தலைப்பு

வெள்ளி, 5 ஜூலை, 2019

அதே பாபாதான் இவர் - 10 (ஜான் ஹிஸ்லாப்)


107. ஓம் ஸ்ரீ சாயி ஸுலபப்ரஸன்னாய நம:

ஸுலப – எளிதில், 
ப்ரஸன்னாய – சந்தோஷமடைபவருக்கு

திரு. ஜான் ஹிஸ்லாப் ஒரு வெளிநாட்டு பக்தர். அவர் மனைவி மிக சிறிய வயதிலேயே பாபாவினால் கவரப்பட்டார். குழந்தையான அவளது களங்கமில்லாத தூய இதயத்தில், தமது உருவத்தை பதிக்கும்பொருட்டு கியூபாவில் உள்ள ஹவானா என்ற ஊரில் அவள் முன் தோன்றி அவளுக்கு தரிசனம் தந்தார் பாபா. நடக்க கற்றுக் கொண்டிருந்த அந்த பருவத்திலே ஷிர்டி பாபாவாக அவளுக்கு தரிசனம் தந்தார். அவரைக் கண்டதும் “தாதா தாதா” என்று கூறியவாறு தளர் நடையோடு அவரை நோக்கி ஓடிச்சென்றது அந்தக் குழந்தை! பிறகு தயங்கி குழப்பமடைந்து நின்றுவிட்டது. அவளது தந்தை அப்போது வெளிவாயிலில் நின்று கொண்டிருந்தார்.

பல ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் சத்ய ஸாயி பாபாவைக் காண புட்டபர்த்திக்கு வந்தபொழுது அவளுக்கு கியூபாவில் கிட்டிய அனுபவம் உண்மையானது என்று பாபா கூறியபோது எல்லோரும் வியப்பில் ஆழ்ந்தனர். “35 ஆண்டுகளுக்கு முன் அந்த தோட்டத்தின் ஒரு மூலையில் தான் எப்படி நின்று கொண்டிருந்தார், எத்தகைய ஆடைகளை அணிந்து கொண்டிருந்தார்? என்றெல்லாம் பாபா விவரித்தார்”, என்றார் திரு. ஜான் ஹிஸ்லாப். இங்கு அங்கு என்று இல்லாது எங்கெல்லாம் பக்தி அன்பு உள்ளதோ அது எந்த நாடாயினும் எந்த இடமாயினும் அங்கே அவர்களுக்கு எளிதில் காட்சி தருகிறார் இறைவன்.

ஓ சாயி! உள்ளத்தில் அன்பு உடையவருக்கு எளிதில் காட்சி தருபவரே!
உமக்கு எனது வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக