தலைப்பு

திங்கள், 24 ஏப்ரல், 2023

ஸ்ரீ சத்ய சாயி பக்தர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

இறைவன் பாபாவை எவ்வாறு உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதை தெளிவுற ஆன்மாவில் ஆழப் பதியும் வண்ணம் விளக்கப்படுகிறது இதோ...


1926 முதல் 2011 வரை நாம் பார்த்துக் கொண்டிருந்த அவதாரம் சாதாரண அவதாரம் இல்லை! இந்த அவதாரத்தை போன்ற ஒரு அவதாரம் பல கல்பங்களுக்கு ஒரு முறை தான் வரும்! ஒரு கல்பத்திற்கே பல யுகங்கள் உண்டு! 

நம் உள் கண்ணுக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் அரூப அரக்கர்களான காமம் (ஆசை) - கிரோத (கோபம்), லோப (கருமித்தனம்), மத (திமிர்) , மாச்சர்யம் (பாரபட்சம்) இவற்றை தனது சக்திப் பூர்வமான தெய்வீக அறிவுரைகளால் வலிமை பொருந்திய பிரபஞ்ச சத்தியத்தை மிக எளிமையாக 

போதித்து பாமர மக்களான நம்மை கடைத்தேற்ற உதித்த அவதாரமே இது!இந்த அவதாரம் உடலுடன் இருந்தாலும்... ஜோதி ரூபத்தில் இருந்தாலும் இந்த அவதாரத்தின் சக்தி கொஞ்சமும் குறையாமல் சதா தனது உண்மையான பக்தர்களை காப்பாற்றிக் கொண்டே இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை!

இந்த அவதாரம் சரீர ரூபத்தில் கண்களுக்குத் தெரியவில்லையே என்று ஏமாறாதீர்கள்... இப்பொழுதும் சமயம் இருக்கிறது... எல்லோரும் புட்டபர்த்தி என்னும் புண்ணிய ஷேத்திரத்திற்கு வாருங்கள்! 

சமாதி ரூபத்திலும் இருக்கும் அந்த பரம சைதன்ய ஜோதியை தரிசியுங்கள்! அவர் இதுவரை/ இனிமேலும் காண்பிக்கிற வழியில் நடந்து , நம்பிக்கையுடன் அவரை வழிபடுங்கள்!

அவர் சொன்ன சேவைகளைச் செய்யுங்கள்! எல்லோரையும் அன்புடன் பாருங்கள்!

அன்பே தான் கடவுள்!

அன்புடன் இருங்கள்!

தான தர்மங்களைச் செய்து நம்மை பல ஜென்மங்களாய் துரத்தி வரும் பாவங்களை தீர்த்துக் கொள்ளுங்கள்! 


இனியும் சந்தேகத்துடன் கேள்விகளை எழுப்பாதீர்கள்! கடவுளை நம்பினோர் கைவிடப்படார்!

நம் பார்வை கடவுளின் மேல் இருந்தால் , கடவுளின் பார்வை நம் எல்லோரின் மேலும் சதா (எப்போதும்) இருந்து கொண்டே இருக்கும்! 

கடவுள் இல்லாமல் ஒன்றுமே இல்லை!

இதுதான் சத்தியம்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம் : 259 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


சமாதி அடைவதற்கு இறைவன் பாபா மகான் அல்ல.. பல இமய யோகிகளுக்கே தியான சமாதி அருளும் பரிபூர்ண பரப்பிரம்மமே பாபா!

உலக வாழ்க்கையில் மூழ்கித் திளைப்பதால் நம்மால் இதனை உடனே ஏற்கவோ ஜீரணிக்கவோ முடியவில்லை! ஆன்ம சாதனை மற்றும் பேரன்பின் செயல்வடிவமான சேவை இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று கைக் கோர்க்க... பிரார்த்தனை என்ற பெயரில் நமது ஆசைகளையே பேசிக் கொண்டிருக்காமல் உலக மற்றும் ஆன்மீக விஷயங்களில் கூட எந்தவித எதிர்ப்பார்ப்புமின்றி பாபாவை வழிபட்டு.. உயிரையே தியாகம் செய்யும் உணர்வோடு இருந்தால் இறைவன் பாபா நிச்சயம் ஸ்தூல வடிவிலேயே நமக்கு தரிசனம் தருவார்!

நமது அக மாற்றமே சாயி தரிசனம் எனும் கோபுரத்திற்கான அஸ்திவாரம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக