தலைப்பு

புதன், 1 ஏப்ரல், 2020

சாயி பகவானின் அளப்பரிய கருணா on கொரானா

--பிரசாந்தி செய்தி,  மார்ச் 31, 2020.

பகவானால் வகுக்கப்பட்ட அற்புதமான பாதையில், மக்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ள சமயத்தில்,  அனந்தபூர் மாவட்டத்தில் அமைய உள்ள 14 'தனிமைப்படுத்தும் மையத்திற்கு'  தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்கள்  ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையின் சார்பில் நன்கொடையாக வழங்கப்படும் எனும் தகவலை மாவட்ட ஆட்சியர் திரு. கந்தம் சந்துருடு அவர்களிடம், ஸ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ரத்தினாகர் அவர்கள் தெரிவித்தார். ஒவ்வொரு மையமும் 100 படுக்கை வசதிகள் கொண்டது.

இந்த புனித நோக்கத்திற்காக மத்திய அறக்கட்டளை ரூ. 1.80 கோடிகள் செலவு செய்ய உள்ளது. இந்த உன்னத உதவிக்காக, மாவட்டத்தின் சார்பாக, அனந்தபூர் மாவட்ட ஆட்சியர் மத்திய அறக்கட்டளைக்கு நன்றி தெரிவித்தார்.

வழங்கப்பட உள்ள மருத்துவ உபகரணங்களில் சில:
1. மறுபயன்பாட்டு ரப்பர் கையுறைகள்,
2.   ஒற்றை பயன்பாட்டு கையுறைகள்,
3. தலை கவசம் (கவர்கள்),
4. சுவாசக் கருவிகள்,
5. பிபிஇ (PPE) கிட்,
6. கூர்மையான கொள்கலன்கள்,
7. மருத்துவ கழிவுப் பைகள், 8. பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுக்கான சேகரிப்பு கொள்கலன்கள்,
9.  ஒற்றை பயன்பாட்டு துணிகள்,
10. வெப்பமானிகள் (GUNS), 11. மருந்து தெளிப்பு இயந்திரங்கள்,
12. ஒற்றை பயன்பாட்டுத் திரைகள் (4x8 அடி),
13. பயோமெடிக்கல் கழிவு மேலாண்மை,
14. ஒற்றை பயன்பாட்டு பொதுக் கழிவு மேலாண்மை, 15. அறுவை சிகிச்சை முகமூடிகள்.

எதிர்காலங்களிலும், தேவை ஏற்பட்டால் உதவிகள் தொடரும் எனும் உறுதியை திரு. ரத்தினாகர் அவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார். ஏற்கனவே ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கேரள மாநில சத்ய சாயி நிறுவனங்களால் லட்சக்கணக்கான முகக்கவசம் விநியோகிக்கப்பட்டுள்ளன. அதுபோக முழு மருத்துவ உள்கட்டமைப்பு, நிலையான மருத்துவமனைகள் மற்றும் மொபைல் மருத்துவமனைகள் மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குழந்தையின் அழுகையை பொறுக்க மாட்டாமல் ஷண நேரத்தில் தாய் ஒடி வந்து தூக்கி குழந்தையின்  அழுகையை நிறுத்துவது போல, மனிதகுலம் மிகுந்த துயரிலிருக்கும் போது தம் பொறுப்புணர்ந்து எழுச்சியோடு  செய்யும் சேவையே மகேசன் சேவை என்கிற நம் ஸ்வாமியின் அறிவுறுத்தல்படியும்,

 ஸ்வாமி நம் மீது  தன்னலமற்ற சேவையின்பால்  கொண்ட   நம்பிக்கையை,
 ஶ்ரீ சத்ய சாயி மத்திய அறக்கட்டளை மேலும் ஊர்ஜிதமாக்கி,  சுய கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கத்துடன் அனைத்து சேவை செயல்பாடுகளிலும், ஶ்ரீ சத்ய சாயி சேவா நிறுவனங்கள்  நாட்டில் அனைவருக்கும்  ஒரு முன்னோடியாக திகழ்கிறது என்று மாவட்ட கலெக்டர் மற்றும் உள்ளூர் மாவட்ட பிரமுகர்களின்  பார்வையும் பாராட்டுக்களையும் நம் கலியுக நடமாடும் தெய்வம் ஶ்ரீ சத்ய சாயி நாதனின் பாதாரவிந்தங்களிலேயே சமர்ப்பணம் செய்யப்பட்டது.

சர்வ தர்ம ப்ரிய தேவா,
சத்ய சாயி தேவா

ஜெய் சாய்ராம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக