தலைப்பு

செவ்வாய், 14 டிசம்பர், 2021

இன்றைய நாள் ஸ்ரீ சத்ய சாயி சகாப்தத்தில் முக்கியமான நாள்!

ஶ்ரீ சத்ய சாயி ஸ்வர்ண யுகத்தில் இந்நாள் ஒரு முக்கிய நாள். இதே நாளில் 14.12.1945 - ல் காலை 10 மணி அளவில் புட்டபர்த்தியில் பகவானின் முதல் மந்திர் ஆன 'பாத மந்திரம்' என அழைக்கப்பட்ட பழைய மந்திர் திறந்து வைக்கப்பட்டது. 

அப்போது பகவானுக்கு 19 வயது. 

பெங்களூர், மெட்ராஸ், மைசூர் மற்றும் புட்டபர்த்தி பக்தர்கள் புடைசூழ பகவான் ஒரு புஷ்ப தேரில் அமர்ந்து வர ஒரு பிரம்மாண்ட ஊர்வலம் நடைபெற்றது. 

தற்போதைய பிரசாந்தி நிலையம் உருவாகும் வரை அதாவது 1950 வரை பகவான் இந்த பழைய மந்திரத்தில் வாசம் செய்தார். 

இந்த பழைய மந்திர தற்போது ஒரு திருமண மண்டபமாக மாற்றப்பட்டு பெத்த வெங்கப்ப ராஜு கல்யாண மண்டபம் (பகவானின் தந்தையார் பெயர்) என பகவானால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சத்தியபாமா கோவில் & அனுமார் கோவில் அருகில் தற்போது காணப்படுகிறது.

பழைய மந்திரத்தின் திறப்பு விழா ஊர்வல புகைப்படங்கள் மற்றும் இவ்விழாவிற்கு பக்தர்களை அழைக்கும் தெலுங்கு அழைப்பிதழும் உங்கள் பார்வைக்கு... 

👇👇👇



அவதார அறிவிப்பு 1940ல். இளஞாயிறு கிரணமாக பாலபாபாவின் புகழ் பரவத் தொடங்க, பக்தர்களின் வருகையும் அதிகரித்தது. பக்தர்களின் நலன் ஒன்றையே திருவுள்ளம் கொண்ட பரந்தாமன், 14.12.1945 ல் பாத மந்திரம் என்னும் குடிலை நிர்மாணித்தார். வைகுண்டவாசி தமது வாழ்விடத்தை களிமண் சுவர்களும், மங்களூர் ஓடுகளும், தகர ஷெட்டுக்களான மேற்கூரைகளுமாக , எளிமையாக நிர்மாணித்தார். அதில் அவர்(8 × 6 அளவுள்ள) ஒரு சிறகய அறை தனில் தங்கினார். 

பாலபாபாவின் லீலா விநோதங்கள், அருளுரைகள், வேடிக்கை விளையாட்டுக்கள் இவற்றின் மௌன சாட்சி இந்த பாத மந்திரம். பேசும் சாட்சிகளாக பல பழைய பக்தர்கள். அதில் பலர் பாபாவுடன் உண்டும், விளையாடியும், பஜன் பாடல்கள் பாடியும், லீலைகளை அருகிலிருந்து அனுபவித்த பாக்கியசாலிகள். அவர்களில் ஒருவர்தான் பரம பக்தையான குப்பம் ஸ்ரீமதி. விஜயம்மா அவர்கள். அவரது வாழ்வும் சரிதமும் பாபாவின் திருச் சரிதத்தோடு பிண்ணிப் பிணைந்தது.

நமது ஸ்ரீ சத்ய சாயி யுகம் யூடியூப் சேனலுக்காக குப்பம் விஜயம்மா பிரத்தேகமாக முதன்முதலில் தமிழில் அளித்த ஐந்து அற்புத வீடியோக்களை இதுவரை பார்க்காதவர்கள் இந்தப் பொன்னான நாளான பாதமந்திர திறப்பு நாளன்று கண்டு மகிழுங்கள்.
 
🔸PART-1 - குகையில் தோன்றிய வெளிச்சம் - உறுமிய சிங்கம்


🔹PART-2 - சித்ராவதியில் நடனமாடிய ஐந்து தலை நாகம்


🔸PART-3 - 1961 -பாபாவோடு பரவச பத்ரி யாத்ரா


🔹PART-4 - 3 Hrs தியாகராஜ கீர்த்தனை பாடிய பாபா


🔸PART-5 - புட்டபர்த்திக்கே வந்த கைலாஷ் கங்கை




1 கருத்து: