தலைப்பு

வெள்ளி, 19 ஜூலை, 2019

☎️ தொலைபேசி வாயிலாக விபூதி கொடுத்த சாயி பகவான்!


பெங்களூரைச் சேர்ந்த பிரபல டாக்டர்  திரு. RS பத்மநாபன் அவர்களின் சாயி அனுபவங்கள்.

பெங்களூரில் வசிக்கின்ற டாக்டர் பத்மநாபன் ஒரு புகழ்பெற்ற பல்மருத்துவர். அதைவிட முக்கியமாக பகவான் பாபாவின் தீவிர பக்தர். அவர் மூலமாக அவர் குடும்பத்தாரும் பக்தர்கள் ஆகிவிட்டார்கள். அதிலும் அவர் மூத்த சகோதரி புட்டபர்த்தியில் தங்கி விடுவதாக தீர்மானம் செய்தார். அவ்வாறு இருக்கும்போது அவர்களுக்கு கண் பார்வை மங்கிக்கொண்டே வந்தது. இதை பாபாவிடம் சொன்னபோது, இது ஒன்றும் இல்லை. கண்புரை நோய் தான். சில நிமிடங்களில் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். பெங்களூரில் உன்னுடைய சகோதரன் வீட்டிற்கு போ. வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்வார். தைரியமாக இரு, இந்தா விபூதி என்று விபூதியை சிருஷ்டித்து அந்த அம்மாள் கையில் கொடுத்தார் பாபா. அந்த டாக்டர் சகோதரர்களை அழைத்து, சகோதரியை அழைத்துக் கொண்டு போக சொன்னார். அந்த அம்மாவும் பெங்களூருக்கு சென்றார்.

சிகிச்சைக்கு நாளும் குறித்தாகிவிட்டது. காலையில் புறப்பட வேண்டிய நேரத்தில் திடீரென்று அந்த அம்மாவுக்கு பயம் வந்துவிட்டது. கண்ணில் கத்தியை வைத்தால் ஒரேயடியாக கண் பார்வை போய்விடும் என்ற பயம்.( அந்த காலத்தில் அறுவை சிகிச்சை என்றாலே பலரும் இப்படித்தான் பயந்து கொண்டிருந்தார்கள்) எனவே நான் சிகிச்சைக்கு வர மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார். டாக்டர் பத்மநாபனுக்கு தர்மசங்கடம். ஏற்பாடு செய்த சிகிச்சை நேரம் தள்ளிப்போகிறது, அவருடைய நண்பர் என்ன நினைப்பார் என்று கவலை கொண்டார். என்னதான் சொன்னாலும் அந்த சகோதரி ஒரே பிடிவாதமாக மறுத்துவிட்டார். மிகவும் கெஞ்சிய பிறகு, சரி நான் வருகிறேன் ஆனால் பகவான் மறுபடியும் எனக்கு உறுதி தர வேண்டும், அவருடைய விபூதியையும் கொடுக்கவேண்டும் என்றார். என்ன அக்கா இப்படி சொல்கிறீர்கள்? புட்டபர்த்தியிலேயே உறுதி அளித்தாரே, விபூதியையும் சிருஷ்டித்து கொடுத்தாரே, பின்னும் என்ன தயக்கம்? என்றார் டாக்டர் பத்மநாபன். ஆனால் அக்கா மசியவில்லை. ஒரே பிடிவாதம், அப்போது தொலைபேசி மணி அடித்தது.

டாக்டரின் ஐந்து வயது மகள் கீதா தொலைபேசியை எடுத்தாள். மறுபக்கம் பேசியது யார் தெரியுமா? சாட்சாத் பகவான் பாபா! கீதா உன்னுடைய அத்தை ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறாளா? ஒரு காகிதத்தை இந்த போன் ரிசீவர் பக்கத்தில் வை, அவளை கூப்பிட்டு என்னுடன் பேச சொல் என்றார். அதேபோல செய்யவே, ஏன் இப்படி பிடிவாதம் உனக்கு? நான் தான் சொன்னேனே, ஒரு கஷ்டமும் நேராது என்று... நீ  விபூதி கேட்டாய், இந்த போன் மூலமே அனுப்புகிறேன், அதை பெற்றுக் கொள் என்றார் பாபா. அற்புதமான அதிசயமான வகையில் விபூதி போனிலிருந்து கொட்டியது. அக்காளுக்கும் நம்பிக்கை வந்து சிகிச்சை செய்து கொண்டார்.

ஆதாரம்: “Living Divinity” by Shakuntala Balu. Page: 189-190. Published by S. B. Publications, Bangalore, 1983.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக