தலைப்பு

புதன், 19 ஏப்ரல், 2023

பாபா வந்து கொண்டிருந்த காரை திட்டம் போட்டுக் காத்திருந்து வழிமறித்த இரண்டு பேர்!

நிர்கதியாகி அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இறைவன் பாபாவுக்கு சேவை செய்கிற போது பக்தருக்கு நேர்ந்த பல்வேறு வகையான ஆச்சர்ய அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...


தினமும் வேலை...மாலை பாபாவே கொடுத்த பிரசாத உணவு... இது தான் அன்றாடம் மீரா- சஞ்ஜெய்க்கு கிடைத்து வருகிற பாக்கியம்! அது 1969. 

ஒருநாள் கலிஃபோர்னியா மீரா , சஞ்ஜெய் குமார் மனைவியான மீராவிடம் "உங்களுக்குத்தான் நாள்தோறும் பாபா கையால் பிரசாதம் கிடைக்கிறதே! எனக்கும் வந்து கொடுக்க மாட்டாயா அந்த பாக்கியத்தை!" என்று கேட்கிறார்! கலிஃபோர்னியா மீரா கேட்டுக் கொண்ட இரண்டாம் நாளே... பாபா கையால் பிரசாதம் பெற்ற சஞ்ஜெய் மனைவி மீரா.. உடனே அதைக் கொண்டு வெளியே செல்வதை பாபா கவனித்துவிட... "எங்கே செல்கிறாய்?" என்று பாபா கேட்க.. "வெளியே பாபா!" என்று மீரா தெரிவிக்க.. எதற்காக செல்கிறார் மீரா என தெரிந்து கொண்டதால்...

"எதற்கு? இங்கேயே உட்கார்ந்து சாப்பிடு! வெளியே யாருக்கும் கொடுக்கக் கூடாது!சுவாமி உனக்கு கொடுத்த பிரசாதத்தை நீ மட்டும் தான் சாப்பிடணும்!" என்று சொல்லி சாப்பிட வைக்கிறார் பாபா! அப்போது தான் பாபா தினந்தோறும் தனது கையால் அளித்து வருகிற பிரசாதத்தின் மகிமையை மீரா முதன்முறையாக உணர்கிறார்!


ஒருமுறை ஷிர்டி பாபாவோடு நேரடி தொடர்பிலிருந்த காகா தீட்சித்தின் உறவினர்கள் பம்பாயிலிருந்து வந்திருக்க... அவர்களுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை! அனைவரும் சிறுவர்கள்! சமயம் கிடைக்கும் போதெல்லாம் மீரா- சஞ்ஜெய் அந்தக் குழந்தைகளோடு விளையாடுவர்! ஒருநாள் பிருந்தாவனத்தை அவர்கள் கூட்டி சுத்தம் செய்து கொண்டிருந்த போது அந்தக் குழந்தைகளின் தாய் அழும் குழந்தையை சமாதானப்படுத்த மீராவிடம் தருகிறாள்! சஞ்ஜெய் அதனை வாங்கி விளையாடுகிறார்... அதற்குள் அதன் அழுகை நிற்கிறது.. அந்த சமயம் பார்த்து பாபா சஞ்ஜெயை அழைத்தபடியே அவரை நெருங்கி வந்து.. 

"இது உன் குழந்தையா?" என்று கேட்கிறார்! "இல்லை பாபா, தீட்ஷித் அவர்களின் பேரன்" என்று சஞ்ஜெய் பதில் சொல்ல... பாபா அந்த பாக்கிய குழந்தையை தன் கையால் வாங்கிக் கொள்கிறார்.. உடனே அது பாபாவின் உடையில் சிறுநீர் கழித்துவிடுகிறது! உடையில் நதி நடையைப் போல் ஈரம்!

"ச்சீ கந்தா பச்சா (கெட்ட குழந்தை)!" என்று பாபா செல்லமாக சொல்லிவிட்டு... "குமார்! நீயே வாங்கிக்கோ உன் குழந்தைய!" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றுவிடுகிறார்!


பாபாவுக்காக வேலை செய்கிற போது தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாது மீராவுக்கும்... சஞ்ஜெய்க்கும்...

ஒருநாள் அவர்கள் இருவரும் தனை மறந்து வேலை செய்து கொண்டிருக்கும் போது பாபா அவர்கள் முன்னால் வந்து நிற்க... "பாப்ரே பாப் பாபா!" என்று அலறி விடுகிறார் மீரா! 

அதைக் கேட்ட உடனே "பாப்ரே பாப்! என்று சொல்லாதே! சாயிராம் என்று சொல்!" என்று சொல்லிவிட்டு அதையே குருமந்திரமாக மீராவுக்கு வழங்கிவிட்டு நகர்ந்து செல்கிறார் பாபா!


ஒரு நாள் ராஜ மாதாவின் கடைசி மகளுக்கு சிரோஹி ராஜ்குமாரரோடு நடக்க இருக்கிறது... ராஜமாதா சஞ்ஜெயையும் திருமணத்திற்கு அழைக்கிறார்! ஆனால் "குமார்! பிருந்தாவனம் விட்டு எங்கும் போகாதே! சாப்பாடு மற்ற எல்லாம் உனக்கு இங்கேயே கிடைக்கும்!" என்கிறார் பாபா! பாபா திருமணத்திற்கு சென்றுவிட..

பிருந்தாவனத்தில் மகாராஜா மகாராணி போல் வெகு சுதந்திரமாக வலம் வருகிறார்கள் மீரா-சஞ்ஜெய்!

பாபா அறிவுறுத்திய படி தினமும் வெங்கம்மா வராண்டா வாசலில் சயனம்... காலை சேவை, பிருந்தாவன பிரசாதம் என பிஸியாக இருக்கிறார்கள் இருவரும்!

இதில் வேடிக்கை விநோதங்கள் இல்லாமல் இல்லை! 


வெங்கம்மாவின் குறும்புப் பேத்தி நீரஜா பாபா போல் உடை அணிந்து அப்படியே தரிசனம் தருவது போல் நடந்து வருவார்... சஞ்ஜெய் "ஹே கிரிதர கோபாலா!" பாடுவார்... பாபா நீங்களும் பாடுங்கள் என சஞ்ஜெய் சொன்னால்... அதே பாடலை நீரஜா பாடி.. மீதி மறந்து போக... "இனி சுவாமி போகிறேன்!" என்று நாற்காலியை விட்டு எழுந்து விடுவாள் நீரஜா.. "பாபா விபூதி கொடு!" என்று சஞ்ஜெய் கேட்க...பாபா போலவே கையைச் சுற்றி "இந்தா சுவாமி விபூதி வாங்கிக்கோ!" என்று குறும்பு நீரஜா தர.. வேடிக்கை விநோதம் தடபுடலாக அரங்கேறும்... அதனை வெங்கம்மா, திருமதி தீட்ஷித், சேவாதளர் ஜவேரியின் மனைவி, வாட்ச்மேன் பஹதூர் என அனைவரும் கண்டு களிப்பர்!

பிறகு ராஜமாதா குடும்ப திருமணம் முடித்து பம்பாயிலிருந்து பாபா வந்து மீண்டும் மதராஸ் (சென்னை) செல்கிற போது "குமார்! நான் மதராஸ்'க்கு போகிறேன்! 5 நாளில் திரும்பி வந்துவிடுவேன்! ஒன்றும் கவலை வேண்டாம்!" என்று பாபா சொல்லி.. கொஞ்சம் பணத்தையும் கொடுத்துவிட்டு செல்கிறார்! 5 நாட்களுக்குள் பாபா கொடுத்த பணம் இருவருக்கும் (சஞ்ஜெய் - மீரா) செலவாகிவிடுகிறது...பாபா 7 நாள் ஆகியும் திரும்பி வரவே இல்லை... வெங்கம்மா புட்டபர்த்திக்கு கிளம்பிவிடுகிறார்.. திருமதி தீட்ஷித்தும் இல்லை! ராஜமாதா மட்டுமே இருந்தார்... அழ

அவரிடம் ஒரு பத்து ரூபாய் கேட்கின்றனர்... அவரும் அதை கொடுத்து அவர்களது சமையல் அறையிலேயே சாப்பிடச் சொல்கின்றனர்! 


ஒரு நாள் காலை 9மணி ஆன போதும் வெளி தரிசனத்துக்கு வரவில்லை... அந்த நாட்களில் பாபா தரிசனம் தராது போனாலும் யாரும் அதை ஒன்றும் நினைப்பதில்லை...ஆனால் இருவருமோ கவலைப்படுகின்றனர்! 

வாட்ச்மேன் பகதூர் வந்து பாபா இன்று சிட்டிக்கு போகிறபடியால் பொது தரிசனம் இல்லை என்று சொல்கிறார்! 

சஞ்ஜெய் பகதூரிடம் "பாபா! எந்த பக்கம் வழியாக செல்கிறார்?" என்று கேட்கிற போது...

"பாபா இரயில்வே கேட் பக்கம் போகமாட்டார்! நாயுடு வீட்டின் பக்கத்தில் தான் போவார்!" என்ற உடன் புரிந்த கொண்டபடி

"வா! வா! ரோட்டின் பக்கத்துக்கு போய் பாபாவின் காரை நிறுத்துவோம்!" என்றார் சஞ்ஜெய்!

அவர்களும் அங்கே செல்கிறார்கள்... கார் எதையும் காணவில்லை! 

அப்படியே ஷிர்டி பாபா மேல் ஒரு பஜன் பாடுகிறார்

"பாபா வரமாட்டாயா? உன் பக்தன் அழைக்கிறேன்! உன் காதில் விழ வில்லையா?" என்ற பொருளில் ஒரு பஜன் பாடல்!


ஷிர்டி பாபாவிடம் "பாபா ! எப்படியாவது சத்யசாயியை தரிசிக்க வேண்டும்! அதற்கு முன் ஒரு சிகப்பு நிற பேருந்து அனுப்பு! அதுவே பாபா வருவதற்கான கிரீன் சிக்னலாக இருக்கட்டும் " என்று இருவரும் வேண்டிக் கொண்டது போலவே ஒரு சிகப்பு நிற பேருந்து வருகிறது...மணி முற்பகல் 11றை தாண்டுகிறது... அது ஒரு பாலம்.. ஒரு வண்டியே ஒரு சமயத்தில் போக முடியும்! 

அந்த பேருந்தின் பின்னாலேயே பாபா கார் வருகிறது.. இருவருக்கும் ஒரே ஆச்சர்யம். ஒரே பரவசம்! 

காரை பார்த்ததும் கன்றைப் போல் துள்ளித் குதித்து ஓடுகின்றனர் இருவரும்...

பாபா உடனே கார் கண்ணாடியை இறக்கி...

"நல்ல குறும்புக்காரனாக இருக்கிறாயே! நீ சுவாமியின் காரை நிறுத்த இங்கேயும் வந்துவிட்டாயா?" என்று பாபா கேட்க.. "உங்க பாத நமஸ்காரம் வேண்டும்!" என்று சஞ்ஜெய் வேண்டுதல் விடுக்க... உடனே பாபா கார் கதவை திறந்து பாதத்தை வெளியே நீட்ட.. பாத நமஸ்காரம் செய்து கொள்கிறார் சஞ்ஜெய்! 

"குமார்! நீ பிருந்தாவனத்துக்கு போ! சுவாமி மாலை வருகிறேன்!" என்று பாபா சொல்ல .. கார் கிளம்பிப் புகை மூச்சுவிட... பேருந்து ஓட்டுநர் பாபா தரிசனம் பெற்ற ஆச்சர்ய மகிழ்வில் இருவரையும் ஏற்றி பிருந்தாவனத்தில் இறக்கி விடுகின்றனர்! 

பாபா அன்று நள்ளிரவு 12 மணிக்கு வருகிறார்!


வராண்டாவில் படுத்திருந்த இருவரோடும் பாபா பேசாமலேயே அறைக்குள் செல்ல..‌தூரத்து மரக்கிளையிலிருந்து பாபா அறையை கிளை வழி தரிசித்து மகிழ்கின்றனர்! இரவு தரிசனம் அது! அப்போது தனது அறையில் மிகவும் கோபமாகவும் தனது தலைமுடியை அப்படியே கைகளால் பிய்த்துக் கொண்டும் அங்கும் இங்கும் பாபா நடந்து கொண்டிருப்பதை இருவரும் காண்கின்றனர்! பாபா ரூபம் மிகவும் உக்கிரமாக இருக்கிறது! 

இருவரும் பேச்சு மூச்சின்றி வராண்டாவுக்கு வந்து மீண்டும் படுத்துக் கொள்கின்றனர்!


மற்றொரு நாள் அது போலவே ஒரு ராத்திரி தரிசனம் காண்கிற போது 8 கைகள் கொண்ட துர்கா ரூபத்தில் (அஷ்ட புஜ துர்கை) இருவரும் ஒளிந்தபடியே பாபாவை கண்டு ஆச்சர்யத்தில் உறைகின்றனர்! பாபா தனது அறைவிட்டு வெளியே வந்து தண்ணீர் குழாயடியில் நிற்க... பாபாவை ஒரு பிரகாச முகம் கொண்ட துர்க்கையாக தரிசிக்கின்றனர்! 5 விநாடிகள் நீடித்த காட்சி அது! 

இப்படி இரு வித தரிசனமும் பெறுகிறார்கள்! 

அப்போது பாபா அவர்களின் அருகே வந்து ஏதோ தெலுங்கில் பேசிவிட்டுப் போகிறார்... பிறகே அதற்கான அர்த்ததை அவர்கள் தெரிந்து கொள்கின்றனர்...!

"அதற்குத்தான் உங்களிடம் சொன்னேன்! ஜாக்தே ரஹோ (தூரமாகவும் விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும்!"

என்றே பாபா சொல்லிவிட்டு நகர்ந்திருக்கிறார்!


(ஆதாரம் : ந பூதோ ந பவிஷ்யதி | பக்கம்: 79 - 83 | ஆசிரியர் : சன்யாசினி மீரா சஞ்ஜெயானந்த்) 


பாபாவின் ஸ்தூல அருகே இருப்பினும் ஆன்மீக விழிப்புணர்வோடு இருந்தால் மட்டுமே ஆன்மீகப் பேரானந்தத்தையும் பாபாவின் உண்மை ரூபத்தையும் உணர முடியும்! தூங்கிக் கொண்டிருப்பவர்கள் அரண்மனையில் தூங்கினாலும், சிறைச்சாலையில் தூங்கினாலும், ஏன்?! சுடுகாட்டிலேயே தூங்கினாலும் எல்லாம் ஒன்றுதான்! ஆக... ஆன்ம விழிப்புணர்வே எல்லாவற்றையும் விட நம்மைப் போன்ற பக்தருக்கு அத்தியாவசியம்!


  பக்தியுடன் 

வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக