தலைப்பு

சனி, 13 ஜூலை, 2019

பௌத்தர்களின் தலைமை பொறுப்பினை ஏற்கப்போகும் சாயி மாணவன்!


ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பக்தர்களான டார்ஜிலிங்கை சேர்ந்த பெமா வாங்டி & சஞ்சு ராய் தம்பதிகளுக்கு தாவா வாங்டி என்ற 9-வயது(2015ல்) மகன் இருக்கின்றான். 2015 ஆரம்பத்தில் இந்தத் தம்பதிகளுக்கு தலாய் லாமாவின் அலுவலகத்திலிருந்து பதிநான்காம் தலாய் லாமா கையொப்பமிட்டு சீல் வைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று வந்தது.

அந்த கடிதத்தில் உங்கள் மகன்தான் எங்களுடைய முந்தைய ரின்போச்சேவின்(டிராக்சே துப்தன் தென்பா கியாலெட்சன்) மறுபிறவி என்றும். அவர்தான் அருணாச்சலப் பிரதேசத்தின் வருங்கால ரின்போச்சே (Rinpoche) என்று குறிப்பிட்டிருந்தது. ’ரின்போச்சே’ என்ற சொல்லுக்கு ‘விலைமதிப்பற்ற’ என்பது பொருள். இது திபெத்திய பௌத்தர்களின் உயர்நிலை ஆன்மீகத் தலைமைப் பதவி.

முன்பு ரின்போச்சே பதவியில் இருந்த டிராக்சே துப்தன் தென்பா கியாலெட்சன் என்பவா் 2004ம் ஆண்டு நவம்பா் 1ல் மறைந்தாா். முன்னாள் ரின்போச்சேகள் யாவரும் தவாங் மாவட்டத்தில் உள்ள அதிலும் பிரத்தியேகமான ஜங், ஜங்கடா, திங்பூ, மஹோ, ரோ, மற்றும் ஹோ பகுதிகளி்ன் மோன்பா சமுதாயத்தில் பிறந்தவா்கள். அவர்களுக்கு இன்றும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் இருக்கின்றார்கள்.

இந்த கடிதம் வந்தபோது அந்த சிறுவன் புட்டபர்த்தியில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான். பெளத்த துறவிகளால் மீண்டும் மீண்டும் தொடர்ந்து சிறுவனின் பெற்றோருக்கு வேண்டுகோள் விடப்பட்டது. ஆனால் இச்சிறுவனின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்கவில்லை. பின்னர் 2016ஆம் வருடம், இச்சிறுவன் அருணாசல பிரதேசத்திற்கு வருகை தந்தபொழுது, இவன் தேவையுள்ள, துன்பப்படுகிற மக்களின் இடையே பழகலானான். இவன் அதிக அளவில் சமூக சேவையில் ஈடுபட்டான்.. இவனை மீண்டும் கடமைதனை ஏற்க மக்களால் வேண்டுகோள் விடப்பட்டது.
ஏனெனில் அவனது  வாழ்நாளில் வாதித்து வழிப்படுத்தும் தன்மையினை கண்டனா். தீடிரென பெற்றோரும் ஒப்புதல் அளித்தனா்.

தற்போது மைசூா் அருகே உள்ள பைலேகுப்பி என்னும் ஊரில் மடாலாயம் தொடா்பான கல்விதனை கற்று Phd.  பட்டப்படிப்பினில் தோ்ச்சிபெற்று உன்னத நிலை அடைந்திட இச்சிறுவன் அனுப்பப்பட உள்ளான். பதினைந்து வருடங்களுக்கு பிறகு அருணாசல பிரேதேசத்தின் தலைமையினை ஏற்க உள்ளான்.

ஆதாரம்: 
9-yr-old annointed Bratse Rinpoche (The Times of India)
Dalai Lama recognizes nine-year-old Darjeeling boy as reincarnation of Bratse Rinpoche (ANI News)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக