தலைப்பு

ஞாயிறு, 14 ஜூலை, 2019

பிரேம சாயி அவதாரத்தைப் பற்றி நாஸ்டர்டாமஸின் கணிப்பு!

சத்ய சாய்பாபா பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிரேம சாயி அவதாரத்தை பற்றிய பதிவுதான் இந்த வீடியோ. பிரேம சாயி பாபாவின் வருகையைப் பற்றி 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாஸ்டர்டாமஸ் அவருடைய புத்தகத்தில் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார். அதனை பிரபல தமிழ் யூடுபர் மதன் கௌரி இந்த வீடியோவில் விரிவாக பேசியுள்ளார்.

டிசம்பர் 20 2019 அன்று மதன் கெளரி வெளியிட்ட வீடியோ பதிவு 

“யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம் பரித்ராணாய ஸாதூனாம் விநாஷாய ச துஷ்க்ருதாம் தர்மசம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே”



பகவத் கீதையில் வரும் இந்த புகழ் பெற்ற ஸ்லோகம் பல பேருக்கு நம்பிக்கையின் மூலமாக விளங்குகிறது. இந்த ஸ்லோகத்தில், தன் உண்மையான தோற்றத்தை பற்றி குருஷேத்ர போரின் போது கிருஷ்ண பகவான் அர்ஜுனனிடம் கூறினார்.

அவர் கூறியதாவது, “எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைத் தூக்குகின்றதோ அப்போதெல்லாம் இறைவன் ஓர் ஆன்மாவை, அதாவது அவதாரத்தை வெளிப்படுத்துகின்றார். இந்த அவதாரம் யுகங்களுக்கிடையில் பூமியில் தோன்றி நல்லவர்களைப் பாதுகாத்து, கொடியவர்களை அழித்து புதிய தர்மம் ஒன்றை நிலைப்படுத்திடச் செய்கின்றது.” அதாவது, மனித இனத்திற்கு தீய சக்திகளால் வரும் ஆபத்தில் இருந்து பாதுகாக்க அவ்வப்போது பூமியில் தான் அவதரிப்பார். அதர்மம் தலை தூக்கும் போதெல்லாம், அவர் அவதாரங்களை எடுப்பார்.

யார் இந்த நாஸ்டர்டாமஸ்?

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டர்டாமஸ் உலகில் கி.பி.3797 வரை என்னவெல்லாம் நடக்கப் போகிறதுஎன்பதைக் கூறியுள்ள அபூர்வ ஜோதிடர். சுமார் 3000பலன்களை இவர் கூறியுள்ளதும் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவதும் உலகில் உள்ள அனைவரையும் திகைக்க வைக்கிறது. 'நூற்றாண்டுகள்' என்ற இவரது நூல் 942 செய்யுட்களைக் கொண்டது. ஒவ்வொரு செய்யுளிலும் நான்கு வரிகள் உள்ளன. இவைகள் காண்டமாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொருகாண்டத்திலும் நூறு பாடல்கள் உள்ளன.


14-12-1503ல் பிறந்த இவர் 2-7-1566ல் மறைந்தார். இவர் வாழ்வு மிக விசித்திரமான ஒன்று. இவர் கூறிய பலன்கள் பெரும்பாலும் அழிவையும் விபத்துக்களையும் கொலைகளையும் சுட்டிக் காட்டுவதால் சிறிது பயத்துடன்தான் இந்த நூலை அணுக வேண்டியிருக்கிறது. ஆனால் ஹிந்து மதம் மிக உயரிய நிலையை இந்த நூற்றாண்டில் அடையப் போகிறது என்பதையும் இவர்தான் கூறியுள்ளார். லண்டனில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்து, பிரெஞ்சுப் புரட்சி, ஹிட்லரின் எழுச்சியும் வீழ்ச்சியும்,கென்னடியின் கொலை போன்றவற்றை இவரால் எப்படித் துல்லியமாகக் கூற முடிந்தது என்பது ஆச்சரியகரமான விஷயம்தான்!

நாஸ்டர்டாமஸ் சொன்ன கருத்திற்கும் பிரேம சாயிக்கும் உள்ள ஒற்றுமை:
 

மூன்று கடல் கூடும் இடம் என்றால் அது உலகத்தில் ஒரே இடம் தான். அது தென்னிந்தியா மட்டும்தான். சத்ய சாய் பாபாவும் பிரேம சாயி பாபா கர்நாடகாவில் தான் பிறப்பார் என்று கூறியிருக்கிறார்.

அடுத்தது வியாழக்கிழமையை தான் தன் புனித தினமாக அவர் கொண்டாடுவார் எனவும் கூறுகிறது. இந்து மதத்தை தவிர வேறு எந்த மதத்திலும் வியாழக்கிழமை புனித நாளாக பார்க்கப்படுவதில்லை. குறிப்பாக சாயி பக்தர்கள் தான் வியாழக்கிழமையை பாபாவுக்கு உகந்த நாளாகக் கொண்டாடுகிறார்கள்.

சத்ய சாய்பாபாவும் தன்னுடைய உரைகளில் தீர்க்கமாக எதிர்காலத்தை பற்றி பல கருத்துக்களை சொல்லி இருக்கிறார்.

  • விரைவில் சாயி நாமம் உலகம் முழுவதும் ஒலிக்கும்.
  • அனைத்து மதங்களும் ஒன்றிணைந்து அன்பு மதமாக மாறும்.
  • உலகத்தில் வாழும் அனைவரின் இதயத்திலும் இந்த சாயி விரைவில் குடி கொள்ள போகிறேன். அப்போது சாயி மட்டுமே ஒரே கடவுளாக இருக்க போகிறார். 
இதை அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது  நாஸ்டர்டாமஸ் சாய்பாபாவைத்தான் குறிப்பிட்டிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. மூன்றாம் உலக போரின் முடிவில் அவர் தோன்றுவார் என பலர் நம்புகின்றனர். அப்போது நோய்வாய்ப்பட்டவர்களுக்கு நிவாரணம் அளித்து சுய ஆன்மீகத்திற்குள் மனித இனத்தை கொண்டு செல்வார். மனித இனம் அவர்களாலேயே பாதிக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில், கண்டிப்பாக அவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக இந்த தீர்க்கத்தரிசி இருப்பார். அனைத்து வித இன்னல்களுக்கும் அவரே நம்பிக்கையின் ஒளியாக இருப்பார்.


ஒரு சில சாயி பக்தர்கள் பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபா இயேசு உயிர்த்தெழுந்த நாளான ஈஸ்டர் தினத்தில் தன்னுடைய உடலை தியாகம் செய்துள்ளார். அதனால் பகவான் சத்ய சாயி பாபா இந்த உலகை மாற்றியமைக்க மீண்டும் வருவார் என்றும் சொல்கின்றார்கள். மொத்தத்தில் சத்திய சாயியோ அல்லது பிரேம சாயியோ, ஏதோ ஒரு சாயி அவதாரம் இந்த உலகை  மாற்றியமைத்து வழி நடத்தப் போகிறது என்பதில் சாயி பக்தர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஜெய் சாய்ராம்.

தொகுத்து அளித்தவர்:  ராமகிருஷ்ண சர்மா, பெங்களுர்.
சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குருப்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக