தலைப்பு

திங்கள், 20 டிசம்பர், 2021

இனி 150க்கும் மேற்பட்ட இசைத்தளங்களிலும் 'ஸ்ரீ சத்யசாயி கவசம்' கேட்கலாம்!


ஸ்ரீ சத்ய சாயி கவசம் அனைத்து பக்தர்களுக்கும்... முக்கியமாக இளைய தலைமுறை பக்தர்களுக்கும் பயனளிக்கும் வகையில் எவ்வாறு எல்லாவித ஆன்லைன் இசைத்தளங்களிலும் இடம்பெற்றிருக்கிறது என்பதைப் பற்றியும்... எவ்வாறு அதனை கண்டடைந்து அந்தந்த இசைத் தளங்களில் கேட்டபடி அனைவரும்  பரவசப்படலாம் எனும் விபரங்கள் குறித்தும் சுவாரஸ்யப் பதிவாக இதோ...

இது இணையதள யுகம்... நுகர்கிற பொருட்களைக் கூட ஆன்லைனிலேயே தேர்ந்தெடுக்கிற காலம்... பாடல் கேட்க வேண்டும் என்றால் முன்பு எல்லாம் FM மட்டுமே... இப்போது ஆன்லைன் வழியாகவே கேட்டுக் கொள்ளலாம்... 

SRI SATHYA SAI KAVASAM 

அதற்காகவே Amazon, Spotify, Itunes என பற்பல இசைத்தளங்கள் இயங்கி வருகின்றன... அது ஒவ்வொருவரின்  செல்பேசிகளிலேயே (Smart phones) இருக்கின்றன... நேயர்கள் தங்களுக்குப் பிடித்த இசைத்தளங்களை தேர்ந்தெடுத்து டவுன்லோட் செய்து அதில் இடம்பெறும் பாடல்களைக் கேட்டுக் கொள்ளலாம்... அதை கவனத்தில் கொண்டு.. சுவாமியின் பரிபூரண சங்கல்பத்தோடு சுவாமியின் "ஸ்ரீ சத்யசாயி கவசம்" ஆன்லைனில் இப்போது அனைவரும் கேட்கிறபடி இயங்க ஆரம்பித்திருக்கிறது... ஸ்ரீ சத்ய சாயி யுகம் யூடியூப் சேனலில் காணொளி வடிவமாக இருந்த போதும்.. ஆடியோ டவுன்லோட் செய்து கேட்கும் வழிவகை செய்த போதும்.. இணைய தள நேரலையில்... Live வாக... பலதரப்பட்ட இசைத் தளங்களிலும் இப்போது சுவாமி கவசத்தை இடம்பெறச் செய்திருக்கிறோம்... ஆக சுவாமி கவச ஆடியோ கேட்க விரும்பும் பக்தர்கள்... கீழ்கண்ட ஆன்லைன் இசைத்தளங்களிலும் சுவாமி கவசத்தை கேட்டுக் கொள்ளலாம்...


YouTube:

Spotify:

Amazon Music:

JioSaavn:

Wynk Music:

Itunes: 

Apple Music:

YouTube Music:

Pandora:

Hungama Music:மேலே குறிப்பிட்ட இசைத்தளங்கள் போக உலகெங்கிலுமுள்ள 140க்கும் மேற்பட்ட பிரபல இசைத்தளங்களிலும் 'ஸ்ரீ சத்யசாயி கவசம்' பதிவேற்றப்பட்டிருக்கிறது. Searchல்🔎 "Sri Sathya Sai Kavasam" என search செய்து லைவ் ஆகவோ அல்லது டவுன்லோட் செய்தோ கேட்டுக்கொள்ளலாம்.
இதன் வாயிலாக அகில உலகமும் சுவாமி கவசத்தை கேட்கும்படியான வாய்ப்புகள் அகலமாய்த் திறந்திருக்கின்றன... இது கடைக்கோடி பக்தர்களையும் சுவாமி கவசத்தை கேட்க வைத்து பரவசப்பட வைக்கும் என்பதை பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறோம்!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக