தலைப்பு

சனி, 18 ஏப்ரல், 2020

உலகப்புகழ்பெற்ற இரைப்பை குடல் அறுவை சிகிச்சை நிபுணர் 'பத்மபூஷன்' டாக்டர். ரங்கபாஷ்யம் அவர்களின் அனுபவங்கள்!


சாய்ராம்!  சுவாமியின் அன்பிற்குரிய பழம்பெரும் பக்தரும், இரைப்பை குடலியல் துறையில் உலக அளவில் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணரும்,  டாக்டர் பிசி ராய்   பத்மபூஷன் விருதுகளை பெற்றவருமான, பத்மபூஷன் Dr. இரங்கபாஷ்யம் அவர்களின் ஆத்மார்த்த அனுபவங்கள்... 

சாய்ராம்!  சுவாமியின் அன்பிற்குரிய பழம்பெரும் பக்தர் டாக்டர் ரங்கபாஷ்யம் ஆவார். இந்தியாவில் முதல் முறையாக இரைப்பை குடல் அறுவை சிகிச்சை (Gastroenterology) துறையை தொடங்கியவர். அது மட்டுமல்லாமல் இந்த துறையில் பட்ட மேற்படிப்பை நாட்டிலேயே முதல்முறையாக ஏற்படுத்திய பெருமைக் குரியவர் இவரே. 2002-ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது பெற்றார். மேலும் மருத்துவத் துறையின் உயரிய விருதான டாக்டர் பி.சி.ராய் விருது உள்பட பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். 

மேலும் இவர் அரசு ஊதியம் பெறாமல் சென்னை மருத்துவக் கல்லூரியில் கௌரவப் பேராசிரியராகவும், அரசு பொது மருத்துவமனையில் இரைப்பை-குடல்-அறுவைச் சிகிச்சை துறைத் தலைவராகவும் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகப் பணியாற்றியவர். சென்னை அரசு பொது மருத்துவமனையில் "வார்டு எண் 10' என்பது (இரைப்பை-குடல் அறுவைச் சிகிச்சைப் பிரிவு) இன்றளவும் டாக்டர் என்.ரங்கபாஷ்யத்தின் வார்டு என இன்றும்கூட குறிப்பிடப்படுகிறது.


இவர்களின் ஆத்மார்த்த அனுபவங்களை அனைவரும் தவறாமல் கேட்டு ஆனந்தம் அடையுங்கள்.. ஒரே பாகம்..
👇👇


Source: ரேடியோ சாய் (http://www.radiosai.org/program/SearchProgramme.php)
(RST 168)
ஒலிபரப்பப்பட்ட மாதம்/வருடம்: ஆகஸ்ட் 2013

2 கருத்துகள்:

  1. மெய் சிலிர்த்தேன்.... பாபாவின் மகிமையை கண்டு.... 🙏🙏

    பதிலளிநீக்கு
  2. Blessed to hear the divine experiences of our bhagawan through The great soul Dr. Ranga Bashyam. I was lucky to be treated by Dr. Ranga Bashyam in 2002, Chennai. It was all because of Swami's blessings only. Thankyou doctor and Swami.

    பதிலளிநீக்கு