தலைப்பு

புதன், 31 ஜூலை, 2019

பக்தர் கேட்டவை பாபா அருளியவை -4


ஹிஸ்லாப்:  சில மனிதர்கள், அவர்களின் குற்றங்கள் விஷத் தன்மையாக இருப்பதால், முற்றிலும் தீயவர்கள் என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.

பாபா:  கடவுள் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் குடியிருப்பதால், எந்த மனிதனும் முற்றிலும் தீயவன் அல்ல. ஒரு தாயும் மகனும் சொத்திற்காக நீதி மன்றத்தில் சண்டையிட்டு கொள்ளலாம். ஆனால் தாய், மகன் என்ற உறவு நீடிக்கிறது. இரண்டு வெவ்வேறு வீடுகளில் வசிப்பவர்கள், ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். ஒவ்வொருவனும் தன் வீட்டின் நுழைவாயிலில், பாபாவின் படம் ஒன்றை வைத்திருக்கிறான். அந்த வீட்டை உடலுக்கு ஒப்பிடலாம்.
பாபாவின் படம் ஆத்மாவாக உள்ளுறையும் இறைவனாகும். உடலை, அது இயங்கும் தன்மையில் இருந்து திருத்த வேண்டும். இதற்கு சிறந்த வழி அன்பினால் மற்றவர்களை கவர்வதே. மாற்று குறையாத முழு நல்லது இருக்கிறது. ஆனால் முழுமையான தீமை என்பது இல்லை. சாதாரண பார்வை உள்ளவர்களால் நல்லவற்றையும் தீயவற்றையும் ஒன்றே என சமமாகப் பார்க்க முடியாது .தன்னிடமும் மற்றவர்களிடமும் உள்ள தெய்வச் சுடரை ஒருவன் அறியும் பொழுது, அவன் நன்மை தீமைகளை சமமாக ஒன்றே என பாவிக்க முடியும்.

நல்லதே உண்மையானது, ஒருவன் பார்ப்பது எல்லாமே தாறுமாறாக இருப்பினும், அவை நல்லவையே என்ற சத்தியத்தை ஒருவன் அனுசரித்தால், அம்மாதிரி கோணத்தில் உலகை நோக்கினால், அவன் மிகுந்த மனோபலம் பெறுவான். இந்த உலகே மாயை , பற்றுகோடற்றது  என்று படித்தவர்கள் வாதம் செய்யலாம். ஆனால் அவர்கள் இந்த உலகை நேசிக்காமல் வாழ முடியாது. பிரகிருதி என்ற கோணத்தில் பார்த்தால் இந்த உலகம் உண்மையற்றதாக தோன்றும். அனைத்தும் கடந்த நிலையில் பார்த்தால், இவ்வுலகம் சத்தியமானது என்றே தெளிவு பெறலாம்.

ஆதாரம்:  'பகவானுடன் உரையாடல்' என்ற புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக