தலைப்பு

திங்கள், 15 ஜூலை, 2019

🌙 சந்திரனும் மனமும்! | பரிபூரணனின் குருபூர்ணிமை உரைத்துளி -4

 🌙 அன்பு முழுமையாக இருந்தால் எல்லாம் முழுமையாக இருக்கும்

இறைவனே ஒரே குரு. அவரின் கீதையே ஞானம் அளிக்கும் ஒரே வழி.. இதோ இறைவனே அந்த ஞானத்தை ஊட்டுகிறார்...

“சந்திரனே மனதிற்கு தலைவன்! மனதின் பிரதிபிம்பமே சந்திரன்! சந்திரன் முழுமையாக இருக்கும்பொழுது பூர்ண சந்திரன் என அழைக்கப்படுகிறது! இதுவே Full Moon, பூர்ணிமா!

இந்த பூர்ணிமா என்ற பெயர் எப்படி வந்தது? எங்கு அரம்பிக்கிறதோ அங்கேயே போய் சேர்வதுதான் பூர்ணிமா! ஒரு இடத்தில் ஆரம்பித்து, வளைந்து சுற்றி ஆரம்பித்த இடத்தில் முடியுபோது பூரணமாகிறது!
இந்த முழுமை ஒரு வட்டமாக இருக்க வேண்டும். அந்த வட்டத்தின் ஒரு பகுதியை அழித்தால் அது அரை வட்டமாக மாறுகிறது. அந்த அரை வட்டமே இவ்வுலக வாழ்க்கை. அது ‘C’ என்கிற எழுத்து போல் காட்சியளிகிறது! இந்த முழுமை பெறாத எழுத்து ‘C’ ‘ஸயின்ஸ்’ என்கிற விஞ்ஞானம் என்றும் சொல்லலாம்! அது ஒரு இடத்தில் ஆரம்பித்து பாதியில் நின்று போகிறது! விஞ்ஞானத்தில் இன்று புதியதாக இருப்பது நாளை பழையதாக மாறிப்போகிறது. மற்றொரு நாள் ஒரு புதிய கண்டுபிடிப்பு வருகிறது.

பூர்ணம் என்பது அப்படிப்பட்டது அல்ல! நிரந்தரமான, முழுமையான பூர்ணம் அது! அதே போல மனதில் முழுமையான அன்பு நிரம்பும்போதுதான் அன்று ‘பூர்ணிமா” என்று நம்மால் அழைக்கத் தகுதியான நாளாகும். அதுவே குரு பூர்ணிமா!

இன்னொரு அர்த்தம், யார் ஒருவர் அஞ்ஞான இருளை (கு) விலக்குகிறாரோ (ரு) அவரே குரு. காரணம், பூர்ணிமை தினத்தில் இருளே கிடையாது. பூர்ணிமா இருளை நீக்குகிறது. அஞ்ஞான இருளை முழுதாக விலக்கும் நாளே குரு பூர்ணிமை. ஆகையால் இதயம் முழுவதையும் அன்பினால் நிரப்ப வேண்டும். அது முழுமையாக இருந்தால் எல்லாம் முழுமையாக இருக்கும்.

அப்படிப்பட்ட முழுமையை அனுபவிக்க வேண்டுமென்றால் இதயம் முழுவதும் அன்பு நிரம்பித் ததும்ப வேண்டும்! அது உண்மையான பக்தியுடன் செய்யும் சரணாகதியினால் மட்டுமே சாத்தியமாகும்!”

- பகவான் பாபா, (குருபூர்ணிமா, 22.07.1994)

🌻 பௌர்ணமிக்கே முழுமை ஒளி தந்து ஒளிர வைக்கும்... பக்தர் இதயத்தைக் குளிர வைக்கும் பரம்பொருள் சத்யசாயியை தவிர வேறெவரால் குரு பூர்ணிமாவுக்கு இப்படி ஒரு அனுபூதி விளக்கத்தை தந்துவிட முடியும்? 🌻


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக