தலைப்பு

புதன், 10 ஜூலை, 2019

காயத்ரி மந்திர ஜபத்தை விட்டு விடாதீர்கள்! - பாபா

ஓம் பூர்புவஸ்ஸுவஹ
தத்சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோ ந: ப்ரசோதயாத்

*"காயத்ரி மந்திர ஜபத்தை விட்டு விடாதீர்கள். வேறு எந்த மந்திரத்தை வேண்டுமானாலும் புறக்கணித்து விடலாம். ஆனால் காயத்ரியை நீங்கள் தினமும் சிலமுறையவது உச்சாடனம் செய்ய வேண்டும். நீங்கள் எங்கிருந்தாலும், காரில், விமானத்தில், எங்கிருந்தாலும் உங்களை காயத்ரி மந்திரம் எந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும். காயத்ரி மந்திரத்தை
உச்சாடனம் செய்யும் போது பிரம்மத்தின் ஒளிக்கதிர்களாகிய பிரம்ம பிரகாசமானது உங்கள் மீது பொழிந்து, உங்கள் புத்தியை ஒளிமயமாக்கி, நீங்கள் செல்கின்ற பாதையிலும் ஒளியை பரப்பும். உயிர்களையெல்லாம் வாழ வைக்கின்ற சக்தியாகவும், உலகிற்கெல்லாம் தாயாராகிய அன்னபூரணி மாதாவாகவும் காயத்ரி மந்திரம் விளங்குகிறது. ஆகையால் காயத்ரி ஜபத்தை புறக்கணித்து விடாதீர்கள்.

_- பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, 20.06.1977_

1 கருத்து: