தலைப்பு

வியாழன், 17 பிப்ரவரி, 2022

வருங்காலத்தில் நிகழப் போவது பற்றி சுவாமியின் தீர்க்க தரிசன தெய்வத் திருவுரை!

1976 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டின் உதகமண்டலத்தில் நிகழ்ந்த கோடைகாலப் பயிற்சி முகாமின்போது, சுவாமி இந்திய வரைபட வெள்ளி மெடாலியன் சிருஷ்டித்த பிறகு அவர் பேசிய நெருங்கி வரும் எதிர்காலம் எனும் ஒளிர்காலம் குறித்தான தீர்க்க தரிசன திருவுரை தமிழில் சுவாரஸ்யமாய் முதன்முறையாக இதோ...


🎙️சுவாமி பேசிய திருவுரையிலிருந்து...

 "சுவாமி, ஆரம்பத்திலிருந்தே, தெய்வீகத்தையும் தெய்வீக சக்தியையும் உலகம் முழுவதும் பரப்புவதற்கான திட்டத்தை வைத்திருந்தேன். அதன் பொருட்டு கல்வி நிலையங்களை நிறுவி, கல்வி என்ற பெயரில் மாணவர்களை இங்கு வரவழைத்துள்ளேன். இந்த ஒலி அலைகளும் மின் அலைகளும் ஜோதிர் சக்தியும் எதிர்காலத்தில் உங்களை கண்டுகொள்ளும். சுவாமி ஆடிட்டோரியத்தில் பேசிக் கொண்டிருக்கும் அதே சமயத்தில் ​​மந்திரத்திலும், சுவாமி ஆடிட்டோரியத்தில் இருக்கும் அதே சமயத்தில்  ​​வகுப்பறையிலும் அவரது ஜோதிர் சக்தியின் மூலம் தரிசனம் செய்யலாம்.!

இது எளிதானது, பாதுகாப்பானது ஆனால் முக்கியமானது என்னவெனில் இது நீங்கள் அவசியம் அனுபவிக்க வேண்டியது. நீங்கள் அனைவரும் அதை அனுபவிப்பீர்கள், நீங்கள் அனைவரும் ஆனந்திப்பீர்கள் . நீங்களும் மற்றவர்களை அறியச்செய்து செய்து பரப்புவீர்கள். உங்கள் இதயத்தை விரிவுபடுத்துவீர்கள். இதுவே நமது  நிறுவனத்தின் முதன்மையான குறிக்கோள் மற்றும்  நோக்கமாகும்!


பழங்கால பழக்கவழக்கங்கள், புராதன பொக்கிஷங்கள், பழங்கால மரபுகள் மற்றும் அனைத்து வேத உண்மைகளை மொத்த உலகின் முன்பாக, புத்துயிர் அளிக்கும் வகையில் ஒரு மாபெரும் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளேன் என்றும் நான் உறுதியளிக்கிறேன். நாம்  வெற்றி பெறுவோம் என்பதில் உங்களுக்கு எந்த சந்தேகமும் தேவையில்லை. வெற்றி நமக்கு கட்டுப்பட்டது. அவநம்பிக்கையின் சந்தேகங்களுக்கு உங்களைக் கொடுக்காதீர்கள். டவுட்டிங்-தாமசாக சந்தேகம் கொள்ள  வேண்டாம். மிக விரைவில் வெற்றியின் புனித சங்கை  ஒலிக்கச் செய்வோம், இது நிச்சயம், இது நிச்சயம்... 


பிரேமையின்  வடிவங்களே ! எதிர்காலம் என்ன என்பது உங்கள் புரிதலுக்கு அப்பாற்பட்டது ஆனால் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை என்னால் பார்க்க முடிகிறது. முழு உலகமும் என் காலடியில் இருக்கும் ஒரு காலம் வரும். எனது உண்மையான தெய்வீகத்தை, எனது உண்மையான இயல்பைப் புரிந்துகொண்டு உலகம் முழுவதும் மகிழ்ச்சியடையும் ஒரு காலம் வரும். என் மகிமையைத் தானே பரவ விடாமல் பெரும் முயற்சியால்  என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டுவருகிறேன். திடீரென்று... உலக மக்கள் அங்கீகரிக்கும் ஒரு நாள் நிச்சயம் வரும். ஸ்வாமி என்ன, அவருடைய மகிமை என்ன, அவரது மகத்துவம் என்ன என்பதை அறிந்துகொண்டு அனைவரும் லட்சக்கணக்கில் திரண்டு வருவார்கள்!


உலகம் மிக விரைவில் ஒரு பெரிய பிரசாந்தி நிலையமாக மாறும். விலைமதிப்பற்ற பொருளாக இருக்கும் வைரம் பலவிதத்தில் பட்டை தீட்டப்பெறும். நீங்கள் எவ்வளவு அதிகமாக பட்டை தீட்டுகிறீர்களோ , அவ்வளவு அழகாக மாறி ஒளிரும். ஒருபடரும் தன்மையுள்ள கொடியைப் போலவும் தான், வெட்டப்பட்டு நேராக்கப்படும்போது  அது மிகவும் அழகாக மாறும்.சாயியின் முலமாக, அவரது பல்வேறு நிறுவங்களின் மூலம் பரவி வரும் இந்த மகிமையை ஏற்றுக் கொள்ள இயலாத  சில மக்கள் உள்ளனர். நமது அமைப்புக்களில் , மக்களுக்கு உள்ள மதிப்பினைச்  சீரழிக்கவும், தவறாக வழிநடத்தவும் கூட முயற்சிக்கின்றனர் . ஆனால், இந்த முயற்சிகள்  பலிக்காது என்பதை நிரூபியுங்கள். எவ்வளவு அதிகமாக துஷ்டப் பணி /பிரச்சாரம்  செய்கிறார்களோ,அதற்க்கு நேரெதிராக  அவ்வளவு பெருமையும், மகத்துவமும், வேகமாகவும்  வெகுதூரம் பரவும் என்பதில் உறுதியாக இருங்கள்!"

- மேற்கூறிய சுவாமியின் தீர்க்க தரிசன பெருஞான மொழிகள் ஊட்டியில் சுவாமி மாணவர்களோடு சிருஷ்டி பதக்கத்தை விளக்கி.. அதைத் தொடர்ந்து சுவாமி பேசிய சிலிர்க்கும் திருவுரையே -

(ஆதாரம்: அல் ட்ரக்கர், லவ் இன் ஆக்ஷன், ஐரோப்பாவின் சாயி அமைப்புகளின் கூட்டத்தின் நடவடிக்கைகள், ஹாம்பர்க், 12-15 மே, 1989 என்ற புத்தகத்திலிருந்து & பாபா: சத்ய சாய் பாகம் 2, ரா.கணபதி, பக்கம் 85)

தமிழில் தொகுத்தளித்தவர்: முனிஷ்குமார் பிரகாசம், சிவகாசி


சுவாமியின் திருச்சங்கல்பம் மிக மிக தீர்க்கமானது... துல்லியமானது... தனித்தன்மையானது... தெளிவானது! சுவாமியின் திருச்சங்கல்பம் மட்டுமே பூமியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது! மனித தலையீடல்களுக்கும்/ குறுக்கீடுகளுக்கும்/ யூகங்களுக்கும் / கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதே சுவாமியின் திருச்சங்கல்பம்... அதுவே நிகழ்ந்தது - நிகழ்கிறது - நிகழும்! உலகமே சுவாமியை இறைவன் என உணர்ந்து கொண்டாடும் பிரேமப் பொழுதுகள் விரைவில் வெளிச்சப்படும்!! மூன்று திருஅவதாரங்களையும் உலகம் உணர்ந்து உய்யும் காலமும் வந்து கொண்டிருக்கிறது... அப்படி உய்வதால் சத்யயுக மழைப் பெய்யும் காலமும் இனிதே கனிந்து கொண்டிருக்கிறது...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக