தலைப்பு

செவ்வாய், 9 ஜூலை, 2019

ஏன் குறிப்பிட்ட ஒரு சில வீடுகளில் உள்ள படங்களில் மட்டும் பாபா விபூதி வரவழைக்கிறார்?


நான் நீண்ட நாட்களாக சத்ய சாயி பாபாவை கும்பிட்டு வருகிறேன். ஒரு சில பக்தர்களின் வீடுகளில் உள்ள பாபாவின் படத்தில் மட்டும் பாபா விபூதி மற்றும் குங்குமம் வரவழைக்கிறார். ஏன் குறிப்பிட்ட ஒரு சில பக்தர்களின் வீடுகளில் மட்டும் பாபா இவ்வாறு செய்கின்றார்?நானும் தான் "எல்லாம் பாபா" என்று வாழ்ந்து வருகிறேன். எங்கள் வீட்டில் எல்லாம் இதுபோன்று அற்புதம் செய்ய மாட்டாரா?    

ஏன் நிகழ்த்துகிறார்? எதற்காக நிகழ்த்துகிறார்? என்ற காரணம் எல்லாம் பகவானுக்கு மட்டும் தான் தெரியும். விபூதி நம் வீட்டில் வரவில்லையே என்று எண்ண வேண்டாம். சுவாமியே நம் சாா்பாக அனைத்தையும் கவனிக்கும் பொழுது இதற்கு ஆசைபட தேவையில்லை. படைத்தவனே நம்முடன் இருக்க படைப்பின் பொருளை கண்டு வியக்கும் பொழுது நம்முடன் இருக்கும் சுவாமி மெதுவாக நழுவி விடுவாா் அவ்விடத்திலிருந்து. திரும்பவும் மீண்டு வருவது மிகசிரமம். நான் வேண்டுமா அல்லது என்னால் படைக்கப்பட்ட பொருள் வேண்டுமா என அவா்கேட்பின் சுவாமி நீயே வேண்டும் என கூற நமக்கு சொல்லி கொடுக்கிறாா். நாம் கேட்டது கிடைத்துவிட்டால் சுவாமி அதனை கொடுத்து நீ செய்தவைகளுக்கு இவை சரியாக போய்விட்டன என்று சொல்லிவிடுவாா். மீண்டும் எதையும் வேண்டும் திறனை( சுவாமி உட்பட) பெறுவதற்கு மிகுந்த நாட்களாகும். எதுவும் கேட்காமல் இருப்பதே உத்தமம். ஆனால் அனைத்து விஷயங்களையும் சுவாமியுடன் பேசுங்கள். விவாதியுங்கள். அதன் மேல்நடவடிக்கை எடுக்க கூறாதீா்கள்.
இந்த வாா்த்தையே ஞாபகம் வையுங்கள்

"கடலிலே குளித்து ஒரு முத்து எடுத்தேன் அதை கைநழுவ விடலாமோ சாயீசா"
உன்சித்தம் என் பாக்கியம் என பிராா்த்திப்பதே மேலானது சாய்ராம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக