தலைப்பு

வெள்ளி, 19 ஜூலை, 2019

✋ எங்கு நாம் சுவாமியை காணலாம்?

நேர்காணல் அறையில் ஒரு பக்தர் கேட்ட கேள்விக்கு பகவான் சத்ய சாயி பாபா அருளிய பதிலை பார்ப்போம்.

சுவாமி: ஞாபகத்தில் கொள்ளுங்கள், சாயி
கல்லில் செதுக்கப்பட்ட அல்லது செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்ட உருவத்தில் இருப்பதில்லை.

அவா் சா்வவியாபகமாய் பரந்த அன்புடைய மனமுவந்த தயையுடன் கூடிய இனிய நறுமணத்தோடு கூடிய இரக்கமுள்ள இதயங்களில் இருக்கிறாா். எனது இல்லம் உங்களது இதயங்களே. எனது பிரசாந்தி நிலையம் உங்களுள் உள்ளது.

உங்களது இதயத்தில் எனை காணுங்கள். உங்களது மனதால் பாத நமஸ்காரம் செய்யுங்கள். நோ்முக பேட்டி அளித்திட கேட்காதீா்கள்.நோ்முக பேட்டி எட்டிய தூரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தினை தரும். அதற்குபதிலாக உள்ளடங்கிய தோற்றத்தினை கேளுங்கள். அதுவே உடனடியான தோற்றத்தினை அளிக்கும் அல்லது உடனடியான தெய்வீக தோற்றத்தை காணலாம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக