தலைப்பு

செவ்வாய், 23 ஜூலை, 2019

டாக்டர் பானர்ஜியும் கொல்கத்தா ரசகுல்லாவும்!


டாக்டர் பானர்ஜி என்பவர் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இல் பேராசிரியராக இருந்தவர். பாபாவிடம் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர். போகப்போக தீவிரமான பக்தராகிவிட்டார். ஒருமுறை தன்னுடைய குடும்பத்தோடும் நண்பர்களோடும் புட்டபர்த்திக்கு சென்றார். நண்பருடைய மகனுக்கு தீராத வியாதி ஒன்று இருந்தது. பகவான் பாபா விபூதியை கொடுத்து குணப்படுத்தி விட்டார். பின்பு குழந்தைகள் வந்திருக்கிறார்களே அவர்களுக்கு சீரியசாக பேசினால் பிடிக்குமா? எனவே அவர்களுக்காக ஒரு ஸ்வீட் செய்கிறேன் என்று உள்ளங்கையை சுழற்றினார். அவர் கையிலிருந்து ரசகுல்லாக்கள் வந்தன. அதில் இரண்டு விசேஷங்கள். 1) அவை தென்னிந்தியாவில் கிடைக்கும் வகை அல்ல, வங்காளத்தில் மட்டுமே கிடைக்க கூடியது. 2)அவற்றை கையில் எடுத்ததும் பிசு பிசு வென்று நெய் ஒட்டிக் கொள்ளும். ஆனால் பாபா அவற்றை உண்டாக்கிய போது அவருடைய கையில் பிசுபிசுப்பு இல்லை. இதை இப்பொழுதே சாப்பிடாதீர்கள், வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போய் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து சாப்பிடுங்கள் என்றார் பாபா!!

ஆதாரம்: பிரசாந்தி ரிப்போர்ட்டர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக