இறை பக்தியே இல்லாத ஒருவருக்கு ஏற்பட்ட ஆன்மீக கனவு அனுபவங்கள் பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தவையாக அவரின் வாழ்வையே சுவாமி பக்தியில் திசை திருப்பிய அனுபவங்கள் சுவாரஸ்யமாக இதோ...
4/9/1989 அன்று சுவாமி பக்தர் பார்த்தசாரதி மூலமாக ஒருவரை சந்திக்கிறார் நூலாசிரியர். அவர் பெயர் ராமமூர்த்தி. அவரின் தந்தை ஷிர்டி சுவாமி பக்தராக இருந்தவர். ஷிர்டி சுவாமி அஷ்டோத்திரம் சொல்லியே தனது இறுதி மூச்சை சுவாமி பாதத்தில் கலந்தவர்... எப்பேர்ப்பட்ட பக்தி! ஆனால் ராமமூர்த்தி தனது வாழ்வில் நடந்த விரக்தி சம்பவங்களால் இறை நம்பிக்கை இழக்கிறார்... 1967ல் ஜோதிடம் கற்று.. 22 ஆண்டுகளாக அதையே தனது பணியாக செய்கிறார்.. நூலாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தவர் திடீரென ஒரு டைரியை பிரிக்கிறார்... அதிலிருந்து அவர் பதிவு செய்த அமானுஷ்ய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்!
1983 அக்டோபர் 4 ஆம் தேதி ராமமூர்த்தி ஒரு கனவு காண்கிறார். அதில் அவர் உடம்பிலிருந்து வெளியேறி சவமாக நீட்டிப் படுத்திருக்கும் உடலை காண்கிறார். ஆன்மா பேசுகிறது.. அதோ பார் என்கிறது... ஆம் அந்த ராமமூர்த்தி உடலின் அருகே புஸ் புஸ் தலையோடும் காவி உடையோடும் சுவாமி படுத்திருக்கிறார்.. அது சுவாமி என்று அப்போது அவருக்கு தெரியாது.. சுவாமியின் இதயப் பகுதியிவிருந்து ஒரு நீல நிற ஒளி அவரின் உடலில் பாய்கிறது.. "இது தான் சத்ய சாயி பாபா.. அவர் வயிற்றிலிருந்து என்ன தோன்றுகிறது பார்!" என்கிறது ஆன்மா. 4.05 க்கு ஆரம்பித்த கனவு .. இருபது நிமிடங்கள் நிகழ்கின்றன...நிஜ பொழுதாகவே கனவுப் பொழுது இதயத்தில் பதிவாகிறது...
அதேநாள் விடிகிறது... தேநீர் அருந்த ஒரு கடைக்குச் செல்ல... நண்பர் ரமேஷிடம் இருந்து சுவாமி படம் ஒன்றை எதேர்ச்சையாகப் பார்த்து வாங்கி வந்து வீட்டில் மாட்டி வைக்கிறார்! பக்தி லேசாக அவர் இதயத்தில் பரவ ஆரம்பிக்கிறது. 1989 ல் ஏப்ரல் 6 ஆம் தேதி சுவாமியை வொயிட் ஃபீல்டில் தரிசிக்கிறார்.. கனவில் தரிசித்த அதே சுவாமி.. திருப்படத்தில் தரிசிக்கும் அதே சுவாமி...இதனை அடுத்து அடுத்த நான்கு நாட்களிலும் வலது பக்க இதயத்தில் கடுமையான வலி ஒவ்வொரு நாளும் அதிகாலை 4.30 க்கு எடுக்கிறது!
ஆன்மீக இதயம் வலதுபுறம் தான் இருக்கிறது என்கிறார் பகவான் ஸ்ரீ ரமண மகரிஷிகள். ஏப்ரல் 11 ஆம் தேதி.. அதே போல் விடியற்காலை பிரம்ம முகூர்த்தம்.. நிஜ பொழுதாய் ஒரு கனவுப் பொழுது...
சுவாமி அவர் முன் தோன்றி அவரின் வலி மிகுந்த இதயப் பகுதியை தனது தெய்வத் திருக்கரத்தால் தீண்டுகிறார்... ஆழ்நிலை தியானத்திற்குள் செல்கிறார் ராமமூர்த்தி.
அறுவை சிகிச்சை நிகழ்த்துகிறார் சுவாமி.
சரியாக 11 நாட்ளுக்குப் பிறகு சுவாமி மீண்டும் கனவில் தோன்றி "பங்காரு உன் உடம்பு எப்படி இருக்கிறது?" எனக் கேட்கிறார்! "வலி குறைந்திருக்கிறது.. ஆனால் சோர்வாக இருக்கிறேன் சுவாமி!" என்கிறார். "இன்னும் 22 நாட்களுக்கு அப்படித்தான் இருக்கும்" என்கிறார் சுவாமி. "நீங்கள் கூடவே இருக்கிறீர்கள்.. எனக்கெந்த கவலையும் இல்லை சுவாமி!" என்கிறார் அவர். "அலாக" (அப்படியா!) என புன்னகை ததும்பும் கருணையோடு சுவாமி தனது திருக்கேசத்தை தாழ்த்தி அவரது நாவில் விரல்களால் அமுதத்தைப் பாய்ச்சுகிறார்...உச்சந்தலை சுழல்கிறது..
ஆன்மீக பரவசம் ஏற்படுகிறது! *இறை பக்தியே இல்லாதவர்க்கு கனவு வழி சுவாமியே இறைவன் என உணர வைத்து ஆன்மீகப் பரவசமும் ஏற்படுத்துகிறார் சுவாமி...
(ஆதாரம் : அற்புதமும் ஆன்மீகமும் - 3 / பக்கம் : 118 / ஆசிரியர் : திருமதி சரோஜினி பழனிவேலு)
உச்சந்தலை சுழற்சி என்பது சஹஸ்ரஹாரம் எனும் ஏழாவது சக்கரத்தின் ஆன்மீக செயல்பாடு.. சுழற்சி மட்டுமல்ல ஆன்மீக பெருவிழிப்பு (Enlightment) தந்து அதை திறக்கச் செய்வதும் சுவாமியே! இதன் முன்னோட்டமே பூர்வ புண்ணியத்தால் பக்தர் ராமமூர்த்தி பெற்றிருக்கிறார் என்பதை உணர முடிகிறது! ஆன்மப் பெருவிழிப்பே விழிப்பு நிலையின் உச்சம்... அதை சுவாமி வழங்கிடவே சுவாமியிடம் நாம் சரணாகதி அடைய வேண்டும்! Enlightment'டே தரும் பரப்பிரம்ம சுவாமியிடம் வீட்டின் tube light எரியவில்லை என அர்ப்பமாய் ஏன் குறை சொல்லி முகம் வாடிப்போக வேண்டும்?
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக