தலைப்பு

சனி, 20 ஜூலை, 2019

உண்மையாக மற்றும் ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கும் பக்தனுக்கு பகவான் கட்டாயம் பதில் உழைப்பார்!


சுவாமி உகாண்டா சென்று திரும்பிய பிறகு அங்கிருந்து இந்தியாவில் உள்ள ஜாம்நகருக்கு வந்த ஒரு மனிதர், தான் எவ்வாறு பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்தராக மாறினார் என்ற கதையை என்னிடம் கூறினார்... 

அம்மனிதர் மருத்துவர் சி.ஜி. பட்டேலின் இல்லத்திற்கு தன் மனைவியை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் அவருக்கு பாபாவை தரிசனம் செய்யும் எண்ணமில்லை. தன்னுடைய நெருங்கிய நண்பனுடைய நீரிழிவு நோயைக் குணமாக்கியதை கேட்டும், மற்றும் பாபாவின் அதிசய சக்திகளை பற்றிய கதைகளை பிறர் கூறக் கேட்டும், அந்நபருக்கு பாபாவின் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. அடுத்த நாள் காலையில் என்டிவி விமான நிலையத்திலிருந்து பாபா புறப்படுவதாக இருந்தார். அந்த நபரும் அடுத்த நாள் காலையில் பாபாவை தரிசனம் செய்ய என்டிவி விமான நிலையம் சென்றார். அந்த விமான நிலையம் 40கி.மீ தொலைவில் இருந்தது. அந்த விமான நிலையத்திற்கு எவ்வளவு விரைவில் செல்ல வேண்டுமோ அவ்வளவு விரைவில் செல்ல வேண்டி இருந்தது.



அவர் சுமார் 24கி.மீ தொலைவு கடந்து இருந்தபோது, பல பக்தர்களுடைய சீருந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தன. அதில் ஒரு சீருந்தை நிறுத்தி, அதன் ஓட்டுநரிடம், "சுவாமியின் விமானம் கிளம்பி விட்டதா"? என்று கேட்டார். அதற்கு அவர் ஆம், சில நிமிடங்களுக்கு முன் கிளம்பி விட்டது எனக் கூறினார். இதைக் கேட்டு அந்த நபர்,தான் சுவாமியின் தரிசனம் செய்யும் வாய்ப்பை இழந்து விட்டதை எண்ணி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அவர் உடனடியாக பாபாவிடம் மனதில் உண்மையான அன்போடு, பிரார்த்தனை செய்தார். நான் உங்களுடைய ஆசியை பெறவே வந்திருந்தேன். உங்களுடைய பெருமைகளை கடைசி தருணத்தில் தான் நான் உணர்ந்து கொண்டேன். இது உங்கள் சங்கல்பம். நான் மிகவும் துரதிஷ்டசாலியான மனிதன். தற்போது நீங்கள் என் இதயத்தில் இருக்கிறீர்கள். என்னுடைய வாசல் கதவில் உங்களுடைய இருப்பை தவற விட்டதற்காக வருந்துகிறேன்.
 இவ்வாறு வருத்தப்பட்டுகொண்டே, விமானநிலையம் சென்று தன் அன்பை காட்டும் விதமாக, வாயிற்கதவை தொட்டு முத்தமிட்டார். என்ன ஆச்சரியம்!! பாபா புறப்பட்ட விமானம்(ஈஸ்ட் ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ்) திரும்பி வருவதாகவும், இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கப் போவதாகவும் ஒரு அறிவிப்பு வெளியானது.


ஒருவர் இதை தற்செயலான செயல் என்று கூறலாம். ஆனால் இந்த மனிதருக்கு எல்லை கடந்த ஆனந்தம் உண்டானது. ஆனந்த கண்ணீருடன் சுவாமியை தரிசனம் செய்தார். விரைவில் அந்த விமானத்தில் இருந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. மீண்டும் அனைத்து பயணிகளையும் ஏற்றிக்கொண்டு விமானம் தன் பயணத்தை தொடர்ந்தது.

 "இறைவன் பயணம் செய்யும் விமானத்தில் கோளாறு ஏற்படுமா? என்று ஒருவர் கேட்கலாம். உண்மையில் இறைவன் அனைவருடைய பிரார்த்தனைகளையும் கேட்டு, உண்மையாக மற்றும் ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்யும் பக்தனுக்கு பதிலளிக்கிறார்... 

ஆதாரம்: மருத்துவர் தி.ஜ.காடியா எழுதிய 'சாய் ஸ்மரண்' என்ற புத்தகத்திலிருந்து... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக