கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. ராமலிங்கம் அவர்களின் சாயி அனுபவங்கள்.
பாபாவிடம் பக்தி இல்லை என்றாலும் தாயாருக்கு எதை வேண்டுமானாலும் செய்ய அவர் தயாராக இருந்தார். எனவே புட்டபர்த்திக்கு போனார் தன்னுடைய தாயாரைப் பற்றி ஒரு கடிதம் எழுதி பாபாவிடம் கொடுக்க ஆவலோடு அங்கே அமர்ந்திருந்தார். பாபா வந்தார், ஆனால் இவர் நீட்டிய கடிதத்தை கண்டுகொள்ளவில்லை அவர் பாட்டுக்கு போய்க் கொண்டே இருந்தார்.
ராமலிங்கத்திற்கு ஒரே கோபம். அதே சமயம் இப்படி செய்தார் என்று தாயாரிடம் போய் சொன்னால் தனது தெய்வ அருள் இல்லை என்று சோர்ந்து போய் வியாதி முற்றி இறந்து விடுவாளோ... என்ற பயம் எனவே அவர் மனதிற்குள், "பாபா நீங்கள் இந்த கடிதத்தை எடுத்துக் கொள்ளவில்லை, இருந்தாலும் எடுத்துக் கொண்டீர்கள் என்று நான் என் அம்மாவிடம் பொய் சொல்ல போகிறேன்" அப்போதுதான் தெய்வ அருள் தனக்கு இருப்பதாக நம்பி தேறுவாள். சற்று தூரத்திலேயே நடந்து சென்று கொண்டிருந்த பாபா டக் என்று இவர் பக்கமாகத்திரும்பினார் சிரித்துக்கொண்டே அருகில் வந்து அந்த கடிதத்தை கொடுக்கச் சொன்னார். இப்போது திருப்திதானே? என்று சொல்லி திரும்பி போய் விட்டார். இது நடந்த பிறகு ஊருக்கு திரும்பிய ராமலிங்கம் தன்னுடைய தாயார் வெகு விரைவில் உடல் நலம் அடைந்ததை பார்த்து மிகவும் மகிழ்ச்சி ஏற்பட்டது. பாபாவின் மீது நம்பிக்கையும் பக்தியும் பெருகலாயிற்று. எனவே கோவையில் இருந்து LMW ல் ரிடையர் ஆன உடன் புட்டபர்த்திக்கு வந்து ஆசிரமத்திலேயே தங்கி விட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக