தலைப்பு

செவ்வாய், 21 டிசம்பர், 2021

உன்னை அலைக்கழிக்கும் ஆசையை சாம்பலாக்கி இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும்!


விபூதியை அருவியாய் பொழிபவர்... ஒவ்வொரு உடம்புக்கும் எது முடிவு நிலையோ அந்நிலையை உணரச் செய்யும் உன்னத விபூதியை எவ்வாறு ஆன்மீகமாய் உணர்வுப்பூர்வ உருமாற்றம் தர... நமக்கு விபூதி கீதை அருள்கிறார் விபூதியில் விஸ்வரூபமாய் வீற்றிருக்கும் சிவசாயி இதோ...


விபூதி அபிஷேகம், ஸ்வாமியை நீங்கள் பற்றிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகின்ற ஒரு வலுவான உட்பொருள் கொண்டது. உண்மையான ஆன்மீக உணர்வின்படி, விபூதி ஈடற்ற பெறற்கரிய பொருள். சிவன் காமதேவனை (ஆசைக்கு அதிபதி- மன்மதன் என்ற பெயருள்ளவன்.

ஏற்கனவே குழம்பியிருக்கும் மனதைக் கொந்தளிக்கச் செய்பவன்) எரித்து சாம்பற் குவியலாக்கினார். அந்தச் சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொண்டு , காமத்தை வென்ற புகழொளியில் பிரகாசித்தார்.காமம் அழிக்கப்பட்டபோது, பிரேமை (பேரன்பு) தன்னிகரற்று அரசாண்டது.ஆசை மனதை வக்கிரமாக்கும்போது பிரேமை உண்மையாகவும் முழுமையாகவும் இருக்கும்.

உன்னை அலைக்கழிக்கும் ஆசையை வென்றதைக் குறிக்கின்ற சாம்பலைத் தவிர கடவுளைப் போற்றிப் புகழ வேறு எந்த உயர்ந்த காணிக்கையை உன்னால் தர இயலும். சாம்பல்தான் பொருட்களின் முடிவான நிலை  அதற்கு மேற்பட்ட மாறுதல் எதனையும் பெற இயலாது. நீ ஆசையைக் கைவிடுவதற்காம் , ஆசையை அழித்ததனால் கிடைத்த சாம்பலை உனக்குக் கிடைத்ததவற்றிலேயே மிக உயர்ந்த பொக்கிசமாகக் கருதி அதனை சிவனுக்கு காணிக்கையாக சமர்ப்பிக்கவும். உன்னை ஊக்குவிப்பதற்கு விபூதி அபிஷேகம் செய்யப்படுகிறது. ஓரிரு நாட்களில் மலர்கள் வாடுவதுபோல சாம்பல் வாடுவதில்லை. தண்ணீர் வற்றி மறைவது போல சாம்பல் மறைவதில்லை. தண்ணீர் அழுக்காகி குடிக்க இயலாது போல சாம்பல் நிலை மாறுவதில்லை. இலைகள் போன்று சில நாட்களில் சாம்பல் நிறம் மாறுவதில்லை. பழங்கள் போன்று சில நாட்களில் அழுகிப்போவதில்லை. சாம்பல் எப்போதுமே சாம்பலாக இருந்தது, இருக்கின்றது, இருக்கும். ஆகவே உனது வெட்கக் கேடான, தீய குணங்களையும்  தீய பழக்கங்களையும் எரித்துவிடு. எண்ணம் சொல், செயல் இவற்றில் தூய்மையுள்ளவனாக மாற்றிக்கொண்டு சிவனை வழிபடு.

- பகவான் ஸ்ரீ சத்யசாயிபாபா


ஆதாரம்: ஸ்ரீ சத்யசாயி பாபாவின் அருளமுதம் | பாகம் - 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக