இதற்கு ஒரு சிறு சிறு உதாரணத்தை கவனியுங்கள்!
ஒருவர் ஒரு மாளிகையில் இருக்கிறார்... அவர் காவலுக்கு ஒரு நாயை வளர்க்கிறார்! நீங்கள் அந்த மாளிகையில் நுழைய வேண்டும் என்றால் இரண்டே இரண்டு வழிகள் தான் உள்ளன...
ஒன்று: நீங்கள் உள்ளே செல்ல அந்த நாயை நீங்கள் நண்பராக்கிக் கொள்ளலாம்! இதுவே கர்ம மார்க்கம்!
இல்லை என்றால் அந்த பெரிய மனிதர் வெளியே வந்து உங்களை உள்ளே அழைத்துச் செல்ல வேண்டும்! இல்லை என்றால் அந்த நாய் உங்களை உள்ளே விடாது! மாளிகைக்குள் செல்ல இந்த இரண்டு வழிகளே உள்ளன...!
இந்த இரு வழிகளே... நான், எனது என்ற ஆணவ (ego) உணர்வுகள்!
இந்த வாயிலை கடந்து போக வேண்டும் என்றால் அவற்றை முதலில் தன்வயப்படுத்த வேண்டும்!
'நான்' என்கிற அகப்பற்றையும் 'எனது' என்கிற புறப்பற்றையும், இந்த வழியில் எளிதாகவே வெல்ல முடியும்!
கடவுள் என்கிற எஜமானர் வெளியே வந்து , உன்னை உள்ளே அழைத்துச் செல்வது தான் பக்தி மார்க்கம்! பற்று அழிய இதுவே நல்ல வழி!
(ஆதாரம் : சத்ய உபநிஷதம் | பக்கம் : 18)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக