தலைப்பு

செவ்வாய், 21 டிசம்பர், 2021

ஒரு பக்தராக சுவாமியை எவ்வாறு நாம் அணுக வேண்டும்...?

ஒரு பக்தராக சுவாமியை எவ்வாறு நாம் அணுக வேண்டும்...? அப்படி அணுகுகிறபோது சுவாமி நமக்குள் என்னென்ன வகையான ரசவாதங்கள் புரிகிறார் என்பதை சுவாமி தனது திருவாய்மொழியாலேயே அந்த பரம ரகசியத்தை திறந்து பேசுகிறார் இதோ...


நீங்கள் இங்கு வரும்பொழுது வெறும் கையுடன் வரவேண்டும் எனும் விதி உள்ளதனை நீங்கள் அறிவீர்கள். பாரம்பர்யமான காணிக்கைகளான 'பத்ரம்', 'புஷ்பம்' 'பழம்' , 'தோயம்' (இலை,பூ,கனி,மற்றும் நீர்) ஆகியவை கூட எடுத்து வருதல் கூடாது.


தூய கரங்களுடன், வந்தனை செய்யும் கரங்களுடன் வரவேண்டுமே அன்றி , அளித்திடும் கரங்களுடன் அல்ல. வளங்களை , செல்வங்களின் மீதான ஆசையைத் துறந்து விட்டோம் எனும் கரங்கள் அவை, அப்போது அருளால் அவற்றை நான் நிரப்புவேன்.

அந்த வரங்களை வழங்கும் முன்பு , உங்களிடமிருந்து சில குறிப்பிட்ட விஷயங்களை நான் ஏற்றுக்கொள்கிறேன் என நான் கூறிடல் வேண்டும்; சத்யம், தர்மம், சாந்தி, மற்றும் பிரேமை ஆகியவற்றை நான் கேட்டுப் பெறுகிறேன். 

நான் உங்களை முதலில் என்னருகே ஈர்த்துப் பின் உங்களை மாற்றம் பெறவும், வேறு வடிவம் பெறவும் செய்கிறேன். உடைந்த , ஓட்டை இருக்கும்,   பாழான பொருட்களை சரி செய்திடும் ஆசாரியின் வகையை சார்ந்தவன் நான். நான் உடைந்த இதயங்களையும் , பலவீனமான மனங்களையும், விபரீதமாக செயல்படும் புத்தியினையும் , உறுதியற்ற தீர்மானங்களையும் , மங்கியிருக்கும் நம்பிக்கையினையும் சரி செய்கிறேன்.

- பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா


ஆதாரம் : பகவான் ஸ்ரீ சத்ய சாயிபாபாவின் அருளமுதம் பாகம் : 14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக