தலைப்பு

திங்கள், 13 டிசம்பர், 2021

ஒரு ஆன்மீக சாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டிய பதினாறு குணாதிசயங்கள்!


ஆன்மா பலவடிவம் எடுத்து பூர்வ புண்ணியத்தில் அபூர்வமாக மனித வடிவம் எடுக்கிறது.. அப்படி மனிதனாகப் பிறப்பது அரிது.. அதனினும் அரிது பக்தனாக இருப்பது.. அதனினும் அரிது ஆன்மீக சாதகனாக வாழ்வது... எவ்வகை குணங்கள் எல்லாம் ஒருவன் பெற்றிருந்தால் ஆன்மீக சாதகனாக வாழ முடியும் என்பதை சுவாமி ஒவ்வொன்றாக விளக்குகிறார் இதோ...!


ஒரு ஆன்மீக சாதகன் வளர்த்துக் கொள்ள வேண்டிய பதினாறு குணாதிசியங்களாக பாபா கூறுபவை... 


1. பக்தன் - பக்தி நிறைந்தவன்

2. தபோயுக்தன் - துயரத்தினையும் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கத் தயாராக இருப்பவன்

3. சம்சார முக்தன் - நிலையற்றவைகளின் மீது பற்றுதலின்றி இருப்பவன்

4.இறைவனது பாதசக்தன்- இறைவனுக்கு சேவை செய்ய தயாராக இருப்பவன்

5.விஹிதன் - நல்ல ஒழுக்கம் உள்ளவன்

6. தான சஹிதன் - தான தருமம் செய்பவன்

7. யசோ மஹிதன் - களங்கமற்ற பெயரினைக் கொண்டவன்

8. கல்மஷ ரஹிதன் -  ஒழுக்கத்தில் எந்தக் கறையும் இல்லாதவன்

9. பூர்ணன் - பூரண திருப்தி கொண்டவன்

10. குணகணன் - நல்ல பண்புகளைக் கொண்டிருப்பவன்

11.உத்தீரணன் - அனைத்துப் பண்புகளையும் கொண்டிருப்பவன்

12. வித்யா விகீர்ணன் - கற்றதன் பலன்களைக் கொண்டிருப்பவன்

13. ஞான விஸ்தீர்ணன் - ஞானத்தில் தேர்ந்தவன்

14. ஸ்வாந்தன் - தன்னைக் கட்டுப்படுத்திடக் கூடியவன்

15. ஸத்குண கிராந்தன் - பாராட்டும் வகையில் பிறருடன் பழகும் குணாதிசயங்களைப் பெற்றிருப்பவன்

16. வினய விஸ்ராந்தன் மற்றும் முடிவில் இறைவனது பாத சிராந்தன் - அடக்கம் நிறைந்த முழுமையாக இறைவனிடம் சரணடைந்தவன்


இத்தகைய பண்புகளை ஒரு சாதகன் பெற்றிருந்தால் 'அவனே நான் நானே அவன்' என்கிறார் பகவான் பாபா.

ஆதாரம் - பகவான் ஸ்ரீ சத்திய சாயிபாபாவின் அருளமுதம் - பாகம் - 1


🌻ஆன்மாக்கள் அடைகின்ற இறுதி இலக்கான சுவாமியே இவ்வகை சாதனா பண்புகளை விளக்கி இருப்பது நாம் பெற்ற பெறும்பேறு...அப்பண்புகளை அடைய சுவாமியை சரணாகதி அடைவதன் வழியே பெறலாம் என்கிற வகையில் சுவாமியின் பாதாரவிந்தங்களில் சரணடைந்து இப்பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக