தலைப்பு

சனி, 26 பிப்ரவரி, 2022

பக்தி என்னும் ஏணியின் உச்சிப்படி -மதுர பக்தி

பக்தி என்னும் நதிகள் பல. ஆயின் அவை எல்லாம் இறுதியில் இறைவன் என்ற கடலில் கலக்கத் தான் தமது பயணத்தைத் தொடர்கின்றன. அறுவகை பக்தியை பட்டியலிடும் பகவான், ராதையை உதாரணம் காட்டி , மதுர பக்தியின் மேன்மையே விளக்குகிறார்... 


ஆண்டவனை துதிக்க ஆறு வகை பக்தி:

பக்தியில் ஆறுவகை இருப்பதாக பகவான்  நமக்கு சுட்டிக்  காட்டுகிறார். அவையாவன..

1. சாந்த 

2. சக்ய

3. தாஸ்ய

4.  வாத்சல்ய

5. அனுராக

6. மதுர.. பக்தியாகும்

இவற்றில் மதுரபக்தியே தலையாய இடத்தில் இருக்கிறது. அது உயர்ந்த பரமானந்தத்தை நல்குகிறது.


நாம் அன்றாட வாழ்வில் உபயோகிக்கும் பால், தயிராக மாறுகிறது. தயிரைக் கடைந்தால் வெண்ணை உருவாக, வெண்ணையைக் காய்ச்ச, அது நெய்யாகி மணக்கிறது. நெய்யே பாலின் இறுதி வடிவம். அதுபோல மதுர பக்தியே பக்திப் பயணத்தில், இறுதியான வடிவம் ஆகும். மதுரபக்தியை நாம் சுவைத்த பிறகுவே றெங்கும் செல்லவேண்டாம். அதுவே பூரணமானதும், பிரேமையைக் கொண்டதுமாகும்.

மனிதனின் இயல்பான அன்பினால் அனைத்துப் உயிர்களிலும் இறைவனைக் கண்டால், அவனது வாழ்வென்னும் மரத்தில் மதுரமான கனிகள் தோன்றும். அக் கனிகளின் தோல் மற்றும் விதைபோன்ற , அஹங்கார/ மமகாரங்களை நீக்கினால், கனியின் இனிப்புச் சுவையைருசிக்கலாம். 


🌹ஸ்ரீ கிருஷ்ணருக்கு பிரியமான ராதா மதுர பக்திக்கு ஒரு எடுத்துக் காட்டு:

அவர் ஆசை மற்றும் துவேஷம் என்பதை உடுத்திக் களையும் ஆடையாகவும், ஐம்புல சுகங்களை  கழற்றி எறியும் மாலையாகவும் அணிந்திருப்பதாகக் கூறியுள்ளார். அதாவது இதன் தாக்கங்கள் எதுவும் தன்னைத் தீண்டாது இறைவனையே நினைத்திருந்தாள்! அவளது பரிபூரண சரணாகதியையும், அன்பையும் அறிந்திருந்த  ஸ்ரீகிருஷ்ணர் அவளை முழுமையாகத் தன்னுடன் இணைத்துக் கொண்டார்.

ஆதாரம்: Bhagavan Sri Sathya Sai Baba, Summer Course, 9-6-1978

தமிழில் தொகுத்தளித்தவர்: திரு குஞ்சிதபாதம், நங்கநல்லூர் 


🌻பக்தியின் முழுமை மற்றும் பூரணம் மதுர பக்தியின் விளைவாக ஒருவருக்கு கிட்டும் என்ற பகவானின் இந்த தெள்ளிய வழிகாட்டுதலில் நாமும் பயணித்து , பக்தியின் முழுமையை அடைவோமாக.🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக