தலைப்பு

புதன், 8 டிசம்பர், 2021

இலங்கை மற்றும் தென் ஆப்ரிக்கா வானொலியில் ஒலிபரப்பான ஸ்ரீ சத்ய சாயி கவசம்!ஸ்ரீ சத்ய சாயி கவசம் சுவாமியின் கருணையோடு எவ்வாறெல்லாம் பட்டொளி வீசி காற்றில் பவனி வருகிறது என்பது விவர விரிவாக இதோ...


சுவாமியின் பரிபூரண சங்கல்ப கருணையோடு சுவாமியின் விசேஷ 96 ஆவது அவதாரத் திருநாள் அன்று Sri Sathya Sai Yugam யூடியூப் சேனலில் சுவாமியின் பழம்பெரும் பக்தையான பாடகி பத்மபூஷன் பி.சுசிலா அம்மையார் அவர்களால் வெளியிடப்பட்ட ஸ்ரீ சத்ய சாயி கவசம் அதன் இறையருட் சிறகுகளை திசை தோறும் விரிக்க ஆரம்பித்திருக்கிறது...

ஶ்ரீ சத்ய சாயி கவசம் - உருவான சுவாரஸ்யங்கள்

 

யூடியூப் Comment'டில் பக்தர்கள் ஸ்ரீ சத்ய சாயி கவசம் கேட்டு தங்கள் பரவச அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்... பலர் தனிப்பட்ட வகையிலும் ஸ்ரீ சத்ய சாயி யுக அட்மின்களின் Whatsapp'பிலும் கவசம் கேட்கிற போது ஏற்படுகிற தங்களின் சிலிர்ப்பான சுவாமி அனுபவங்களையும் பகிர்ந்த வண்ணம் இருக்கிறார்கள்... நிறைய பேர் யூடியூப் கவச காணொளியை தொடர்ந்து பார்த்து சுவாமியின் விதவித ரூபங்களை தரிசித்தும்... கவசம் கேட்டபடி நெகிழ்ந்தபடியும் இருக்கிறார்கள்... 


இதில் பலர் வீடியோ Description இணைப்பிலிருந்து ஸ்ரீ சத்ய சாயி கவச ஆடியோவை Download செய்து கேட்டும் வருகிறார்கள்... அதில் உள்ள Pdf file'லை Download செய்து தங்கள் வீடுகளில் பாராயணமும் செய்து அன்றாட சுவாமி வழிபாட்டை பூரண திருப்தியோடு நிறைவு செய்கிறார்கள்... பாதுகாவலோடு சேர்ந்து ஆத்ம ஞானத்தையும் அள்ளி வழங்கும் ஸ்ரீ சத்ய சாயி கவசம் பல பக்தர்களுக்கு தைரியத்தையும் மனநிம்மதியையும் அளித்து வருவதை கேள்விப்படுகிற போது சுவாமி சங்கல்பத்தை உணர்ந்து பூரிக்கிறோம்!


இதில் சற்றும் எதிர்பாரா விதமாக  25/11/2021 வியாழன் அன்று (5.15 am முதல் 5.45 am வரை) இலங்கை வானொலி தமிழ் சேவையில் (Ceylon Radio - 102.1 MHz) ஸ்ரீ சத்ய சாயி கவசம் ஒலிபரப்பு செய்யப்பட்டது... இலங்கை வானொலியில் அவர்கள் ஒலிபரப்பு செய்த பிறகே அதன் செய்தி அறிந்து சுவாமி சங்கல்ப கருணையின் மகிமையை உணர்ந்து கொண்டோம்...

இலங்கை வானொலியில் ஒலிபரப்பியதையும்... மற்றும் வெள்ளிக் கிழமையாகிய 3/12/2021 அன்று தென் ஆப்ரிக்கா வானொலி சேவையில் நேரலையாக வாரம் ஒருமுறை தமிழ் நிகழ்ச்சிகளுக்காக பக்திக்கான பிரிவில் ஒலிபரப்பக் கூடிய நேர அட்டவணைப்படி வேறு எதையும் ஒலிபரப்பாமல் கவச இசையமைப்பாளர் நேர்காணலோடு ஸ்ரீ சத்ய சாயி கவசத்தை மட்டும் முழுவதுமாக அரை மணி நேரம் (Indian time 10pm to 10.30pm)  ஒலிப்பரப்பியதும் குறிப்பிடத்தக்கது (Lotus FM 87.7 - 107.8 MHz )  என்பதையும் ....

அக மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்...நுண்கிருமி தாக்குதல்கள் நீள்வதிலும் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலை பாதிப்புகளிலும் தற்போது மிக மிக அவசியத் தேவையான ஸ்ரீ சத்ய சாயி கவசத்தை அனைவரும் கேட்டும்/ ஓதியும் சுவாமியின் பரிபூரண அருளையும் பாதுகாவலையும் பெறுவோம்!!

ஜெய் சாயிராம்
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக