தலைப்பு

வியாழன், 4 ஜூலை, 2019

அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் பெனிடோ ரேயஸ்ஸின் அனுபவம்!


ஒருநாள் டாக்டர் பெனிடோ ரேயஸ்ஸும் அவர் மனைவியும் இரு நண்பர்களுடன் காரில் வெளியே போனார்கள். வெளி வேலைகளை முடித்துவிட்டு திரும்பி வந்து, கதவை திறந்து உள்ளே போன போது வீடு முழுவதும் ஒருவித சாம்பல் நிற புகை பரவியிருப்பதை பார்த்தார்கள். உடனே ஒவ்வொரு அறைக்கும் ஓடிப் போய் தீப்பிடித்து இருக்கிறதா என்று பார்த்தார்கள்.

தீ இல்லை.. அவர்கள் அதிசயக்க, மெல்ல மெல்ல புகை கீழே அமிழ ஆரம்பித்தது. நன்றாக அமிழ்ந்த உடன் வீடு எங்கும், தரையிலும், மேஜை நாற்காலி சோபாகளிலும், ஒருவித சாம்பல் நிற பொடி படிந்திருப்பதை பார்த்தார்கள்.

டாக்டர் ரேயஸ் ஒரு விரலால் அந்த பொடியை சற்று வழித்தார் .முகர்ந்து பார்த்தார். பிறகு நா நுனியில் வைத்து ருசிபார்த்தார். அவருக்கு தூக்கி வாரி போட்டது. அத்தனையும் பாபாவின் விபூதி!

டாக்டர் ரேயசுக்கு சிரிப்பு வந்தது. மனசில் பரவசம் ஏற்பட்டது! ஏன் இப்படி ஒரு அற்புதத்தை பாபா நிகழ்த்தினார்? யோசித்து பார்த்தார் டாக்டர். அவருக்கு இரண்டு விஷயங்கள் நினைவுக்கு வந்தன. அந்த டாக்டர் ஒரு பாபா பக்தர். சில தினங்களுக்கு முன்னால் அவர் வீட்டில் உள்ள பாபா படத்தில் இருந்து சிறிது அளவு விபூதி உண்டாகி இருந்தது. அவருக்கு ஒரே பரவசம்!!

 "ரொம்ப குறைவாக கொடுத்து விட்டீர்களே பாபா! விபூதியை நிறைய கொடுங்க! சினேகிதர்களுக்கு எல்லாம் கொடுக்கணுமே!" என்று மனசில் வேண்டிக் கொண்டார். இரண்டாவது பாபாவை அவர் கடைசியாகச் சந்தித்த போது," உங்க மனசுல எதை விரும்புகிறீர்களோ அதை நான் கொடுப்பேன்" என்று பாபா கூறியிருந்தார். அந்த இரண்டு வரங்களும் இப்போது நிறைவேறிவிட்டன. பாபா ஒரு ஹாஸ்ய உணர்வோடு அதை நிறைவேற்றி விட்டார்.

ஆதாரம்: சத்யமே சாயி - ஸ்ரீ வேணு கோபாலன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக