தலைப்பு

திங்கள், 10 ஏப்ரல், 2023

இக்காலத்தில் எல்லாத்துறைகளிலும் மாற்றம் தேவைப்படுகிறது! இந்த நிலை எப்போது மாறி தெளிவு ஏற்படும்?

கல்வியறிவே இல்லாத கிராமத்து மக்கள் அன்போடும், நெருக்கமாகவும் வாழ்கின்றனர்! ஆனால் நகரத்தில் உள்ள படித்தவர்கள், வேலைக்குச் செல்பவர்கள் , இப்படிப்பட்டவர்களிடத்தில் பேராசை, காழ்ப்புணர்ச்சி, வெறுப்பு, ஆணவம் இவைதான் அதிகமாக உள்ளன...! மாற்றம் வேண்டுமெனில் கஷ்டப்பட வேண்டும்! வெண்ணெய் எவ்வளவு மென்மையாக இருப்பினும் அதனை உருக்குவதற்கு கொஞ்சம் முயற்சி (effort) தேவைப்படுகிறது! 


முதன்முதலில் 'கேட்பது' அதாவது சிரவணம் வேண்டும்! 

பிறகு கேட்பதை நினைவில் கொண்டு (மனனம்) உச்சரிக்க வேண்டும்!

மூன்றாவதாக பின்பற்றுதல் அவசியமாகும்! 

உதாரணம் : 

முதலில் சமையலறையில் சமைத்தல் 

பிறகு சமைத்த உணவை உணவு மேஜையில் பரிமாறுவது... அதன் பிறகே சாப்பிட வேண்டும்! 

சமைப்பது - சிரவணம் 

உண்பது - மனனம் 

உண்ட உணவை 

ஜீரணிப்பது - நிதித்யாசனம் (கடைபிடித்தல்)


(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 127 )


ஆக கடைபிடித்தலே மிகவும் முக்கியம் என்கிறார் இறைவன் பாபா... அறநெறிகளை பயில்வதல்ல அதைவிட மிக முக்கியம் அதை கடைபிடித்தலே... அப்போதே மாற்றம் மலர வாய்ப்பிருக்கிறது! நற்குணமே கல்விக்கான இலக்கு என்பது போல் பிடித்தபடி செயல்படுவதல்ல படித்தபடி செயல்படுவதே தர்மம்... தர்மம் கடைபிடிக்கப்படுகையில் உள்முக மாற்றத்தோடு வெளிமுக மாற்றமும் ஒளிமுக மாற்றமாய் உதயமாகிறது!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக