தலைப்பு

திங்கள், 29 ஜூலை, 2019

பக்தர் கேட்டவை பாபா அருளியவை - 3


பக்தர் : சுவாமி எல்லா பக்கங்களிலும், நான் தீமையை பார்த்து, அதனால் மிகுந்த குழப்பம் அடைகிறேன்..

பாபா :  இங்கு இந்த வாழைப்பழம் இருக்கிறது. அதன் தோல் நமக்கு உபயோகமில்லாதது. ஆகையால் அது உபயோகமற்றதாகக் கருதப்படுகிறது. அந்த தோல் இல்லாதிருப்பின், உள்ளே இருப்பது காக்கப்பட்டிருக்காது. எதையும் கெடுதலானது என்று கருத்தே. ஒருவன் உனக்கு ஏதேனும் கேடு செய்தால், நீயும் அதை தீமை என்று கருதி, பதிலாக அதையே அவனுக்கு செய்தால், அப்பொழுது நீயும் ஒரு தீயவன் ஆகிறாய். மற்றவர் செய்யும் தீங்கை பாராட்டாமல், நீ நல்வழியிலேயே நிலைத்திருந்தால், அவர்களை திருத்த கூடிய உரிமை உனக்கு உண்டாகிறது.

துர்க்கந்தம் வீசும் ஒரு அறையில், நறுமண பத்தியை ஏற்றி வைத்தால், அந்த நறுமணம், அறையின் துர்கந்தத்தை மாற்றிவிடும். தீய செயல்களுக்கு பதிலாக நற்காரியங்களையும் நல்லெண்ணத்தையும் பரப்பினால், தீமை மாற்றப்படும். நல்லதும் கெட்டதும் காலத்தின் கூத்தே. உணவு அருந்தும் பொழுது அது நல்லதே. காலக்கிரமத்தில் அந்த உணவே ஒரு மாறுதலுக்கு உள்ளாகி கழிக்கப்பட்டு கெடுதலானது என்று சொல்லப்படுகிறது. ஆனால் சத்தியம் அப்படியே மாறாமல் இருக்கிறது. அது கால ஓட்டத்தில் மாறுவது இல்லை. ஆகையால் காலக்கிரமம் என்பது வெறும் கற்பனையே.

ஆதாரம்:  'பகவானுடன் உரையாடல்' என்ற புத்தகத்திலிருந்து...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக