தலைப்பு

வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

நான் பாபாவை ஏன் நம்புகிறேன்? - Dr. தேவி பிரசாத் ஷெட்டி


Dr. தேவி பிரசாத் ஷெட்டி அவர்கள் உலக புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணரும், 21 தொடர் மருத்துவ மையங்களை கொண்ட 'நாராயணா ஹெல்த்' (முன்பு 'நாராயணா ஹ்ருதயாலயா' என அறியப்பட்டது) நிறுவனங்களின் தலைவரும் நிவாக இயக்குனரும் ஆவார். இவர் இதுவரை 15,000க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார். இவருக்கு, இந்திய அரசால், 2004ல் பாரதத்தின் நான்காவது உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும், 2012ல் பாரதத்தின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷணும்  வழங்கப்பட்டது... 

ஶ்ரீ சத்ய சாய்பாபாவின் தீவிர பக்தன் நான். பாபாவை பற்றி, என் மைத்துனர் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் கூறி இருந்தார்.

நான் பாபாவை நேரில் சந்தித்தபோது, பெங்களூர் புற நகர் பகுதியில் ஒரு இருதய மருத்துவமனை கட்டவேண்டும் என்ற எனது எண்ணத்தை,  அவரிடம் நான் சொல்லும் முன்பே அவர் அதை அறிந்திருந்தார். பெங்களூர் புற நகர் பகுதியில் இது நடப்பது மிகவும் சந்தேகமே. ஆனால் நான் அவரை சந்தித்த போது, ‘அந்த நகரம் உன்னிடம் வரும்’ என்று என்னிடம் கூறினார். ஆம்! அது உண்மையில் என்னிடம் வந்தது.


பாபா ஒரு முறை மோதிரம் ஒன்றை எனக்கு அளித்திருந்தார். அறுவை சிகிச்சை செய்யும் நேரம் தவிர, எப்போதும் அதை நான் அணிந்திருப்பேன். ஏனெனில்,  அது அவர் எப்போதும் என்னுடன் இருப்பதை எனக்கு உணர்த்தியது. பாபாவின் மிகவும் அற்புதமான அதிசயத்தை, என் மைத்துனர் கண்டிருந்தார். அவர் பாபாவின், நீண்ட நாட்களாக நினைவிழந்த நிலையில் இருந்த சகோதரிக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்தார். அச்சமயம்  பாபா அங்கு வந்த போது, அவர் உடனே எழுந்து உட்கார்ந்து,  சில நிமிடங்கள் பாபாவிடம் பேசி விட்டு, மறுபடியும் பழைய நிலைக்கு சென்று விட்டார். இதற்கு மருத்துவ ரீதியாக என்ன விளக்கம் கொடுப்பீர்கள்? 
இதைப்போல என் வாழ்க்கையிலும் நிறைய அதிசயங்கள் நடந்திருந்தன. சிகிச்சை பெற்று வந்த நிறைய நோயாளிகள், பாபாவின் ஆசி பெற்று இயல்பு வாழ்க்கைக்கு மாறியுள்ளனர். இதை எப்படி விளக்குவீர்கள்? அறிவியலுக்கு அப்பார் பட்டவர் பாபா. எங்கள் மருத்துவமனையில், நாள் ஒன்றுக்கு முப்பத்தாறு இருதய அறுவை சிகிச்சைகள் செய்கின்றோம். மூளைக்கு செல்லும் இரத்தத்தினை துண்டித்து, இருதயத்தை செயலிழக்க செய்யும் போது நோயாளி, உண்மையில் இறந்து போன நிலைக்கு சென்று விடுவார். இது போல செய்யும் ஒவ்வொரு முறையும், அந்த நோயாளி இவற்றை தாங்கி கொண்டு உயிர் பிழைப்பாரா, இல்லையா என்று கூட எனக்கு தெரியாது. ஏதேனும் ஒரு மருத்துவர், நான் விளையாடுகிறேன் என்று எண்ணலாம். இதை நீங்கள் ஒரு மருத்துவரோ அல்லது விஞ்ஞானியிடம் இருந்தோ கேட்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, ஆனால் எனது கைகள் பாபாவின் கட்டுப்பாட்டில் உள்ள இடுக்கிகள் ஆகும். 

"நம் வாழ்க்கையே பாபாவின் செய்தி ஆகும்." 

ஆதாரம்: 2008ல் ஆங்கில நாளிதழான "டைம்ஸ் ஆப் இந்தியா" வில் வெளிவந்த கட்டுரையிலிருந்து.


(என்னிடம் பாபாவின் அற்புதமான புகைப்படம் ஒன்று இருக்கிறது. அதாவது பாபா ஸ்டெதாஸ்கோப்பை வைத்து நோயாளிகளை பரிசோதித்து போன்று இது மிகவும் அரிதான படம்.  எங்களுடைய நிறுவனத்திற்கு வந்தால் நீங்கள் அதை பார்க்கலாம் என்று திரு டாக்டர் தேவி ஷெட்டி அவர்கள் ஒரு சாயி அன்பரிடம் குறிப்பிட்டிருக்கிறார். அவர் குறிப்பிட்டு அந்தப் படம்  மேல உள்ள வீடியோவில் நான்கு ஐந்து முறை வருகிறது தவறாமல் பார்க்கவும்.) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக