ஒவ்வொரு ஜீவனுக்கு உள்ளோம் நான் தான் இருக்கிறேன் என்று பாபா பலமுறை சொல்லியிருக்கிறார். பாபாவை நேசிக்கும் நாம், ஒரு சில நேரங்களில் தெரிந்தோ தெரியாமலோ நாய், பூனை போன்ற ஜீவராசிகளை வெறுக்கின்றோம். ஒரு சிலர் தங்கள் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளுக்கு அளவு கடந்த அன்பை காண்பிப்பார்கள். அவர்களே அவர்களின் வீட்டின் வெளியே இருக்கும் தெரு நாயை கல்லெடுத்து அடிப்பார்கள். இவ்வாறு செய்யக் கூடாது. நம்மால் முடிந்த வரை அன்பை பாரபட்சம் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளுக்கும் காண்பிக்க வேண்டும். இதனை வலியுறுத்தும் விதமாக பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவத்தைப் பார்ப்போம்...
தலைப்பு
- பக்தர்களின் அனுபவங்கள்
- சாயி லீலைகள்
- பிரபலங்களின் அனுபவங்கள்
- அருளுரைகள்
- பக்தரின் கேள்விக்கு பாபாவின் பதில்
- ஸ்ரீ கிருஷ்ணரே ஸ்ரீ சத்ய சாயி
- அதே பாபாதான் இவர்
- சாயி அவதாரம் பற்றி மகான்கள்
- செய்திகள்
- அவதாரப் பேரறிவிப்புகள்
- கேள்வி-பதில் (FAQs)
- சர்வதேவதா ஸ்வரூபன்
- மற்றவை
- சாயி தொடர்கள்
- eBooks
- விழாக்கள்
- புண்ணியாத்மாக்கள்
- பிரேம சாயி பாபா
- பிரசாந்தி நிலையம்
- சாயி அற்புதங்கள் (2011 பிறகு)
- MP3 ஆடியோக்கள்
- அரிய பொக்கிஷங்கள்
- சாயி சத்சங்கம்
- சத்ய சாயி நாடிகள்
- 9 நன்னடத்தை நெறிகள்
- சாய்பாபா கடவுளா?
- தெய்வீக நிகழ்வுகள்
- கவிதா வாஹினி
- சத்ய சாயி 108 / 1008
- பொன்மொழிகள்
- Audiobook
- வீடியோக்கள்
- ஸ்ரீ சத்ய சாயி கவசம்
- HD போட்டோஸ்
- சித்திரம் பேசுதடி
- சின்னக் கதை - சாயி விதை
- சுவாமியின் கவிமொழி
- பஜனைப்பாடல்கள்
- விவாஹ சேவா
- ஶ்ரீ சாயி நந்தவனம்
புதன், 31 ஜூலை, 2019
பக்தர் கேட்டவை பாபா அருளியவை -4
பாபா: கடவுள் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் குடியிருப்பதால், எந்த மனிதனும் முற்றிலும் தீயவன் அல்ல. ஒரு தாயும் மகனும் சொத்திற்காக நீதி மன்றத்தில் சண்டையிட்டு கொள்ளலாம். ஆனால் தாய், மகன் என்ற உறவு நீடிக்கிறது. இரண்டு வெவ்வேறு வீடுகளில் வசிப்பவர்கள், ஒருவரை ஒருவர் வெறுக்கிறார்கள். ஒவ்வொருவனும் தன் வீட்டின் நுழைவாயிலில், பாபாவின் படம் ஒன்றை வைத்திருக்கிறான். அந்த வீட்டை உடலுக்கு ஒப்பிடலாம்.
செவ்வாய், 30 ஜூலை, 2019
கன்னம் சிவந்த கண்ணன்!
இளம் சாயி வாழ்விலிருந்து ஒரு சம்பவம்..
பள்ளிக்கூடத்தில் சத்யா புத்திசாலி மாணவனாக இருந்ததால் ஆசிரியர் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்னான். ஒருநாள், “இந்தியாவின் பெருமையை விவரி?’ என்ற கேள்வியைக் கேட்டார் ஆசிரியர். அதுவும் பதிலை ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும்.
புக்கபட்டினம் மாணவர்களின் ஆங்கில அறிவு ரொம்ப குறைவு. அதுவும் இந்தியாவைப் பற்றிய அறிவோ மேலும் குறைவு.
திங்கள், 29 ஜூலை, 2019
பக்தர் கேட்டவை பாபா அருளியவை - 3
பக்தர் : சுவாமி எல்லா பக்கங்களிலும், நான் தீமையை பார்த்து, அதனால் மிகுந்த குழப்பம் அடைகிறேன்..
பாபா : இங்கு இந்த வாழைப்பழம் இருக்கிறது. அதன் தோல் நமக்கு உபயோகமில்லாதது. ஆகையால் அது உபயோகமற்றதாகக் கருதப்படுகிறது. அந்த தோல் இல்லாதிருப்பின், உள்ளே இருப்பது காக்கப்பட்டிருக்காது. எதையும் கெடுதலானது என்று கருத்தே. ஒருவன் உனக்கு ஏதேனும் கேடு செய்தால், நீயும் அதை தீமை என்று கருதி, பதிலாக அதையே அவனுக்கு செய்தால், அப்பொழுது நீயும் ஒரு தீயவன் ஆகிறாய். மற்றவர் செய்யும் தீங்கை பாராட்டாமல், நீ நல்வழியிலேயே நிலைத்திருந்தால், அவர்களை திருத்த கூடிய உரிமை உனக்கு உண்டாகிறது.
வெள்ளி, 26 ஜூலை, 2019
பாபாவின் மீது கல்லெறிந்தவனுக்கு பாபா நிகழ்த்திய அற்புதம்!
பாபா பக்தர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்தபோது, பாபாவை நம்பாத
பாபாவை நோக்கி ஒரு கருங்கல்லை எறிந்தான். எறிந்த கல் என்னாயிற்று? பின்பு எறிந்தவனுக்கு பாபா எவ்வாறு பாடம் புகுத்தினார் என்ற சுவாரசிய உண்மை சம்பவத்தை இந்த பதிவில் பார்ப்போம்.
பகவான் பாபாவை நம்பாத ஒரு கூட்டம் இருந்தது. அவர்கள் பாபாவைக் கலாய்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு முறை புட்டபர்த்திக்கு வந்தார்கள்.
வியாழன், 25 ஜூலை, 2019
🏔️ சாதனை படைத்த சாயி மாணவர்கள்!
சாய்ராம், ஶ்ரீ சத்தியசாயி பள்ளியின் இரண்டு பழைய மாணவா்கள் ஸ்டாக் காங்ரீ எனும் உயரமான சிகரத்தினை ஏறி அடைந்துள்ளனா். ஸ்டாக் காங்ரீ என்பது உயரமான மலைப் பிரதேசம் ஆகும்.வட இந்தியாவை சாா்ந்த இமாலயத்திள்ள லடாக் பிரதேத்தில் உள்ள விஸ்தீரண பரப்பாகும். இதன் உச்சி தென்மேற்கு பகுதியில் உள்ள ஹெமிஸ் நேஷனல் பாா்க் எனப்படும் இடத்திலிருந்து 12கி.மீ தொலைவிலும்,லடாக்கின் தலைநகரான தென்மேற்குபகுதியில் அமைந்துள்ள லே எனப்படும் நகரத்தில் அமைந்துள்ள ஸ்டாக் கிராமத்தின் அடிச்சுவட்டிலிருந்து 15 கி. மீ தொலைவிலும் உள்ளது. இவ்வருடத்தில் முதல் இந்திய குழுவாக ஶ்ரீ சத்திய சாயி உயா்கல்வி பள்ளியினை சாா்ந்த பழைய மாணவா்கள் இந்த சிகரத்தின் உச்சியினை அடைந்துள்ளாா்கள். இருவரும் புட்டபர்த்தியில் உள்ள சுவாமியின் பள்ளியில் 2010ம் ஆண்டு வரை படித்து வெளிவந்த மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிகர ஏற்றத்தினை அடைந்திட்ட செயல்பாட்டினை அவா்களது அன்புக்குரிய தெய்வமான ஶ்ரீ சத்திய சாயி பாபாவிற்கு அா்ப்பணித்துள்ளனா். உண்மையில் இது சாயி சகோதரத்துவத்தின் பெருமைக்குரிய நிகழ்வாக அமைந்துள்ளது.
-சத்ய சாயி யுகம் வாட்ஸ்அப் குருப்
செவ்வாய், 23 ஜூலை, 2019
டாக்டர் பானர்ஜியும் கொல்கத்தா ரசகுல்லாவும்!
டாக்டர் பானர்ஜி என்பவர் பெங்களூரில் உள்ள புகழ்பெற்ற இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் இல் பேராசிரியராக இருந்தவர். பாபாவிடம் சிறிதும் நம்பிக்கை இல்லாமல் இருந்தவர். போகப்போக தீவிரமான பக்தராகிவிட்டார். ஒருமுறை தன்னுடைய குடும்பத்தோடும் நண்பர்களோடும் புட்டபர்த்திக்கு சென்றார். நண்பருடைய மகனுக்கு தீராத வியாதி ஒன்று இருந்தது. பகவான் பாபா விபூதியை கொடுத்து குணப்படுத்தி விட்டார். பின்பு குழந்தைகள் வந்திருக்கிறார்களே அவர்களுக்கு சீரியசாக பேசினால் பிடிக்குமா? எனவே அவர்களுக்காக ஒரு ஸ்வீட் செய்கிறேன் என்று உள்ளங்கையை சுழற்றினார். அவர் கையிலிருந்து ரசகுல்லாக்கள் வந்தன. அதில் இரண்டு விசேஷங்கள். 1) அவை தென்னிந்தியாவில் கிடைக்கும் வகை அல்ல, வங்காளத்தில் மட்டுமே கிடைக்க கூடியது. 2)அவற்றை கையில் எடுத்ததும் பிசு பிசு வென்று நெய் ஒட்டிக் கொள்ளும். ஆனால் பாபா அவற்றை உண்டாக்கிய போது அவருடைய கையில் பிசுபிசுப்பு இல்லை. இதை இப்பொழுதே சாப்பிடாதீர்கள், வீட்டிற்கு எடுத்துக்கொண்டு போய் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்து சாப்பிடுங்கள் என்றார் பாபா!!
ஆதாரம்: பிரசாந்தி ரிப்போர்ட்டர்
ஞாயிறு, 21 ஜூலை, 2019
உணவு பாத்திரத்தை அட்சயபாத்திரமாக மாற்றிய சாயி பகவான்!
1987 கூடலூர் சமிதியில் பகவான் பிறந்த நாள் விழா அன்று குழந்தைகளின் பாலவிகாஸ் கலை நிகழ்ச்சிகள் முடிந்ததும், பெரியவர்கள் பகவானின் ஸ்தாபனங்கள் குறித்தும் லீலைகள் குறித்தும் அவரவர்களுடைய அனுபவங்களை பற்றி பேசினார்கள். அன்றைய தினம் சுமார் 150 பேர்கள் விழாவில் கலந்து கொண்டார்கள் என கணக்கிட்டு எல்லோருக்கும் அன்னதானம்( நாராயண சேவை) செய்ய ஏற்பாடு செய்திருந்தோம். பிறகு நாராயண சேவை நடந்து கொண்டிருந்த பொழுது முதல் பந்திலேயே அதிக அளவில் மக்கள் கலந்து கொண்டனர். எல்லோரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம். இது நாள் வரை இவ்வளவு பேர்கள் சமிதி நாராயண சேவையில் பங்கேற்றதில்லை. நான் சமிதிக்கு வெளிப்பக்கம் வந்தவர்களை வரவேற்று உணவு படைப்பதை கவனித்துக் கொண்டிருந்தேன். சமையல் வேலைகளை சமிதியின் மகிளா அங்கத்தினர்களே கவனிப்பார்கள்.
சனி, 20 ஜூலை, 2019
உண்மையாக மற்றும் ஆத்மார்த்தமாக பிரார்த்திக்கும் பக்தனுக்கு பகவான் கட்டாயம் பதில் உழைப்பார்!
சுவாமி உகாண்டா சென்று திரும்பிய பிறகு அங்கிருந்து இந்தியாவில் உள்ள ஜாம்நகருக்கு வந்த ஒரு மனிதர், தான் எவ்வாறு பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் பக்தராக மாறினார் என்ற கதையை என்னிடம் கூறினார்...
அம்மனிதர் மருத்துவர் சி.ஜி. பட்டேலின் இல்லத்திற்கு தன் மனைவியை அழைத்து செல்வது வழக்கம். ஆனால் அவருக்கு பாபாவை தரிசனம் செய்யும் எண்ணமில்லை. தன்னுடைய நெருங்கிய நண்பனுடைய நீரிழிவு நோயைக் குணமாக்கியதை கேட்டும், மற்றும் பாபாவின் அதிசய சக்திகளை பற்றிய கதைகளை பிறர் கூறக் கேட்டும், அந்நபருக்கு பாபாவின் மேல் ஒரு ஈர்ப்பு வந்தது. அடுத்த நாள் காலையில் என்டிவி விமான நிலையத்திலிருந்து பாபா புறப்படுவதாக இருந்தார். அந்த நபரும் அடுத்த நாள் காலையில் பாபாவை தரிசனம் செய்ய என்டிவி விமான நிலையம் சென்றார். அந்த விமான நிலையம் 40கி.மீ தொலைவில் இருந்தது. அந்த விமான நிலையத்திற்கு எவ்வளவு விரைவில் செல்ல வேண்டுமோ அவ்வளவு விரைவில் செல்ல வேண்டி இருந்தது.
அவர் சுமார் 24கி.மீ தொலைவு கடந்து இருந்தபோது, பல பக்தர்களுடைய சீருந்து விமான நிலையத்தில் இருந்து திரும்பி வந்து கொண்டிருந்தன. அதில் ஒரு சீருந்தை நிறுத்தி, அதன் ஓட்டுநரிடம், "சுவாமியின் விமானம் கிளம்பி விட்டதா"? என்று கேட்டார். அதற்கு அவர் ஆம், சில நிமிடங்களுக்கு முன் கிளம்பி விட்டது எனக் கூறினார். இதைக் கேட்டு அந்த நபர்,தான் சுவாமியின் தரிசனம் செய்யும் வாய்ப்பை இழந்து விட்டதை எண்ணி மிகுந்த ஏமாற்றம் அடைந்தார். அவர் உடனடியாக பாபாவிடம் மனதில் உண்மையான அன்போடு, பிரார்த்தனை செய்தார். நான் உங்களுடைய ஆசியை பெறவே வந்திருந்தேன். உங்களுடைய பெருமைகளை கடைசி தருணத்தில் தான் நான் உணர்ந்து கொண்டேன். இது உங்கள் சங்கல்பம். நான் மிகவும் துரதிஷ்டசாலியான மனிதன். தற்போது நீங்கள் என் இதயத்தில் இருக்கிறீர்கள். என்னுடைய வாசல் கதவில் உங்களுடைய இருப்பை தவற விட்டதற்காக வருந்துகிறேன்.
இவ்வாறு வருத்தப்பட்டுகொண்டே, விமானநிலையம் சென்று தன் அன்பை காட்டும் விதமாக, வாயிற்கதவை தொட்டு முத்தமிட்டார். என்ன ஆச்சரியம்!! பாபா புறப்பட்ட விமானம்(ஈஸ்ட் ஆப்பிரிக்கன் ஏர்லைன்ஸ்) திரும்பி வருவதாகவும், இன்னும் சற்று நேரத்தில் தரை இறங்கப் போவதாகவும் ஒரு அறிவிப்பு வெளியானது.
ஒருவர் இதை தற்செயலான செயல் என்று கூறலாம். ஆனால் இந்த மனிதருக்கு எல்லை கடந்த ஆனந்தம் உண்டானது. ஆனந்த கண்ணீருடன் சுவாமியை தரிசனம் செய்தார். விரைவில் அந்த விமானத்தில் இருந்த தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டது. மீண்டும் அனைத்து பயணிகளையும் ஏற்றிக்கொண்டு விமானம் தன் பயணத்தை தொடர்ந்தது.
"இறைவன் பயணம் செய்யும் விமானத்தில் கோளாறு ஏற்படுமா? என்று ஒருவர் கேட்கலாம். உண்மையில் இறைவன் அனைவருடைய பிரார்த்தனைகளையும் கேட்டு, உண்மையாக மற்றும் ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்யும் பக்தனுக்கு பதிலளிக்கிறார்...
ஆதாரம்: மருத்துவர் தி.ஜ.காடியா எழுதிய 'சாய் ஸ்மரண்' என்ற புத்தகத்திலிருந்து...
வெள்ளி, 19 ஜூலை, 2019
☎️ தொலைபேசி வாயிலாக விபூதி கொடுத்த சாயி பகவான்!
பெங்களூரைச் சேர்ந்த பிரபல டாக்டர் திரு. RS பத்மநாபன் அவர்களின் சாயி அனுபவங்கள்.
பெங்களூரில் வசிக்கின்ற டாக்டர் பத்மநாபன் ஒரு புகழ்பெற்ற பல்மருத்துவர். அதைவிட முக்கியமாக பகவான் பாபாவின் தீவிர பக்தர். அவர் மூலமாக அவர் குடும்பத்தாரும் பக்தர்கள் ஆகிவிட்டார்கள். அதிலும் அவர் மூத்த சகோதரி புட்டபர்த்தியில் தங்கி விடுவதாக தீர்மானம் செய்தார். அவ்வாறு இருக்கும்போது அவர்களுக்கு கண் பார்வை மங்கிக்கொண்டே வந்தது. இதை பாபாவிடம் சொன்னபோது, இது ஒன்றும் இல்லை. கண்புரை நோய் தான். சில நிமிடங்களில் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம். பெங்களூரில் உன்னுடைய சகோதரன் வீட்டிற்கு போ. வேண்டிய ஏற்பாடுகளை அவர் செய்வார். தைரியமாக இரு, இந்தா விபூதி என்று விபூதியை சிருஷ்டித்து அந்த அம்மாள் கையில் கொடுத்தார் பாபா. அந்த டாக்டர் சகோதரர்களை அழைத்து, சகோதரியை அழைத்துக் கொண்டு போக சொன்னார். அந்த அம்மாவும் பெங்களூருக்கு சென்றார்.
✋ எங்கு நாம் சுவாமியை காணலாம்?
நேர்காணல் அறையில் ஒரு பக்தர் கேட்ட கேள்விக்கு பகவான் சத்ய சாயி பாபா அருளிய பதிலை பார்ப்போம்.
சுவாமி: ஞாபகத்தில் கொள்ளுங்கள், சாயி
கல்லில் செதுக்கப்பட்ட அல்லது செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்ட உருவத்தில் இருப்பதில்லை.
அவா் சா்வவியாபகமாய் பரந்த அன்புடைய மனமுவந்த தயையுடன் கூடிய இனிய நறுமணத்தோடு கூடிய இரக்கமுள்ள இதயங்களில் இருக்கிறாா். எனது இல்லம் உங்களது இதயங்களே. எனது பிரசாந்தி நிலையம் உங்களுள் உள்ளது.
உங்களது இதயத்தில் எனை காணுங்கள். உங்களது மனதால் பாத நமஸ்காரம் செய்யுங்கள். நோ்முக பேட்டி அளித்திட கேட்காதீா்கள்.நோ்முக பேட்டி எட்டிய தூரத்தில் இருப்பது போன்ற தோற்றத்தினை தரும். அதற்குபதிலாக உள்ளடங்கிய தோற்றத்தினை கேளுங்கள். அதுவே உடனடியான தோற்றத்தினை அளிக்கும் அல்லது உடனடியான தெய்வீக தோற்றத்தை காணலாம்.
வியாழன், 18 ஜூலை, 2019
பக்தர் கேட்டவை பாபா அருளியவை - 1
பாபா: சமதையானவர்களிடம் இரப்பது உன்னை தாழ்த்தியும், அவனை உயர்த்தியும் விடுகிறது. ஆனால் கடவுளிடம் உன் கோரிக்கையை கேட்கும் பொழுது, நீ கடவுளின் நிலைக்கு உயர்ந்து விடுகிறாய். இறைவனிடம் இறைஞ்ச வேண்டும், கடவுளிடம் வேண்டுதல் என்பது மிகவும் சரியான செயல். அது பிச்சை கேட்பது ஆகாது.
வெட்கம் வேண்டாம்!
"திருப்பதிக்கோ புட்டபர்த்திக்கோ செல்லும் போது யாராவது எங்கு செல்கிறீர்கள் என கேட்டால் அதனை வெட்கப்படும் விஷயமாக கருதுகிறார்கள்; அதற்கு பதிலாக, அவர்கள் தாங்கள் பெங்களூருக்கு செல்வதாக கூறுகிறார்கள். எவ்வளவு பலவீனமானவன் அவன்! எதற்காக இவ்வாறான சிறிய விஷயங்களுக்கு பொய் கூற வேண்டும்? ஸ்வாமியை காணத்தான் நீ புட்டபர்திக்கு செல்கிறாய் என்று சொல்வதில் ஏன் வெட்கப்பட வேண்டும்?
ஆழ்ந்த நம்பிக்கை மற்றும் தைரியத்துடன் சமுதாய சேவையில் ஒருவன் ஈடுபடவேண்டும். அப்படிப்பட்ட தைரியமான உணர்வுடன் ஒருவன் எவ்வகையான சேவையையும் ஆற்ற சமுதாயதிற்குள் உட்புக வேண்டும்."
- பகவான் பாபா (அகில உலக இளைஞர் மாநாடு, 1997)
புதன், 17 ஜூலை, 2019
கடவுள் தரும் துன்பங்கள் நன்மைக்கே!
இளம் சாயி வாழ்விலிருந்து ஒரு சம்பவம்..
பல ஆண்டுகளுக்கு முன்பு பகவான் பாபா பழைய மந்திர் என்று அழைக்கப்பட்ட சிறு வீட்டில் வாழ்ந்து வந்தார். அவருடைய மகிமையை உணர்ந்த பலர் அங்கு அவருடன் வசித்து வந்தனர். ஆனால் சிலர் அவரை நம்பாமல் அந்த சிறுவன் மக்களை ஏமாற்றுகிறார், அவர் தவறு செய்யும் பொழுது, அதை காட்டிக் கொடுக்க வேண்டும் என்று தீவிரமாக விரும்பினார்கள். அத்தகைய சிலர் பிறவியிலேயே ஊமையாக இருந்த ஒரு சிறுவனை அவரிடம் அழைத்து வந்தார்கள். நீ தான் பெரிய தெய்வீக சக்தி உடையவனாயிற்றே, இந்த சிறுவனின் குறையை போக்கி அவனை பேச வையுங்கள் பார்க்கலாம் என்றார்கள். பகவான் மிகுந்த அன்புடனும் பொறுமையுடனும் நீங்கள் விரும்பும்படி எல்லாம் அற்புதங்களை செய்ய முடியாது. அவனுடைய கர்மா அதற்கு ஒத்துழைக்க வேண்டும். மிகவும் வலுவான கர்ம விளைவுகளை அனுபவிக்க வேண்டுமென்றால் அனுபவித்தே தீர வேண்டும் என்றார்.
திங்கள், 15 ஜூலை, 2019
ஞாயிறு, 14 ஜூலை, 2019
பிரேம சாயி அவதாரத்தைப் பற்றி நாஸ்டர்டாமஸின் கணிப்பு!
சத்ய சாய்பாபா பக்தர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் பிரேம சாயி அவதாரத்தை பற்றிய பதிவுதான் இந்த வீடியோ. பிரேம சாயி பாபாவின் வருகையைப் பற்றி 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாஸ்டர்டாமஸ் அவருடைய புத்தகத்தில் மறைமுகமாக குறிப்பிட்டு இருக்கிறார். அதனை பிரபல தமிழ் யூடுபர் மதன் கௌரி இந்த வீடியோவில் விரிவாக பேசியுள்ளார்.
சனி, 13 ஜூலை, 2019
பௌத்தர்களின் தலைமை பொறுப்பினை ஏற்கப்போகும் சாயி மாணவன்!
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் பக்தர்களான டார்ஜிலிங்கை சேர்ந்த பெமா வாங்டி & சஞ்சு ராய் தம்பதிகளுக்கு தாவா வாங்டி என்ற 9-வயது(2015ல்) மகன் இருக்கின்றான். 2015 ஆரம்பத்தில் இந்தத் தம்பதிகளுக்கு தலாய் லாமாவின் அலுவலகத்திலிருந்து பதிநான்காம் தலாய் லாமா கையொப்பமிட்டு சீல் வைக்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்று வந்தது.
வெள்ளி, 12 ஜூலை, 2019
இறைவனே உண்மை குரு! | பரிபூரணனின் குருபூர்ணிமை உரைத்துளி-1
“குருபூர்ணிமை என்ற பெயரில் பூஜைகள் செய்கின்றனர். சிலரை குரு எனக் கொண்டு வழிபடுவதன் மூலம் நேரத்தை வீணாக்குகின்றனர். இருப்பது ஒரு குருவே; அது இறைவனே! அந்த குரு வேறு எங்கும் இல்லை; உங்கள் உள் உறைகிறார்! உலகெங்கும் குருவை தேடி அலைகின்றனர். பிரம்மா, விஷ்ணு மற்றும் மஹேஸ்வரன் வடிவில் முக்குணங்கள் உங்களுள் இருகின்றன. அவை உங்களை காத்து, உயர்த்தி அல்லது அழிக்கின்றன. நீங்கள் தர்ம வழியில் நடந்து நேர்வழி சென்றால், அக்குணங்கள் தனது விஷ்ணுத்துவத்தால் (தெய்வீகத் தன்மையால்) உங்களை காக்கும்.”
- பகவான் பாபா (குருபூர்ணிமா, 29.07.1988)
வியாழன், 11 ஜூலை, 2019
அன்னைக்கு அருள் செய்து ஆட்கொண்ட ஆண்டவன்!
கோயம்புத்தூரைச் சேர்ந்த திரு. ராமலிங்கம் அவர்களின் சாயி அனுபவங்கள்.
புதன், 10 ஜூலை, 2019
காயத்ரி மந்திர ஜபத்தை விட்டு விடாதீர்கள்! - பாபா
ஓம் பூர்புவஸ்ஸுவஹ
தத்சவிதுர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோயோ ந: ப்ரசோதயாத்
செவ்வாய், 9 ஜூலை, 2019
நறுமண கேசமும் நழுவிய சந்தேகமும்..!
கேரளத்தைச் சேர்ந்த சாயி அன்பர் திரு. ஸ்வப்னா ரகுவின் சாயி அனுபவங்கள்.
ஸ்வப்னா ரகுவின் தந்தை ஆப்பிரிக்காவில் வேலை பார்த்தார். தந்தையுடன் சென்ற ஸ்வப்னா அங்கு பகவான் ஸ்ரீ சத்ய சாய் நிறுவனங்கள் நடத்திய பாலவிகாஸ் குழந்தைகளின் ஆசிரியராக பணியாற்றி வந்தார். அப்போது புட்டபர்த்தியில் அனைத்து உலக பாலவிகாஸ் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததது. அதில் பங்குகொள்ள ஸ்வப்னாவின் தலைமையில் 2 மாணவர்கள் இந்தியாவிற்கு வந்தார்கள். அப்படி வந்த போது அந்த மாணவர்கள் பகவானைப் பற்றி தவறாக புரிந்து கொண்டு தமக்குள்ளேயே பேசிக்கொண்டார்கள். அதாவது பகவான் பாபா உண்டாக்கும் பொருட்கள் எல்லாம் முதலிலேயே அவரது ஜிப்பாவில் ஒளித்து வைக்கப்பட்டவை என்று நினைத்தார்கள்.
ஏன் குறிப்பிட்ட ஒரு சில வீடுகளில் உள்ள படங்களில் மட்டும் பாபா விபூதி வரவழைக்கிறார்?
நான் நீண்ட நாட்களாக சத்ய சாயி பாபாவை கும்பிட்டு வருகிறேன். ஒரு சில பக்தர்களின் வீடுகளில் உள்ள பாபாவின் படத்தில் மட்டும் பாபா விபூதி மற்றும் குங்குமம் வரவழைக்கிறார். ஏன் குறிப்பிட்ட ஒரு சில பக்தர்களின் வீடுகளில் மட்டும் பாபா இவ்வாறு செய்கின்றார்?நானும் தான் "எல்லாம் பாபா" என்று வாழ்ந்து வருகிறேன். எங்கள் வீட்டில் எல்லாம் இதுபோன்று அற்புதம் செய்ய மாட்டாரா?
திங்கள், 8 ஜூலை, 2019
கிழவர் ரூபத்தில் உதவிய சத்ய சாயிபாபா!
வால்பாறை டாக்டர். எஸ். எஸ். வி. கிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்துகொண்ட பாபாவின் அற்புதம் ஒன்று..
டாக்டருக்கு ஒரு நண்பர். அவர் ஒரு புதிய கார் வாங்கினார். முதல் விஜயமாக புட்டபர்த்திக்கு தான் சென்று வர வேண்டும் என்று தீர்மானம் செய்தார். அதே பிரகாரம் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் புறப்பட்டுவிட்டார். பெங்களூருக்கு வரும் பொழுது இருட்ட ஆரம்பித்துவிட்டது. ஒரு நூறு மைல் தானே போய்விடலாம் என்று தொடர்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டு போனார். சுமார் இரவு ஒன்பது மணி ஆனபோது பெட்ரோல் சுத்தமாக தீர்ந்துவிட்டது. ஒரே கும்மிருட்டு பாதையும் தெரியவில்லை. பெட்ரோலும் இல்லை. தங்குவதற்கு எந்த இடமும் இல்லை. குழந்தைகள் அழ ஆரம்பித்து விட்டார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார் நண்பர்.
ஞாயிறு, 7 ஜூலை, 2019
ஸ்ரீ சத்ய சாயி அஷ்டோத்தர சத நாமாவளி (சத்ய சாயி 108)
பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா அஷ்டோத்தர சத நாமாவளி
1. ஓம் ஸ்ரீ பகவான் சத்ய சாயி பாபாய நம:
2. ஓம் ஸ்ரீ சாயி சத்ய ஸ்வரூபாய நம:
3. ஓம் ஸ்ரீ சாயி சத்ய தர்ம பராயணாய நம:
4. ஓம் ஸ்ரீ சாயி வரதாய நம:
5. ஓம் ஸ்ரீ சாயி சத் புருஷாய நம:
6. ஓம் ஸ்ரீ சாயி சத்ய குணாத்மனே நம:
7. ஓம் ஸ்ரீ சாயி சாது வர்தனாய நம:
8. ஓம் ஸ்ரீ சாயி சாது ஜன போஷணாய நம:
9. ஓம் ஸ்ரீ சாயி சர்வக்ஞாய நம:
10. ஓம் ஸ்ரீ சாயி சர்வ ஜன ப்ரியாய நம:
11. ஓம் ஸ்ரீ சாயி சர்வ சக்தி மூர்த்தயே நம:
12. ஓம் ஸ்ரீ சாயி சர்வேசாய நம:
சனி, 6 ஜூலை, 2019
சகிப்புத்தன்மை (Tolerance) | பாபாவின் வாழ்விலிருந்து ஒரு சம்பவம்!
பல வருடங்களுக்கு முன்னால் புட்டபர்த்தியில் இருந்த தொடக்கப்பள்ளி (பிரைமரி ஸ்கூல்) மாணவர்கள் காலையில் குளிர்ந்த நீரில் தான் நீராடுவர். சுவாமி மனம்வருந்தி, "இந்த குழந்தைகளின் பெற்றோர் என்னிடம் கொண்ட அளவற்ற நம்பிக்கையினால் இந்த இளம் குழந்தைகளை எனது பராமரிப்பில் விட்டு சென்றிருக்கிறார்கள். பாவம், உடல் நடுங்க அவர்கள் தினமும் நீராட வேண்டியுள்ளது" என்று நினைத்தார்.
வெள்ளி, 5 ஜூலை, 2019
அதே பாபாதான் இவர் - 10 (ஜான் ஹிஸ்லாப்)
107. ஓம் ஸ்ரீ சாயி ஸுலபப்ரஸன்னாய நம:
ஸுலப – எளிதில்,
ப்ரஸன்னாய – சந்தோஷமடைபவருக்கு
திரு. ஜான் ஹிஸ்லாப் ஒரு வெளிநாட்டு பக்தர். அவர் மனைவி மிக சிறிய வயதிலேயே பாபாவினால் கவரப்பட்டார். குழந்தையான அவளது களங்கமில்லாத தூய இதயத்தில், தமது உருவத்தை பதிக்கும்பொருட்டு கியூபாவில் உள்ள ஹவானா என்ற ஊரில் அவள் முன் தோன்றி அவளுக்கு தரிசனம் தந்தார் பாபா. நடக்க கற்றுக் கொண்டிருந்த அந்த பருவத்திலே ஷிர்டி பாபாவாக அவளுக்கு தரிசனம் தந்தார். அவரைக் கண்டதும் “தாதா தாதா” என்று கூறியவாறு தளர் நடையோடு அவரை நோக்கி ஓடிச்சென்றது அந்தக் குழந்தை! பிறகு தயங்கி குழப்பமடைந்து நின்றுவிட்டது. அவளது தந்தை அப்போது வெளிவாயிலில் நின்று கொண்டிருந்தார்.
வியாழன், 4 ஜூலை, 2019
அமெரிக்காவை சேர்ந்த டாக்டர் பெனிடோ ரேயஸ்ஸின் அனுபவம்!
ஒருநாள் டாக்டர் பெனிடோ ரேயஸ்ஸும் அவர் மனைவியும் இரு நண்பர்களுடன் காரில் வெளியே போனார்கள். வெளி வேலைகளை முடித்துவிட்டு திரும்பி வந்து, கதவை திறந்து உள்ளே போன போது வீடு முழுவதும் ஒருவித சாம்பல் நிற புகை பரவியிருப்பதை பார்த்தார்கள். உடனே ஒவ்வொரு அறைக்கும் ஓடிப் போய் தீப்பிடித்து இருக்கிறதா என்று பார்த்தார்கள்.
பாபாவுக்கு விஷம் கலந்த உணவை கொடுத்து சோதிக்க நினைத்த குடும்பம்!
106. ஓம் ஸ்ரீ சாயி ஸாந்த மூர்த்தயே நம:
ஸாந்த – ஸாந்த,
மூர்த்தயே – மூர்த்திக்கு
புதன், 3 ஜூலை, 2019
செவ்வாய், 2 ஜூலை, 2019
ஓ சாயி! ஆபத்துக்களை போக்கி உயிரைக் காப்பவரே!
104. ஓம் ஸ்ரீ சாயி ஆபந்நிவாரிணே நம:
ஆபந் – ஆபத்துக்களையும்,
நிவாரிணே - போக்குபவருக்கு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)