106. ஓம் ஸ்ரீ சாயி ஸாந்த மூர்த்தயே நம:
ஸாந்த – ஸாந்த,
மூர்த்தயே – மூர்த்திக்கு
புட்டபர்த்தியில் ஒரு பண்டிகை தினத்தன்று, இரண்டு பக்தர்களை உடன் அழைத்துக் கொண்டு பாபா சில வீடுகளுக்கு விஜயம் செய்தார். பகவான் தமது இல்லம் தேடிவந்திருக்கிறார் என்று பக்தர்கள் மனம் மகிழ்ந்து அன்புடன் சாப்பிடுவதற்கு பகவானுக்கு சிற்றுண்டிகள் அளித்தனர். பகவானும் அவர்கள் அளித்ததை அன்புடன் உண்டார். கடைசியாக ஒரு வீட்டுக்குச் சென்றார். அங்கு அவர்கள் கொண்டு வந்து வைத்த பண்டங்களை, மற்றவர்கள் சாப்பிடவிடாமல் முழுவதும் தானே சாப்பிட்டார்! பிறகு தான் இருக்கும் இடமான கர்ணத்தின் வீட்டுக்குத் திரும்பினார். அங்கே இருந்த பக்தர்களிடம் தாம் கடைசியாக உட்கொண்ட வீட்டார், தனக்கு விசேட அழைப்பு விட்டதாக கூறி அதன் நோக்கம் என்ன என்பதை ரகசியமாக வெளிப்படுத்தினார். எப்படி?
”விஷம் கலந்த உணவு என்னை எந்த விதத்திலும் பாதிக்காது” என்று கூறி சுவாமி அவர்களது அறியாமையை எண்ணி நகைக்கலானார். சற்று நேரம் கழித்து அவர் உண்ட பொருள்யாவும் முழுமையாக வாந்தி எடுத்து வெளிப்படுத்தினார்! விஷமிட்ட வீட்டினர் அய்யன் காலில் விழுந்து கதறி மன்னிப்புக் கேட்டனர். சுவாமி ஸாந்தமூர்த்தி! அவர்கள் மேல் கோபம் கொள்ளவில்லை! மாறாக “அவர்கள் என்னை சோதிப்பதற்காகத்தான் அம்மாதிரி விஷமிட்ட உணவை அளித்தார்கள். கொல்வதற்காக முயற்சி செய்யவில்லை”, என்று கூறினார்கள்! இறைவனையன்றி யாரால் இவ்வாறு கூற முடியும்?
ஓ சாயி! ஸாந்த ரூபனே!
உமக்கு எனது வணக்கம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக