பாதிக்கிறது. இரண்டாவது குரு தந்தை. குழந்தை அவரது புத்தியினாலும் வலிமையாலும் ஈர்க்கப்பட்டு, அவர் தரும் தண்டனைகளைக் கண்டு அஞ்சவும் செய்கிறது. அடுத்தது ஆசிரியர். அவர் மாணாக்கனை பொருளியலான – உலகாயதமான அறிவில் வழி நடத்தி செல்கிறார்.
ஆனால் குரு (ஆன்மிக வழிகாட்டி) மட்டுமே அகக்கண்ணைத் திறந்து, உள்ளுணர்வின் கருவிகளை (அந்தக்கரணங்களை ) தூய்மைப்படுத்துகிறார்.
அவர் உனக்கு நீயே ‘தேஹம்?’ (நான் இந்த உடலா? அல்லது உடலானது நான் உபயோகப்படுத்தும் ஒரு கருவி மட்டும்தானா?) என கேட்டுக்கொள்ளும்படியும் அதற்கு ‘நாஹம்’ (நான் இந்த உடல் அல்ல) என விடையும் காண தூண்டுகிறார்.
பிறகு ‘நான் யார்?’ – ‘கோஹம்?’ எனும் உண்மையை அறியும் ஆராய்சியில் ஆழ்ந்து, தூய்மைபடுத்தப்பட்ட உள்ளுணர்வின் மூலம் ‘ நானே அவன்’ - ‘ஸோஹம்’ (நானே தெய்வீகம்; தெய்வீகச் சுடரின் ஒரு பொறி) என அறியும் நிலையை அடையச் செய்கிறார்.
- பகவான் பாபா, (குரு பூர்ணிமை, 26.07.1972)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக