தலைப்பு

திங்கள், 6 டிசம்பர், 2021

நூலாசிரியர் மர்ஃபெட் நிம்மதியோடு உறங்குவதற்காக சுவாமி காற்றில் தூவிய சுகந்த தேவதாரு இலைகள்!

நூலாசிரியர் மெர்ஃபட் அனுபவித்த நூதனமான அனுபவம்.. சுவாமி எவ்வகையில் எல்லாம் பக்தர்களுக்கு தன் தனிப்பெரும் கருணையைப் பொழிகிறார் என்பதற்கான மிகச் சிறந்த உதாரண உன்னத பேரனுபவம் சுவாரஸ்ய பதிவாக இதோ...!


ஒருமுறை சுவாமியை தரிசிக்க மர்ஃபெட் தனது மனைவியோடு இந்தியா வருகிறார். வரும் வழியில் சிகப்பு வெள்ளையில் எரியக்கூடிய ஒரு டார்ச் லைட்டை சுவாமிக்கு பரிசளிப்பதற்காக கலர் காகிதத்தில் சுற்றி வாங்கி பெட்டிக்குள் வைத்து விடுகிறார். தினந்தோறும் சூரியனுக்கு வெளிச்சம் தந்தும்... நமது வாழ்விலும் விடியல் தரும் பரிபூரணப் பரம்பொருள் ஸ்ரீ சத்ய சாயிக்காக அவர் வாங்கிய கை விளக்கு அது!  

சென்னைக்கு வந்து நண்பர்களுடன் அடையாற்றில் பெசன்ட் நகரில் தியாசஃபிக்கல் சொசைட்டியில் தங்குகிறார்.. சுற்றி மரம் செடி கொடி படர்ந்திருந்தப்பதால் அங்கே கொசு நடமாட்டம் அதிகம்.. அதற்காகவே தினமும் கவனமுடன் கொசு வலையை விரித்து ஐரிஸ் பதி சேவை செய்வார்.. வெளிநாட்டு கலாச்சாரத்தில் வளர்ந்திருந்தாலும் பதி சேவையே பசுபதி சேவை என்பதை நன்றாக உணர்ந்திருந்தார்! ஒரு கொசு வலைக்குள் புகுந்து காதில் முணுமுணுத்தாலும் மெர்ஃபெட் தூக்கம் போய்விடும்... மனிதனின் மாயப் பற்றும் கொசுக்களைப் போலத்தான் நிம்மதியை குடித்து தூங்கவிடாமல் செய்துவிடுகிறது.

தியாசஃபிக்கல் சொசைட்டி, சென்னை 

 அந்த இரவு காற்று வீசிக் கொண்டிருக்கிறது... கொசுவின் தொந்தரவும் இல்லை... இளங்காலை நேரம்...விழித்துப் பார்க்கிறார்.. அவரின் கொசு வலை சுற்றிய படுக்கையின் உள்ளே பசுமையான இலைகள் சூழ்ந்தியருக்கின்றன... அதிலிருந்து புதுவித வாசனையும் கமழ்கிறது.. ஆச்சர்யப்படுகிறார்.. சின்னஞ்சிறு கொசுக்களே நுழையாத வலைக்குள் இலைகள் எப்படி வந்ததென புதிராகிறார்... இப்படிப்பட்ட இலைகளை எங்கேயும் கண்டதே இல்லை எனவும் அதிலிருந்து இப்படி ஒரு வாசனையை தான் எங்குமே நுகர்ந்ததில்லை என அதிசயப்படுகிறார்.. ஐரிசிடம் காட்டுகிறார்...அதே ஆச்சர்யம்.. தங்கியிருந்த நண்பர்களோடு காட்டுகிறார்.. இந்த சுற்றுப்புறத்தில் இப்படி ஒரு இலையே இல்லை என அவர்களும் அதிசயப்படுகின்றனர்...சில இலைகளில் சந்தனமும் குங்குமமும் இடப்பட்டிருந்தன...

 அந்தக் கட்டிடத்தின் கீழே ஹானலூலுவை சேர்ந்த சாந்ததேவி என்ற பெண்மணி இருந்தார்... அவருக்கு இந்து மதம் மேல் அதிக நம்பிக்கை இருந்தது.. சுவாமியை தரிசித்து கூட இல்லை என்றாலும் இந்த அதிசயத்தை பார்த்து இது நிச்சயம் பகவான் பாபாவின் லீலை தான் என புல்லரித்துப் பேசுகிறார்... மர்ஃபெட் ஆனந்தத்தால் கண்ணீர் உதிர்க்கிறார்...

தேவதாரு மரங்கள் 

 தேவதாரு மரங்கள் இமாலயத்தில் வளரக் கூடியவை.. இமய வாசியான ஸ்ரீ சத்யசாயீஷ்வரர் வழங்கிய அருட் பிரசாதம் அது! ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகவும் உகந்தது தேவதாரு மரங்கள்... மரங்களில் நான் தேவதாருவாக இருக்கிறேன் என சுவாமி தான் கீதையிலும் சொன்னது... சொர்க்கத்தின் மரம் என தேவதாருவை அழைப்பர். சுவாமியின் வாழ்வெனும் இதிகாசத்தை நாம் ஆழமாக உணர முற்பட்டால் ... சுவாமி வேறு கிருஷ்ணர் வேறில்லை... சுவாமி இன்று வரை செய்கிற அனைத்தும் ஸ்ரீ கிருஷ்ண லீலைகளே! என்பதை தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்ளலாம்! 

அந்த அதிசய இலைகளை தரிசிப்பதற்காக  மர்ஃபெட்'டின் நண்பர் மனைவி, அவர் ஒரு தாவரவியல் நிபுணர் ... வந்து பார்த்து பிரமித்துப் போகிறார்... 260 ஏக்கர் கொண்ட அடையாற்று நந்தவனத்தில் இப்படி ஒரு இலை இல்லை...இது இங்கே விளைவதே இல்லை என சொல்கிற போது.. "இது சுவாமியின் அருட்பிரசாதம்" என்கிறார் மர்ஃபெட். தனது உண்மையான பக்தருக்காக சுவாமி புஷ்பக விமானமே அனுப்புகிற போது... சொர்க்க மரத்தின் இலை அனுப்புவது ஒன்றும் பெரிய விஷயமில்லை தான்.


பிறகு மர்ஃபெட் தனது மனைவியோடு சுவாமியை தரிசிக்க செல்கிறார்... கொஞ்சம் பொறுங்கள் என சேவாதளர் கூற.. 2 வருடமாகிவிட்டது இனிமேலும் காத்திருக்க முடியாது என கூறுவதும் சுவாமி வெளியே வருவதும் சரியாக இருக்கிறது... ரோடாமேவை மார்பக புற்றுநோயிலிருந்து காப்பாற்றியதற்காக நன்றி என்கிறார் சுவாமியிடம் ஐரிஸ். அதற்கு சுவாமி "அவள் மார்பில் தோன்றிய புற்றுநோயை குணப்படுத்தி விட்டேன் ஆனால் அவளின் சுவாசப் பையில் புற்று நோய் பரவிக் கொண்டிருக்கிறது.. புகை பிடிப்பதை நிறுத்தச் சொல்" என்கிறார்..

ஐரிசோ திகைத்துப் போகிறார்.. ரோடாமே புகைபிடிப்பார் என்பது ஐரிசுக்கு தெரியாது.. அவளுக்குமேலும் உடல் நலமில்லை என்பதாகத்தான் ஐரிஸ் அறிந்திருந்தார். சுவாமியே உடனே  "கவலைப்பட வேண்டாம்... புகைப்பிடிப்பதை நிறுத்தச் சொல்.. நான் காப்பாற்றி விடுகிறேன் ... அவளுடைய பக்தியை நான் பாராட்டுகிறேன்!" என்கிறார்..



மர்ஃபெட் உடனே சுவாமிக்காக வாங்கிய பரிசுப் பொருளான டார்ச் லைட்டை எடுக்க பையை திறக்கப் போகிறார்.. சுவாமியே அதற்குள் "அந்தப் பையில் என்ன இருக்கிறது என்று எனக்கு தெரியும்.. சிகப்பும் வெள்ளை நிறமும் கலந்த டார்ச் லைட் தானே... அந்த நேரத்தில் சிங்கப்பூரில் நானும் உங்களோடு அந்த கடையில் இருந்தேன்... அதற்குப் பிறகும் உங்களை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன்" என்று சிரித்தபடி சுவாமி சொல்கிறார்... என்ன பதில் சொல்லி இருப்பார்கள் என்று நினைக்கிறீர்கள்... என்ன பதில் சொல்லியிருக்க முடியும்...!!?

சாட்சாத் இறைவனான சுவாமியிடம் நாம் பேசி அவர் அறிந்து கொள்ள வேண்டியது என்ன இருக்கிறது!!

(ஆதாரம்: பகவான் பாபா/ பக்கம் : 180 / ஆசிரியர் : எஸ்.லட்சுமி சுப்ரமண்யம்) 


சுவாமி அனைத்தும் அறிகிறார்... சுவாமி எங்கும் நிறைந்திருக்கிறார்... அவர் சங்கல்பமின்றி ஒரு புல் கூட பூமியில் முளைப்பதில்லை... மனிதன் சுகத்தை தேடி அலைகிறான்.. சுவாமியோ அவனுக்கு நன்மையை மட்டுமே தருகிறார்.. மனிதன் சுகமற்றவை எல்லாம் தீமை என நினைத்துக் கொண்டிருக்கிறான்... அதுதான் அடிப்படை மனித அறியாமை. இது விலக சுவாமியிடம் மனிதன் வைக்கும் பக்தியே பக்குவம் தருகிறது. நன்மை என்பது சில நேரமே சுகம்.. பல நேரம் அது பக்குவத்திற்கான சிகிச்சையே!!


 பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக