தலைப்பு

செவ்வாய், 1 ஜூன், 2021

நெஞ்சம் மறப்பதில்லை படம் போல 'திகில்' தரக்கூடிய சத்ய சாயி அனுபவம்!


இறைவன் சத்ய சாயி காலத்தையும், வெளியையும் கடந்தவர் என்பதற்கான நிறைய அனுபவங்களில் இதுவும் ஒன்று. காலங்களை தனதாக்குபவர்.. கடந்தவர்.. கட்டமைப்பவர்.. பராமரிப்பவர் யாவும் இறைவன் சத்ய சாயியே... ஆதலாலே அவரை 'இறைவன்' என அனுபவத்தினால் அழைக்கிறோம். திகில் தரக்கூடிய முன் ஜென்மம் தொடர்பான ஒரு பெரிய அனுபவம் இதோ...

RR என்பவர் உற்சாகமான அதிர்ஷ்டக்கார இளைஞர், ஒரு வெற்றிகரமான குடும்பத்தலைவராக இருந்தோடு ஒரு விளையாட்டு க்ளப் (Club) வாழ்க்கையையும் வாழ்ந்து கொண்டிருந்தார்.

RRம் அவரது க்ளப் நண்பர்களும் பத்ராபூர் நோக்கி, மூர்த்தி என்பவரின் காரில் பயணப்பட்டனர். போகும் வழியில் புட்டபர்த்தி என்பதால் பாபாவை சந்திக்க இரவு தங்கி, மறுநாள் செல்வதாக உத்தேசித்து இருந்தனர். ஆச்சரியகரமாக முதல் தடவையிலேயே RRக்கு நேர்காணல் பாபாவுடன் கிடைத்தது. RR பாபாவிடம் தனது முன் பிறவியைப் பற்றி சொல்ல முடியுமா என வினவினார். பாபா மிக அருமையாக, முன் பிறவி, தற்போதய பிறவி, மற்றும் அடுத்த பிறவி பற்றிக்கூட சொல்லக் கூடியவர். பின்வரும் விவரங்களை பாபா கூறினார்.


"நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை இரவு ஒரு வீட்டில் தங்குவாய் அது உனது முன் ஜென்மத்து வீடு , உனது முதல் மனைவி லக்ஷ்மி உனக்கு ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு இறந்துவிட்டாள். இந்த ஜென்மத்தில் அவள் தான் உன் மூத்த அண்ணனாகப் பிறந்துள்ளாள். போன வருடம் அவள் இறந்து, மீண்டும் உன் பெண்ணாகப் பிறப்பாள். நாளைய மறுநாள் நீ தங்கப்போகும் வீட்டில் உனது முன் ஜென்மத்து இரண்டாம் மனைவி அங்கு வசித்துக் கொண்டிருப்பாள்! உனக்கு 40 வயதாக இருக்கும் பொழுது, உங்கள் குடும்ப விரோதியான ராகவலுவின் தூண்டுதலால், நீ அவளால் விஷம் வைத்துக் கொல்லப்பட்டாய். இந்த ஜென்மத்தில் ராஜா என்பவராகப் பிறந்துள்ளாள். சென்று வா…” என்றார் பாபா.

RR பேசவே முடியாமல் வாயடைத்துப் போய் நின்றார், அவரது நண்பர்கள் அவரை விட்டுச் சென்று விட்டனர். எனவே அவர் தனியாகவே பத்ராபூருக்குச் செல்ல கிளம்பினார் எல்லாம் நிகழ ஆரம்பித்தன,

RR பெங்களூரில் பாஷை தெரியாமல் மாட்டிக் கொண்டார். ஒரு நூறு ரூபாய் கொடுத்து, ஒரு குடிகார லாரி டிரைவரிடம் பேசி, அவரை பத்ராபூருக்குக் கொண்டு விட ஒத்துக் கொண்டார். அன்று வெள்ளிக்கிழமை – இரவு லாரி விபத்தில் சிக்க, இவர் சுய நினைவின்றி அருகிலுள்ள வீட்டிற்குள் தங்க வைக்கப்பட்டார்.


மெதுவாக சுய நினைவு திரும்பிய பொழுது, சிறிய அதிர்ச்சியில் இருந்து மீண்டார். பாபா சொன்னவை யாவும் நினைவிற்கு வரலாயின!

இவர் போன ஜென்மத்தில் வாழ்ந்ததாக விவரிக்கப்பட்ட வீடுதான் அது! 70 வயது மதிக்கத்தக்க ஆரோக்யமான பெண்மணி ஒருவர் இவருக்கு சூடான பால் கொண்டு வந்து கொடுத்தார். அது இவரது முன் ஜென்மத்தில் 2 வது மனைவி! நடுத்தர வயதுள்ள ஒரு மனிதன் ஈஸி சேரில் (சாய்வு நாற்காலியில்) ஒரே மாதிரி நிலையில் அமர்ந்து கொண்டிருந்தார். அது RR – னுடைய முதல் மனைவியின் பையன் ஆச்சரியமானதாக, அன்றைய தினம் தான் RR முன் ஜென்மத்தில் வினோதமாக இறந்த தினம்!


🌹அங்கிருந்த ஒரு வயதான கிராமத்து வாசி மூலம், RR அறிந்த விவரமாவது:-  

அதாவது இவரது முன் ஜென்மத்து இரண்டாம் மனைவி, கர்ணம் ராகவலுவுடன் தொடர்பு கொண்டு, RR ஐ விஷம் வைத்து கொன்று விட்டாள். அந்த கொடூரமான ராகவலு சாமர்த்தியமாக அவளது பணத்தை எல்லாம் எடுத்துக் கொண்டு இவளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டான். மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு வந்து, மூத்தாரின் மகனுடன் தீண்டத்தகாதவள் போல் நடத்தப்பட்டு வாழ்ந்து வந்தாள். அந்த மகன் சாப்பிடுவது, தூங்குவது, சுருட்டு பிடிப்பது, நாற்காலியில் ஆடுவது தவிர வேறு ஒன்றும் செய்யமாட்டான். அவன் மீது தவறில்லை! அவனுக்கும் விஷம் கொடுத்து, உயிர் மட்டும் போகாமல் தப்பி, வெட்டியாக வளர்ந்து விட்டாயிற்று.

🌹எல்லாவற்றையும் விட Climax  என்று சொல்லக் கூடிய அடுத்த சம்பவம்:- 

அவர் வீடு திரும்பும் வழியில் RR ஒரு நொண்டி நாயைப் பார்த்தார். அது லாரின் கீழ் அடிபட்டு இறந்து விட்டது. அதன் பெயர் ராஜா என்பதாம்! பாபா குறிப்பிட்டபடி ராகவலுதான் ராஜா எனும் நாயாக பிறந்திருக்கிறது!.

எல்லாவற்றுக்கும் மகுடம் வைக்கும் விதமாக, பாபாவின் கூற்று படி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. கணவரிடத்தில் எவ்வளவு அக்கரையும், அன்பும் அந்த முதல் மனைவி லக்ஷ்மிக்கு இருந்திருக்க வேண்டும்!!!

ஒரு உண்மைச் சம்பவம், சங்கிலித் தொடராக...நம்ப முடியாத உண்மைகளை RR தானே பார்த்து விட்டார்!!

ஆதாரம்: Sri Sathya Sai Baba, A story of God as Man | Chapter 4, P 248.
தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி. 

🌻அந்த நொண்டி நாய்க்கு நிகழ்ந்த முடிவை பார்த்தோம் அல்லவா. பாவம் செய்தால் அதற்குரிய சரியான தண்டனையை எந்த உயிரும் அனுபவித்தே தீரும் என்பதை புரிந்து கொள்கிறோம். இதுவே இறைவன் சத்ய சாயி எழுதிடும் பிரபஞ்ச விதி. ஆகவே புண்ணியம் செய்ய முடியாவிட்டால் கூட பாவம் செய்யாமல் இருப்பதும் ஒரு புண்ணியமே... 

2 கருத்துகள்: