தலைப்பு

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

வொயிட் ஃபீல்ட்'டில் தொலைந்த கண்ணாடியை ரோம் நகரில் கொடுத்த சாயி பிதா!

இறைவன் ஸ்ரீ சத்ய சாயிக்கு எதுவும் / ஏதும் தூரமில்லை. அவரால் நொடிப் பொழுதில் பொருளை சிருஷ்டிக்கவும்.. சிருஷ்டித்த பொருளை கொண்டு சேர்க்கவும் முடியும். தன் பக்தர்கள் ஒருவரை கூட தவிக்க விடாத கோடித் தாயன்பு சுவாமியுடையது எனும் சத்தியம் உணர்த்தும் அனுபவம் இதோ...


1983 அக்டோபரில் இத்தாலி நாட்டின் ரோம் நகரில் ஸாயி கான்ஃபரன்ஸ் நடைபெற்றது. டாக்டர். ஸாரா பவான் அவர்கள் அப்பொழுது ஆஸ்திரேலிய ஸாயி செய்திகளின் எடிட்டராக இருந்தார். தனது ஸாயி பத்திரிகையின் பிரதி ஒன்றையும் எடுத்து சென்றார். ரோம் நகரில் திரு. கஸ்தூரி அவர்களை சந்தித்து உதவி கேட்டு, பத்திரிகைப் பற்றி விவரங்கள் அறிய உத்தேசித்திருந்தார். 

Prime Minister of Italy Bettino Craxi is with his wife Anna Moncini with Bhagwan Sri Sathya Sai Baba, India, November 5, 1986. 


அப்போதைய இத்தாலி நாட்டின் பிரதமரும் சாயி பக்தருமான திரு. பெட்டினோ கிராக்ஸி(Bettino Craxi) என்பவர், இந்தியாவில் ஸனாதன ஸாரதியின் எடிட்டரான, திரு.வி.கே நரசிம்மனை அறிமுகப்படுத்திய பொழுது மிக மகிழ்ச்சி அடைந்தார். திரு. நரசிம்மனிடம் உதவி கேட்ட பொழுது, தான் தனது மூக்கு கண்ணாடியை எங்கோ விட்டு விட்டதாகவும், வெறும் கண்ணாடி பெட்டியை மட்டுமே தன் பெட்டியில் உள்ளது என்றும், கூட்டத்தில் பங்கு பெறுவதே சிரமம் என்றும் வருத்தப்பட்டார்.

எனினும் காலை முதல் வேலையாக Dr. பவான் அவர்களை அவரது ஹோட்டல் அறையில் சந்திப்பதாக வாக்களித்து, அதன்படி வந்து விட்டார்.

ஸ்ரீ நரசிம்மன் மிகுந்த சிரமத்துடன் பவான் அவர்களின் பிரதியைப் படித்தார். முடியவில்லை! ஸ்வாமி தான் ஏதாவது அனுக்ரஹம் செய்ய வேண்டும் என கூறினார். அப்பொழுது அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இடத்தின் நடுவே கருப்பு ஃப்ரேமிட்ட (frame) கண்ணாடி தொப்பென விழுந்தது.! திரு. நரசிம்மனுடையது!இரண்டு நாட்கள் முன்பு தான் "Invitation to Glory" என்னும் புத்தகத்தில் டெலிபோர்டேஷன் (தொலைவிலிருந்து பொருளை அனுப்புதல்... ஊடகமின்றி) பற்றி படித்தார்! இப்பொழுது நடந்துவிட்டது! திரு. நரசிம்மன் தமிழில் உரக்கக் கூவி ஸ்வாமிக்கு நன்றி கூறினார். இது ரோம் conference க்கு முதல்நாள் மாலை நடந்தது. வெள்ளிக்கிழமை, 28 ஆம் தேதி 1983 ல் பிறகு இந்தியா திரும்பியதும் ஸ்வாமியை சந்திக்க திரு. நரசிம்மன் சென்றார். 


வராண்டாவிலேயே ஸ்வாமி நின்றிருந்தார். எப்படி நடந்தது மாநாடு என ஸ்வாமி கேட்க, "நன்றாக நடந்தது! ஸ்வாமியே அங்கு வந்திருந்தது போல் இருந்தது"என்றார். "நான் தான் அங்கு வந்தேனே! நீங்கள் ஒயிட் ஃபீல்டில் கண்ணாடியை வைத்து விட்டு, வெறும் கண்ணாடி பெட்டியை கொண்டு போய்விட்டீர்கள்! நீங்கள் என் உதவியை கோரியதும், கண்ணாடியை போட்டேன்" என்றார்.

இப்படித்தான் பாபா தக்க சமயத்தில் தனது கருணையால், தெய்வீக சக்தியால், பக்தனை காப்பாற்றுவார். பெங்களூரிலிருந்து ரோமுக்கு கண்ணாடியை டெலிபோர்ட்(teleport) செய்துள்ளார்.              

ஆதாரம்: Narrated by Dr.Sara Pavan, Prashanthi Nilayam.

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம் 


🌻 நம் இதயமே சுவாமி தன் முகம் பார்த்துக் கொள்ளும் நிலைக் கண்ணாடி. அதே இதயமே சுவாமி நம் வாழ்க்கையைப் பார்க்கும் கண்ணாடியும்.. ஆகவே அந்த இதயத்தை தூசியற்றப் பளிங்காய் தூய்மையாக்கிக் கொண்டிருக்க வேண்டும்!! ஆத்ம சாதனையே இதயத் தூசியைத் துடைக்கும் சாதனம்.. இதயம் தூய்மையானால் அதுவொன்றே சரணாகதிக்கான சாதனமும்... 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக