தலைப்பு

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

அநாவசிய ஆடம்பர செலவு செய்யாதே -வலியுறுத்துகிறார் சுவாமி!

உணவு உடை உறைவிடம் இதை கடந்து மனிதன் பொழுது போக்கிற்கு செலவு செய்கிற விஷயங்கள் தவறு எனவும்...இந்த உணவு உடை உறைவிடமே எளிமையாக அமைத்துக் கொள்கிற பக்குவம் சுவாமியிடம் பக்தி வந்தால் அன்றி வருவதில்லை எனும் ஆழமான உணர்தலை சுவாமி வலியுறுத்துகிற ஞானத்தை உள்வாங்கும் போது உள்ளுணர்வு பெறுகிறோம் இதோ...


மனிதன் அவசியமென்று நினைக்கின்ற அளவுக்கும் குறைவான உபகரணங்களுடன் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும்.

ஏதாவது ஒரு பொருள், சில காலம் உன்னால் உபயோகிக்கப்பட்டால் ,அது உனக்குத் தவிர்க்க இயலாதது என்றும் அது இல்லாமல் உனக்கு வாழத் தெரியாது என்றும் நினைக்கிறாய்.

பட்டுப்புழு போன்று உன்னைச் சுற்றி உனது கற்பனை மூலம் ஒரு கூட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறாய்.


பணத்தின் கண்ணோட்டத்திலும் ஆன்மீகத்தின் கண்ணோட்டத்திலும் செலவு மிகுந்த பழக்கங்கள் வளர இடம் கொடுக்காதே.. உனது விருப்பு வெறுப்புகளை கண்குத்திப் பாம்பாக கவனித்து உனது வழியை அடைப்பது போல பயமுறுத்துகின்ற எதனையும் உதறித் தள்ளு.

- பகவான் ஸ்ரீ சத்ய சாயி


ஆதாரம் : அருளமுதம் Vol 1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக