தலைப்பு

செவ்வாய், 25 ஏப்ரல், 2023

உண்மையான மகிழ்ச்சி என்பது யாது? அது எப்படி கிடைக்கும்?

சந்தோஷம் என்ற சொல்லிலேயே அதன் பொருள் (சம் - Some) சிறிதே என்று இருக்கிறது! எனவே நீங்கள் தேட வேண்டியது அதுவல்ல... உண்மையில் நீங்கள் தேட வேண்டிய ஆனந்தமே! (Bliss)

மகிழ்ச்சி இருவகைப்படும்! 

உண்மையான இயல்பான மகிழ்ச்சியோ இறையுணர்வில் மட்டுமே இருக்கிறது!

அதுவே Union with God - இறைவனோடு ஒன்றிணைதல்!

அதாவது உங்களின் கடவுள் ஈடுபாடு அதுவே பக்தி... அந்த பக்தியிலேயே உண்மையான நிலையான மகிழ்ச்சி உள்ளது! அதுவே ஆனந்தம்! 

லௌகீக (உலகியல்) ஈடுபாட்டினால் வரும் மகிழ்ச்சி நீர்க்குமிழி போன்றது! நிலையற்றது! துன்பமயமானது! 


அன்றாட வாழ்க்கை நெறிப்படி இப்படியும் கூறலாம்...

உண்மையான மகிழ்ச்சி என்பது உங்களது கடமைகளை உளமாரச் செய்வதில் தான் இருக்கிறது! நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்வதில் இல்லை!


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் :6)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக