தலைப்பு

வியாழன், 13 ஏப்ரல், 2023

"பாபா எனது பரம குரு ~ இந்தியா ஒரு விஸ்வகுரு" - உக்ரைன் வெளியுறவு அமைச்சர் எமின் தபரோவா

அண்டார்ட்டிகாவோ, அலாஸ்காவோ, அண்டம் முழுதும், அனவரதமும் ஜெபிக்கப்படும் நாமம் நமது  பாபாவின் திருநாமமே. கடந்த ஞாயிறன்று(09-04-2023) 4 நாள் அரசு விஜயமாக  இந்தியா வந்துள்ள உக்ரைன் வெளியுறவு துணை அமைச்சர் எமின் தபரோவா அவர்களும் ஒரு அத்யந்த சத்ய சாயிபாபா பக்தரே என்ற வியப்பான செய்தி உங்களுக்குத் தெரியுமா....  

   

1983ம் ஆண்டு பிறந்த எமின் தபரோவா அவர்கள் பன்முகத் திறமை பெற்றவர். பத்திரிகையாளர், இதழாசிரியர், தொலைக்காட்சி தொகுப்பாளர் என்ற பலவகைத் துறைகளிலும் பரிணமித்த பிறகு , அரசியல் வாதியானார். 2020ம் ஆண்டு முதல் அவர் உக்ரைன் நாட்டின் முதல் பெண் வெளி உறவு துணை அமைச்சராக உள்ளார். ரஷ்ய உக்ரைன் போருக்கு. பிறகு கிழக்கு ஐரோப்பிய அரசு நிபுணர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல் முறை. இந்தியாவில் அவர் வெளி உறவுச் செயலர் திரு. சஞ்சய் வர்மா, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் திரு. விக்ரம் மிஸ்ரியையும் சந்தித்தார். மேலும் அவர் வெளி உறவு துணை அமைச்சர் மீனாட்சி லேகி அவர்களையும் சந்தித்து இரு நாட்டு உறவுகள், உக்ரைனின் தற்போதைய நிலவரம் மற்றும் இதர  உலகளாவிய நிலவரங்கள் பற்றி விவாதித்தார்.


எமின் தபரோவா அவர்கள், தமது  இந்திய பயணம் பற்றிய  முக்கியத்துவத்தை  விவரித்துள்ள காணொலியின் தமிழ் ஆக்கத்தை கீழே காண்போம். எனது மனம் கவர்ந்த குரு ஸ்ரீ சத்யசாயி பாபா என்று கூறும் அவர், கொடும் போர்சூழல்கள் முடிவுற்று உலகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று பாபாவிடம் வேண்டிக் கொள்ளவே இங்கு வந்திருக்கிறார்  என நினைப்பது, இத் தருணத்தில் சாலப் பொருந்தும்.... 


"இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது எனக்கு பெருமிதமாக உள்ளது. இந்தியா உலக அரங்கில் அனைத்து நாடுகளாலும் அறியப்பட்ட ஒரு சிறந்த நாடு. மற்ற நாடுகளை ஒருபோதும் ஆக்கிரமிக்காத நாடு இது. உலகின் "விஸ்வகுரு" என இந்தியா போற்றப்படுகிறது.  ஆகவே இந்திய, உலகில் நிகழும் மாற்றங்களிலும், உரசல்களிலும் தனது கருத்தையும் செயலாக்கத்தையும் பதிவிடவேண்டும் என மற்ற நாடுகள் எதிர் பார்க்கின்றன. இதுவே எனது இந்தியப் பயணத்தின் அரசு ரீதியான காரணமாகும். ஆயினும் எனது சொந்தக் காரணமும் இதில் இணைந்துள்ளது. இந்தியா வர எனக்கு சொந்தக் காரணம் ஒன்றுண்டு. அதுவே புட்டபர்த்தி ஸ்ரீ சத்ய சாயி பாபா ஆஸ்ரமத்தை  தரிசிப்பது. எனது மனம் கவர்ந்த குருவான பாபாவின் இருப்பிடமாம் புட்டபர்த்திக்கு இதுவரை நான் ஏழு முறை வந்துள்ளேன். இப்போது என் நாட்டின் துணை அமைச்சராக இங்கு வந்துள்ளதில் மன நிறைவடைகிறேன்."


சாயிராம்... பகவானைத் தவிர நம் அனைவர்க்கும் புகலிடம் ஏது. போர் மேகம் சூழ்ந்து, மக்கள் துன்புறும் இந்த அவலச் சூழலில் நாமும் பாபாவிடம் நமது பிரார்த்தனைகளை வைப்போம்.  விளையும் பயிரான பாலவிகாஸ் பிராத்தனை ஒன்று இந்த சமயத்தில் நினைவுக்கு வருகிறது.அதை துதித்து பாபாவின் அருள் நாடுவோம். உலகில் சமாதானமும் சாந்தியும்  நிலவ ஸ்ரீ சத்ய சாயி பாபா அருளட்டும்.


 வஞ்சனையின்றி, பகையின்றி சூதின்றி வையக மாந்தரெல்லாம் போற்றுகின்ற பெருங்கருணைப் பேருருவே பர்த்தீசா🙏 

எண்ணியவை முடிய வேண்டும் . நல்லவையே எண்ணவேண்டும். திண்ணிய நெஞ்சம் வேண்டும். தெளிந்த நல்லறிவு வேண்டும். ஸ்வாமி எனக்கு வேண்டும். எந்தன் வினைபோக்கி. நொந்தநிலை மாற்றி பந்தமற அருள் புரிவாய் ஸ்ரீ சத்ய சாயீசா🙏


தமிழில் தொகுத்தளித்தவர்: திரு, குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக