தலைப்பு

வியாழன், 18 ஜூலை, 2019

பக்தர் கேட்டவை பாபா அருளியவை - 1


ஹிஸ்லாப்: கடவுளிடம் பிரார்த்தனை செய்வது, பிச்சை கேட்பது போல் ஆகாதா?

பாபா:  சமதையானவர்களிடம் இரப்பது உன்னை தாழ்த்தியும், அவனை உயர்த்தியும் விடுகிறது. ஆனால் கடவுளிடம் உன் கோரிக்கையை கேட்கும் பொழுது, நீ கடவுளின் நிலைக்கு    உயர்ந்து விடுகிறாய். இறைவனிடம் இறைஞ்ச வேண்டும், கடவுளிடம் வேண்டுதல் என்பது மிகவும் சரியான செயல். அது பிச்சை கேட்பது ஆகாது.

ஹிஸ்லாப்:  ஆனால் நான் நினைத்தது என்னவென்றால் இறைவன் எல்லா சிக்கல்களும் அறிந்தவன், ஒரு கஷ்டத்தை நிவாரணம் செய்வது தேவையானால் அவனே அதை நாம் வேண்டாமலே செய்துவிடுவான் என்பதாகும்.

பாபா:  இது முக்கியமான பதில். அது அப்படி அல்ல. கடவுளை கேட்பது உன் கடமையாகும். உன்னுடைய எண்ணங்களுக்கு மாறுதல் இல்லாத சொற்கள் உன் வாயிலிருந்து வெளி வரவேண்டும். எண்ணங்கள் சத்திய வாக்காக வெளிவரவேண்டும். தெய்வம் எல்லாம் அறிந்தது என்பது அறியப்பட்ட உண்மையே. ஆனால் இறைவனுக்கு உண்மையான சொற்கள் சொல்லப்பட வேண்டும்.குழந்தையின்   உயிர் போஷனைக்கு உணவு தேவை என்பது தாய்க்குத் தெரியும். ஆனால் குழந்தை கேட்கும் பொழுதே பால் கொடுக்கப்படுகிறது.

ஹிஸ்லாப்:  எப்பொழுது இறைவனை கேட்க வேண்டும், எப்பொழுது கேட்கக் கூடாது என்பது தெளிவாக தெரியவில்லை. உதாரணமாக மருத்துவர்களால் குணப்படுத்த முடியாத தலைவலி தொடர்கிறது. நான் சுவாமியை இந்த தலைவலியை குணப்படுத்த வேண்டி கேட்கவில்லை. இந்த வலி குணமாக நான் பிரார்த்தனை எதுவும் செய்யவில்லை. இருப்பினும் ஒரு கடிதத்தில் சுவாமி "உன்னுடைய ஆரோக்கியம் எப்படி இருக்கிறது? அதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உன் இறைவன் எப்போதும் உன்னுடனும், உன்னுள்ளும்,க்குள் உன்னை சுற்றியும் இருக்கிறான்" என்று எழுதினார்.

பாபா: அது சரியே. பாபா என்ன சொல்கிறாரோ அது போதுமானது. உனக்கு உடல் அபிமானம் குறைந்து வருகிறது. இன்று ஒரு தலைவலி, நாளை ஒரு வயிற்று வலி என்று உனக்கு நேரலாம். போகட்டும் அது பற்றி கவலை வேண்டாம். நீ என்பது உடல் அல்ல, ஒரு முறை பாபா கவலையற்று இரு என்று சொல்லி பிறகு அவரை அது குறித்து எதுவும் கேட்க வேண்டாம். இவற்றை பாராட்ட வேண்டாம்.

ஆதாரம்: 'பகவானுடன் உரையாடல்' என்ற புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக