தலைப்பு

திங்கள், 20 டிசம்பர், 2021

உடலை விட்டுவிட்டு தன் பக்தையின் கடைசி நிமிடங்களில் தரிசனம் தரச் சென்ற பாபா!


பக்த குசேலரின் அவலைப் பெற்று வசதி அளித்தார்... ஆனால் பக்த ராதாவின் ஆன்மாவையே பெற்று முக்தி அளித்தார்.. இப்படி பக்தரின் பக்திக்கு தகுந்தபடி நற்கதி அருள்வதில் நிகரற்றவர் சத்ய சாயி கிருஷ்ணர்.. அப்படி கொடுத்து வைத்த பக்தையின் அற்புதமான கடைசி நிமிடங்கள் இதோ...

1940 ஆவது வருடத்திலிருந்து 1950 ஆவது வருடங்கள் வரை சுவாமி அடிக்கடி தன் உடம்பிலிருந்து வெளியேறி சஞ்சரித்துக் கொண்டிருப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். திடீரென்று எதிர்பாராத நேரத்திலும் தன்னிலை மறந்து மயக்கமடைந்து விடுவார். அப்போது அருகில் இருந்தவர்கள், வெகு தொலைவில் உள்ள தனது பக்தர்களைக் காப்பாற்ற சுவாமி சென்று விட்டார்கள் என அறிந்து கொள்வார்கள். திரும்ப வந்தவுடன் தன்னை சுற்றி இருந்தவர்களிடம் என்ன நடந்தது என சில நேரங்களில் கூறுவார். சில நேரங்களில் கூற மாட்டார். சில நேரங்களில் சில எதிர்மறை விளைவுகளும் சுவாமியின் உடலில் ஏற்படுவதுண்டு. சில நேரங்களில் உதாரணத்திற்கு தூரத்தில் இருப்பவருடன் அவர் உரையாடுவதை அவரின் வாய் வார்த்தைகளின் மூலம் கேட்க முடியும். அந்த நேரங்களில் சுவாமியின் உடலில் இருந்து விபூதி வெளிப்படும்.

Sri Sathya Sai in the Prasanthi Nilayam Bhajan Hall - 1960s

இது சில நேரங்களில் சுவாமிக்கு தன் பக்தர்களின் இறுதி நேரத்தின் போது நடைபெறும். திரு. கஸ்தூரி அவர்கள், "அவ்வாறான தருணங்களில், பக்தரின் மரணத் தறுவாயில், இத் தற்காலிக வாழ்க்கை முடிவின் போது அவ்வுடம்பின் வாயில் விபூதியை சுவாமி நிம்மதியான இறப்பிற்காக வைத்து விடுவார்" என்று கூறுவார்.

திரு. கஸ்தூரி அவர்கள் ஓர் உதாரணத்தை கூறினார். 1958ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி, மாலை 5.20 மணி அளவில், சுவாமி தன்னை சுற்றி இருந்தவர்களிடம் ஒரு கடிதத்தை வாசித்து காட்டியபடி இருந்தார். அப்பொழுது அவர் 'ஹா' என்று சப்தமிட்டு கீழே விழுந்தார். 10 நிமிடங்கள் சுவாமியின் உடல் அப்படியே இருந்தது. பின்னர் இருமிக் கொண்டே எழுந்தார். அவரின் வாயிலிருந்து விபூதி விழ ஆரம்பித்தது. சுமார் 1.1/2 அடி தூரம் வரை சென்று விழுந்ததாக திரு. கஸ்தூரி அவர்கள் கூறினார். பின்பு 5.35 மணி வரை மயங்கிய நிலையில் இருந்த நம் சுவாமி பின் விழித்து எழுந்து எதுவும் நடக்காதது போல கடிதத்தை படிக்க ஆரம்பித்து விட்டார்.


எல்லோரும் என்ன நடந்தது என அன்புடன் மீண்டும் மீண்டும் பக்தர்கள் கேட்க, தான் ஹிமாலயத்தில் உள்ள டேராடூன் என்ற இடத்திற்கு சென்றதாக கூறினார். அங்கு நம் ஆசிரமத்தில் வேலை செய்யும் மருத்துவரின் தாய் அப்பொழுது தான் மரணமடைந்ததாக கூறினார். நம் சுவாமி அத் தாயின் இறுதி கணத்தில் உதவுவதற்காக சரியாக 5.30 மணிக்கு அங்கு இருந்ததாக கூறினார். மேலும் அங்கு அந்த மருத்துவரும் இன்னும் சில பக்தர்களும் இருப்பதாகவும் அவர்கள் பஜனை செய்து கொண்டிருப்பதாகக் கூறினார். மேலும் அந்த தாய் எல்லோரிடமும் "இது தான் என் கடைசி மூச்சு" எனக் கூறி விட்டு இறந்ததாக கூறினார்.


இரண்டு நாட்கள் கழித்து நவம்பர் 17 ஆம் நாள், மருத்துவரிடம் இருந்து நம் சுவாமிக்கு தன் தாய் இறந்து விட்டதாக கடிதம் வந்தது. அதில் "என் தாய் தன் இறுதி மூச்சை சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் விட்டதாகவும், நாங்கள் அனைவரும் அவர் விருப்பபடியே அந் நேரம் பஜனை செய்து கொண்டிருந்தோம் என்றும் தன் இறுதி மூச்சு வரை உங்களை நினைத்து கொண்டே இருந்தார்" என்று எழுதியிருந்தார்.

ஆதாரம் :- Sai Baba: "Man of Miracles" எழுதியவர் திரு. ஹோவர்டு மர்ஃபெட். பக்கம் 139; 1972 ஆம் ஆண்டு - பதிப்பாக்கம் - மேக்மில்லன் இந்தியா லிமிடெட்.

🌻பரகாயப் பிரவேசம் செய்து தான் அதாவது உடலை விட்டு அருள் உடல் தாங்கி அருள்பாலிக்க வேண்டும் என இறைவன் சத்ய சாயிக்கு அவசியமே இல்லை .. வெறும் சங்கல்பத்திலேயே அவர் அனைத்தும் செயலாற்ற வல்லவர் என்ற போதிலும் இந்த பக்தையின் பரிசுத்தமான பக்தி அப்படிப் பட்டதை என்பதை எடுத்துக் காட்டவே சுவாமி ஆற்றிய பிரத்யேக அற்புதம் நாம் உணர்வதற்காகவே!! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக